சர்ப்பத்தின் வித்து The Serpent’s Seed Jeffersonville, Indiana, USA 58-09-28E 1. தேவனே, மகத்தான வல்லமையுள்ள தேவனே, எல்லாவற்றையும் தமது ஆவியின் வல்லமையினால் உண்டாக்கினவரே, தமது ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை கொண்டு வந்தவரே, நீதியுள்ள அவர், நீதியில்லாத பாவிகளாகிய எங்களுக்காக இலவசமாக மரித்ததினால் நாங்கள் மீண்டும் தேவனுடைய மகத்துவமான ஐக்கியத்திலே இணைக்கப்பட்டு இருக்கிறோம். ஆசீர்வதிக்கப்பட்ட வார்த்தையில் நாங்கள் போதிக்கப்பட்டுள்ளபடி, உலகத்தோற்றத்துக்கு முன்பே நாங்கள் அவருடன் ஐக்கியம் கொண்டிருந்தோம். அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவபுத்திரர் எல்லோரும் கெம்பீரித்தார்கள். உலகம் தோன்றுவதற்கு நீண்ட காலம் முன்பு. ஆட்டுக்குட்டியானவர் அடிக்கப்பட்டதும் அதே காலம் தான் என்று நாங்கள் அறிவோம். தேவன் தமது மகத்தான சிந்தையில், நாம் இயேசுவின் மூலம் இரட்சிப்படைந்ததனால் ஆர்ப்பரித்து களிகூருவதைக் கண்டார். இன்றிரவு எங்களுக்கு அந்த மகத்தான தெய்வீக மகிமையின் முன்ருசித்தல் மாத்திரமே உள்ளது; அந்த மகிமை அவருடைய இரண்டாம் வருகையின் போது வெளிப்படும். அப்பொழுது எல்லா வியாதிகளும் துயரமும் நீக்கப்படும், நாங்கள் அவருடைய சொந்த மகிமையின் சரீரத்துக்கு ஒத்த ஒரு சரீரத்தைப் பெற்றிருப்போம். ஏனெனில் அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரை தரிசிப்போம். இங்கே எங்கள் கைகள் சுருங்கிப் போவதையும், எங்கள் தலைமயிர் நரைப்பதையும், தோள்கள் தொங்குவதையும் நாங்கள் காணும் போது, நாங்கள் மரிக்க வேண்டியவர்கள் என்றும், இப்பொழுது எங்கள் தலைகள் குனிந்துள்ள அந்த புழுதிக்கு - நாங்கள் எங்கிருந்து வந்தோமோ அதே இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறோம் என்றும் உணருகிறோம். ஆனால் கர்த்தராகிய தேவனே, நீர் தேவன் என்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாய் நாங்கள் கடைசி நாட்களில் உயிரோடெழும்புவோம். அவ்வாறு நீர் வாக்களித்திருக்கிறீர். அதை நாங்கள் விசுவாசிக்கிறோம். 2. நாங்கள் பயபக்தியோடு எங்கள் விசுவாசத்துடன் இன்றிரவு உமது சமுகத்தில் தைரியமாக நின்று கொண்டிருக்கிறோம். ஏனெனில் நாங்கள் அவ்விதம் செய்ய வேண்டுமென்று இயேசு கட்டளையிட்டிருக்கிறார். நாங்கள் செய்த எந்த நற்கிரியையின் அடிப்படையிலும் நாங்கள் வரவில்லை; நாங்கள் நன்மை எதுவும் செய்ததில்லை. ஆனால் எங்களுக்கு அளிக்கப்பட்ட கிருபையினாலே இந்த பொக்கிஷத்தை சுதந்தரித்துக் கொண்டிருக்கிறோம் என்று அறிக்கை செய்து தாழ்மையுடன் வருகிறோம். இன்றிரவு வார்த்தை பிரசங்கிக்கப்படும் போது எங்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்னும் விண்ணப்பத்துடன்.... ஏனெனில், “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடையவாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்'' என்று எழுதியிருக்கிறது. இன்றிரவு தேவனுடைய வாய் பேசுவதாக. அதிலிருந்து வார்த்தைகள் புறப்பட்டு வந்து, அதைக் கேட்டுக் கொண்டிருக்கிற எங்கள் இருதயங்களில் ஆழமாக பதிந்து, உமது ஆவியினாலும் பிரசன்னத்தினாலும் நிறைக்கப்படுவோமாக. இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 3. சென்ற இரவும் இன்றும், “நாம் ஏன் ஒரு ஸ்தாபனம் அல்ல” என்னும் தலைப்பில் பேசி, நாம் ஏன் ஒரு ஸ்தாபனம் அல்ல என்றும், நாம் ஏன் ஸ்தாபனங்களில் விசுவாசம் கொள்வர்தில்லை என்பதைக் குறித்தும் வலியுறுத்தினோம். ஏனெனில் ஸ்தாபனங்கள் ஒரு போதும் தேவனால் நியமிக்கப்படவில்லை என்று நாம் வேதத்தில் காண்கிறோம். அது பிசாசினால் நியமிக்கப்பட்ட ஒன்று என்று வேதத்தின் வாயிலாக நாம் நிரூபித்தோம். மேலும் ஸ்தாபனங்களின் மூலம் எவ்வாறு தவறுகள் உள்ளே நுழைந்தன என்பதையும் நாம் கண்டோம். இந்த தவறுகளைத் திருத்தி இந்த கூடாரத்தை ஆசீர்வதிக்கப் பட்ட தேவனுடைய வார்த்தையின் பேரிலுள்ள ஐக்கியத்துக்கு கொண்டு வரவேண்டுமெனும் நோக்கத்துடன் இதை கூறுகிறோம், நமது நம்பிக்கை ஸ்தாபனங்கள் கூறுவதன் பேரிலோ, எந்த மனிதன் கூறுவதன் பேரிலோ கட்டப்படாமல், கர்த்தராகிய தேவன் கூறியுள்ளதன் பேரில் கட்டப்பட்டுள்ளது. அந்த ஒரு வழியில் மாத்திரமே நாம் திருத்தப்பட முடியும். 4. ஸ்தாபனங்களின் மூலமாக வெளி வந்த ஐந்து வெவ்வேறு உபதேசங்கள் இன்று காலை என்னிடத்திலிருந்தது. இது முற்றிலுமாக வேதத்திலே உரைக்கப் படாத ஒன்று. உபதேசங்களுக்காக பிராடெஸ்டெண்டு சபைகள் அடிபணிந்து போதிக்கின்றன. இவை தங்கள் வேசி தாயாகிய கத்தோலிக்க சபை போதிப்பது போன்று இதிலிருந்து வெளியே வந்து பிராடெஸ்டெண்டு சபைக்குள் வந்துள்ளது. இவை பிராடெஸ்டெண்டு சபைகளில் காணப்பட்டு, தேவனுடைய வார்த்தைக்கு முற்றிலும் முரணானவைகளுக்கு நாம் தலை வணங்குகிறோம். 5. முதலாம் ஸ்தாபன சபை... நிசாயா பிதாக்களின் வரலாற்றில் காணப்படும், நிசாயா சபையைக் குறித்து இன்று பிற்பகல் நாம் பார்த்தோம். அப்போஸ்தலர்களின் மரணத்துக்குப் பிறகு நிசாயா பிதாக்கள் தோன்றி, பல ஆண்டுகள் நீடித்திருந்து (325-ஆண்டுகள்), முடிவில் பிரான்சு நாட்டிலுள்ள நிசாயாவை அடைந்தனர். அங்கு தான் அந்த பெரிய நிசாயா ஆலோசனை சங்கக்கூட்டம் நடந்தது. அங்கே இப்பொழுது கத்தோலிக்க சபை கொண்டுள்ள கோட்பாடுகளை அவர்கள் உருவாக்கினர், இப்பொழுது பிராடெஸ்டெண்டு சபைகளும் அவைகளைக் கைக்கொண்டு வருகின்றன. 6. இன்று காலை என் பிரசங்கத்தில் நான் கூறினது போல், தியத்தீரா சபையின் காலம் வரைக்குமிருந்த ஒவ்வொரு சபையின் காலத்திலும் 1500-ஆண்டுகளாக இருந்த இருளின் காலங்களில் - தேவன், ''நீ இன்னும் என் நாமத்தை தரித்திருக்கிறாய்'' என்று கூறி வந்தார். ஆனால் அதற்கு பிறகு அவர்கள் கிறிஸ்துவின் பெயரால் அறியப்படாமல், தங்கள் ஸ்தாபனங்களின் பெயரால் - கத்தோலிக்கர், லூத்தரன், வெஸ்லியன், பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், பெந்தெகொஸ்தேயினர் என்னும் பெயர்களால் அறியப்பட்டனர். ஆனால் காலம் முடிவடைவதற்கு முன்பு அவர், ''திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்'' என்றார். பாருங்கள். லவோதிக்கேயா சபையின் காலத்தவர் கடைசியாக வெளியே செல்வதற்காக இது திறந்த வாசலின் காலமாக உள்ளது. 7. சரியாக 325-ஆண்டுகளுக்குப் பிறகு நிசாயா ஆலோசனை சங்கம் கூட்டப் பட்டது. அங்கு அவர்கள் தெளித்தல், ஊற்றுதல், தவறான ஞானஸ்நானங்கள், தவறான பரிசுத்த ஆவிகள் போன்ற முறைமைகளை நியமித்தனர். குருவானவராயிருந்த லூத்தர் கத்தோலிக்க சபையை விட்டு வெளி வந்த போது, இவைகளைக் கூடவே கொண்டு வந்து விட்டார். அதிலிருந்து சுவிங்கிலி தோன்றினார். சுவிங்கிலியிலிருந்து கால்வின் தோன்றினார். கால்வினிலிருந்து வெஸ்லி தோன்றினார். இப்படியாக அவர்கள் இந்த கோட்பாடுகளையும் தங்களுடன் கூட கொண்டு சென்றனர். ஜனங்களை வழிநடத்த தேவன் வகுத்த பாதைகளில் அவர்கள் செல்லாமல் வேறு பாதைகளில் செல்லும் போது, தேவன் அவர்களை எப்படி வழிநடத்த முடியும்? 8. வெளிப்படுத்தல் 17ம் அதிகாரத்தில் ஒரு ஸ்திரீயை நாம் காண்கிறோம்.... (இந்த வார்த்தைகள் வெளிப்படையாயுள்ளன. அவை வேதத்தில் எழுதப்பட்டு உள்ளன. எனவே இவைகளை நான் கூறலாமென்று எண்ணுகிறேன்). அந்த ஸ்திரீ வேசியென்று கூறப்பட்டுள்ளது. அப்படியென்றால் அவள் பெயர் கெட்ட ஸ்திரீ என்று அர்த்தம். அவள் ஒரு புருஷனை மணந்து, அதே சமயத்தில் உலகத்துடன் விபச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறாள். அவள் வேசிகளுக்குத் தாய். எனவே அவளுக்கு குமாரத்திகள் இருந்தனர். (அந்த நாட்டின் வரைபடத்தை நாம் வரைந்தோம். நானே அங்கு சென்றிருக்கிறேன். அதை வேதத்தில் நாம் காண்கிறோம், அவள் உபதேசங்களை நாம் அறிந்திருக்கிறோம். இவைகளை ஆதாரமாகக் கொண்டு, அது கத்தோலிக்க சபையேயன்றி வேறெதுவுமில்லை என்பதை தேவன் கிரமமாக வரிசைப்படுத்திக் காண்பித்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன். அப்படித் தான் அது இருக்க முடியும். அவள் யாரைப் பெற்றெடுத்தாள்? பிராடெஸ்டெண்டு சபைகளை, அதைதான் அவள் செய்தாள். அவளுடைய கையில் வேசித்தனமாகிய மது நிறைந்த பாத்திரம் இருந்தது. அதை அவள் பூமியின் ராஜாக்களுக்குக் குடிக்கக் கொடுத்தாள். அவள் ஆவிக்குரிய விதத்தில் உலகம் முழுவதையும் அரசாளுகிறாள். அது முற்றிலும் உண்மை. அவளைத் தவிர வேறொருவருமில்லை... 9.நாம் தானியேலின் புஸ்தகத்துக்கு சென்று அந்த சிலையைப் பார்ப்போம். அந்த சிலையை கவனியுங்கள்: தலை பசும்பொன், பாபிலோன் ராஜ்யம், வெள்ளி, மேதிய - பெர்சிய ராஜ்யம்; வெண்கலம். மகத்தான அலெக்சாண்டர் (கிரேக்க ராஜ்யம்); பிறகு ரோம சாம்ராஜ்யம், கிழக்கு ரோமாபுரி, மேற்கு ரோமாபுரி - இரண்டு பாதங்கள். கவனியுங்கள், இந்த பத்து ராஜ்யங்கள்.... (இன்று காலை நாம் பேசின பத்து கொம்புகளுடன் இவை சரியாக பொருந்துகின்றன) எழும்பவிருந்த இந்த பத்து ராஜ்யங்கள் ஒவ்வொன்றிலும் இரும்பும் களிமண்ணும் கலந்திருந்தது. இரும்பு ரோமாபுரியாகிய கால்களிலிருந்து வந்தது. வானத்தின் கீழுள்ள ஒவ்வொரு தேசத்திலும் கத்தோலிக்க சபையின் மூலம் ரோம மார்க்கம் கலக்கப்பட்டுள்ளது. அது முற்றிலும் உண்மை. அவர்கள் வேறெங்கும் கலக்க மாட்டார்கள். அவர்கள் தங்களுக்குள்ளே மாத்திரம் மணந்து கொள்வார்கள். அவர்கள் அப்படி செய்வார்கள் என்று வேதம் கூறுகிறது. அவர்களை இன்று பாருங்கள். 10. உங்கள் பையன் ஒரு கத்தோலிக்க பெண்ணுடன் சென்றால், அவர்கள் மணம் புரியும் போது, பிள்ளைகளை கத்தோலிக்கராக வளர்ப்பார்கள் என்று உறுதி கூற வேண்டும். பாருங்கள், தலை கீழாக. பாருங்கள், அது மற்ற மார்க்கத்தின் அதிகாரத்தை உடைக்க. ஆனால் அது என்ன? எல்லாமே வேசி மார்க்கம் என்று வேதம் உரைக்கிறது. நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்? அது உண்மை... எப்படி அவர்கள் பாவம் விசாரிக்கப்படும். நாம் உபாகமத்திற்குச் சென்று, முறைதவறிப் பிறந்தவன் - வேசிப்பிள்ளை - பதினான்காம் தலைமுறை வரைக்கும் கர்த்தருடைய சபையில் பிரவேசிக்க கூடாது என்று காண்பித்தோம். இது நியாயப்பிரமாணத்தின் கீழ் அளிக்கப்பட்ட நிபந்தனை. கிறிஸ்து நியாயப்பிரமாணத்தை மிகைப்படுத்த வந்தார். அப்படி ஆனால் இப்பொழுது அது இன்னும் எவ்வளவு அதிகம் இருக்கும்? 11.இன்று தெருக்களில் செல்லும் இந்த பெண்களுக்கு என்ன நேர்ந்தது - சிகரெட் புகைத்துக் கொண்டு, குட்டை கால் சட்டை அணிந்து தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டு செல்லும் பெண்கள். அவர்கள் ஏன் அப்படி செய்கின்றனர்? அவர்கள் தாய் அப்படி நடந்து கொண்டாள். அது ஒரு தலைமுறையிலிருந்து மறு தலைமுறைக்கு விசாரிக்கப்படும் அக்கிரமம். அது தான் அது. நாம் எதைப் பெற்றுள்ளோம்? அது பாவமான குழப்பத்தின் சேர்க்கையேயன்றி வேறொன்றுமல்ல என்னும் நிலைக்கு நாம் வந்து விட்டோம். 12. அதன் காரணமாகத்தான், அவளை அழிக்க தேவன் அணுகுண்டுடன் ருஷியாவை எழுப்பினார் - ஜலப்பிரளயத்துக்கு முன்பிருந்து உலகத்தை அழிக்க அவர் மேகங்களை எழுப்பினது போல். நிச்சயமாக அவர் அதை செய்திருக்கிறார். வேதம் அப்படி கூறுகிறது. நாத்தீக நாடாகிய ருஷியா அதற்கென்று முற்றிலுமாக தன்னை சர்வ வல்லமையுள்ள தேவனின் கரங்களில் கொடுத்து உள்ளது. தேவனுடன் நடக்க இஸ்ரவேல் ஜனங்கள் தவறின போது, அதை அழிக்க எப்படி நேபுகாத்நேச்சார் நியமிக்கப்பட்டானோ, அதே போல் பரிசுத்தவான்களின் இரத்தத்தை சிந்திய கத்தோலிக்க சபையை பழிவாங்க ருஷியா இப்பொழுது எழும்புகிறது. வேதம் அப்படி உரைக்கின்றது. அது எல்லாவற்றையும் கைப்பற்றும். 13.எனவே இங்கு பாருங்கள், அவர்களுடைய தாய், பாட்டி பாடல் நாடகங்களில் கோஷ்டியில் பாடி நடனமாடியவர்கள் (chorus girl), அவர்களுடைய தாய் தெருவில் திரிபவள். இன்று இவள் என்னவாக இருக்கிறாள்? ராக் அண்டு ரோல் நடனமாடி உடைகளை ஒவ்வொன்றாக களைபவள். அவளுடைய பிள்ளைகள் என்னவாயி இருப்பார்கள்? “தேவன் அப்படி செய்கிறாரா என்ன?'' என்று நீங்கள் கேட்கலாம். ஆம், ஐயா. தேவன் பிள்ளைகளிடத்தில் அக்கிரமங்களை விசாரிக்கிற வராயிருக்கிறார். தலைமுறை... பதினான்காம் தலைமுறை மட்டும். கிறிஸ்து நியாயப்பிரமாணத்தை மிகைப்படுத்த வந்திருந்தால், அது நூறு தலைமுறை மட்டும் அல்லது ஐந்நூறு தலைமுறை மட்டும் என்று நாம் கூறலாம். அவர், ''கொலை செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக் கொள்பவன் அவனை ஏற்கனவே கொன்று விட்டான். ''விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடு விபசாரஞ் செய்தாயிற்று'' என்றார். அவர் இவைகளை ஏற்படுத்தினார். மிகைப்படுத்துதல் என்றால் என்ன? அதை பலமடங்கு பெரிதாக்குதல். நியாயப்பிரமாணத்தின் கீழ் அது பதினான்கு தலைமுறையாக இருக்குமானால், இன்றைக்கு அது எத்தனை தலைமுறையாக இருக்க வேண்டும்? 14.இன்று இளைஞர்கள், நடுத்தரவயதினர், மணம் புரிந்தோர் விவாகப் பொருத்த னைகளுக்கு மதிப்பே கொடுக்கிறதில்லை. அவர்கள் பெண்களைக் கொண்டு சென்று, சாதாரண நாய்களைப் போல் எங்கும் வாழத் தலைப்படுகின்றனர். சிலரைக் காட்டிலும் ஒரு நாய்க்கு மேலான நல்லொழுக்கம் உள்ளது? அது மிகவும் கடினமான சொல் என்றறிவேன். ஆனால் அது உண்மை. ஏன்? சபைகள் அவர்கள் அப்படி செய்யும்படி விட்டுவிட்டு, அதைக் குறித்து ஒன்றுமே கூறுவதில்லை. ஏன்? அவைகளும் தங்கள் தாயைப் போலவே நடந்து கொள்கின்றன. சபை அதை சுதந்தரித்துக் கொண்டுள்ளது. பிராடெஸ்டெண்டு சபை கத்தோலிக்க சபையை விட்டு வெளியே வந்ததால், கத்தோலிக்க சபையின் அக்கிரமம் பிராடெஸ்டெண்டுகளிடம் விசாரிக்கப்படுகிறது. நிச்சயமாக. எனவே பானை கெண்டியை அழுக்கென்று கூற முடியாது. அது முற்றிலும் உண்மை. 15.அது வேதத்தில் உள்ளதாக நாம் காண்கிறோம். நாம் கண்டோம். அதைக் குறித்து ஒரு குறிப்பையும் இன்றிரவு நான் மேசையின் மேல் காணவில்லை... தேவன் எப்பொழுதாவது ஒரு ஸ்தாபனத்தை நியமித்தாரென்று வேதத்திலிருந்து எனக்குக் காண்பியுங்கள் பார்க்கலாம் என்று நான் கூறினேன். தேவன் எப்பொழுதாவது ஒரு பெண் பிரசங்கியை நியமித்தாரென்று வேதத்திலிருந்து எனக்குக் காண்பியுங்கள் பார்க்கலாம்.! தேவன் எப்பொழுதாவது தெளித்தலை நியமித்ததாக வேதத்திலிருந்து எனக்குக் காண்பியுங்கள் பார்க்கலாம்.! தேவன் எப்பொழுதாவது ஊற்றுதலை நியமித்ததாக வேதத்திலிருந்து எனக்குக் காண்பியுங்கள் பார்க்கலாம்.! தேவன் யாருக்காகிலும் வேதத்தில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்ததாக எனக்குக் காண்பியுங்கள் பார்க்கலாம்.! இவைகளைத் தேடிப் பாருங்கள். இருப்பினும் நாம் தொடர்ந்து இவைகளை செய்து வருகிறோம். இவை சபையில் கைக்கொள்ளப் பட்டு வருகின்றன. 16. இப்பொழுது நான் கூறுகிறேன். நீங்கள்... நாம் பாப்டிஸ்டுகளாக இருக்க முடியாததன் காரணம், நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கொடுக்கப்படும் ஞானஸ்நானத்தில் விசுவாசம் கொண்டிருப்பதே. யாரும் வேறு முறையில் வேதத்தில் ஞானஸ்நானம் பண்ணப்படவில்லை. ஒருவராவது பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டதை வேதத்தில் ஒரு இடத்திலாவது எனக்குக் காண்பியுங்கள் பார்க்கலாம். அப்படிக் காண்பித்தால் என் கைகளை உயர்த்தி நான் கள்ளத் தீர்க்கதரிசி என்று அறிக்கையிடுவேன். நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறவேண்டுமென்று வேதம் கூறியிருந்தால், அப்படி தான் நீங்கள் பெற வேண்டுமென்று அர்த்தம். பவுல் அவர்கள் மறுபடியும் ஞானஸ்நானம் பெற வேண்டுமென்று கட்டளை இட்டான். அவர்கள் வேறு எந்த விதத்தில் ஞானஸ்நானம் பெற்று இருந்த போதிலும், அவர்கள் வந்து மறுபடியும் ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிற்று. இயேசு கிறிஸ்துவுக்கு ஞானஸ்நானம் கொடுத்த அதே மனிதன் - யோவான் ஸ்நானன் - அவர்களுக்கும் ஞானஸ்நானம் கொடுத்தான். ஆனால் பவுல், ''அது இனி கிரியை செய்யாது, நீங்கள் வந்து மறுபடியும் ஞானஸ்நானம் பெற வேண்டும்'' என்றான். அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெறும் முன்பு அதை செய்ய வேண்டியதாயிற்று. அது தேவனுடைய திட்டமாயிருந்தது. இன்றிரவு நான் அதைக் காட்டிலும் சற்று ஆழமாக செல்லக்கூடும். ஏன்? இயேசு தமது வார்த்தையைக் காக்கிறார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஏறக்குறைய நீங்கள் எல்லோரும் இன்று காலை இங்கு வந்திருந்தீர்கள். அதை இன்னும் சிறிது அதிகமாக சிந்திக்க விரும்புகிறேன். 17.ஞானஸ்நானம் பெற்ற பிறகும் பவுல் அப்படி ஏன் கட்டளையிட வேண்டும். அவன், ''பரலோகத்திலுள்ள தூதனும் கூட வேறெதையாவது பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்'' என்றான். நீங்கள், ''அதன் மேல் நாங்கள் புது வெளிச்சம் பெற்றிருக்கிறோம்'' என்கிறீர்கள். இல்லை, நீங்கள் பெறவில்லை. அப்படித் தான் பிசாசு ஏதோ புது வெளிச்சத்துடன் ஏவாளிடம் வந்தான். உங்களுக்கு புது வெளிச்சம் அவசியமில்லை. தேவன் ஏற்கனவே இங்கு வைத்துள்ள வெளிச்சத்தில் நீங்கள் நடக்க வேண்டியது அவசியம். அவ்வளவு தான். 18. இதை கவனியுங்கள். இது மிகவும் எளிது, அவர்கள் மறுரூபமலையிலிருந்து இறங்கி வந்த போது இயேசு தமது சீஷர்களிடம், ''மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யாரென்று சொல்லுகிறார்கள்?'' என்று கேட்டார். ஒருவர், ''நீர் மோசே அல்லது எலியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்கின்றனர்'' என்றார். அவர், ''நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள்?'' என்றார். பேதுரு, ''நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து'' என்றான். அப்பொழுது இயேசு, “யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான். மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை” என்றார். பாருங்கள், அது வேதாகம பள்ளிகளின் மூலம் வருவதில்லை. அது ஸ்தாபனங்களின் மூலம் வருவதில்லை. “மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. நீ எந்த வேத சாஸ்திர பள்ளியிலும் இதை கற்கவில்லை. பரலோகத்திலிருக்கிற என் பிதா உனக்கு வெளிப்படுத்தினார். இந்த கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற் கொள்வதில்லை'' என்றார். அவர் யார் என்னும் ஆவிக்குரிய வெளிப்பாடு. கவனியுங்கள், “மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன். நீ பேதுருவாய் இருக்கிறாய். பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழக்கப் பட்டிருக்கும்'' என்றார். அவர் தமது வார்த்தையைக் காக்க வேண்டும். இல்லை என்றால் அவர் தேவன் அல்ல. 19. இதற்கு பிறகு சில நாட்கள் கழித்து அவர் சிலுவையிலறையப்பட்டு, உயிரோடெழுந்து பரலோகத்துக்கு ஏறினார். பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு சுவிசேஷத்தை திறந்தான். அவன் அதை செய்தானா? நிச்சயமாக செய்தான். இப்பொழுது கவனியுங்கள். அவர்கள் எல்லோரும் அவர்களை கேலி செய்தார்கள். ஏனெனில் அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிறைந்திருந்தனர். அவர்கள் மதபேதமுள்ளவர்கள், உருளும் பரிசுத்தர், அப்படி ஏதோ ஒரு பெயரால் அழைக்கப்பட்டனர். அவர்கள் பரியாசம் செய்து, “இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்கள்'' என்றனர். அப்பொழுது பேதுரு அவர்கள் நடுவில் எழுந்து நின்று உரத்த சத்தமாய், ''மனிதர்களே, சகோதரர்களே, என் வார்த்தைகளுக்கு செவி கொடுங்கள். நீங்களெல்லாரும் அறிந்து கொள்வீர்களாக. நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறி கொண்டவர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாய் இருக்கிறதே. தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது. கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன். அப்பொழுது அவர் குமாரரும், குமாரத்திகளும், ஊழியக்காரரும் ஊழியக்காரர்களும் என்ன செய்வார்கள் என்று. 20.இதை அவர்கள் கேட்டபொழுது இருதயத்திலே குத்தப்பட்டார்கள். ABCஐக் கூட அறிந்திராத ஒரு மனிதன் பேசினதை அவர்கள் கேட்டார்கள். இருப்பினும் அவர்கள் அவன் மேல் கவனம் செலுத்த வேண்டிதாயிருந்தது. அவனுக்குள் ஏதோ ஒன்று - பரிசுத்த ஆவி - எரிந்து கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் கண்டு கொண்டனர். அவனை நிறுத்திப் பாருங்கள்! அது பலமான காற்றடிக்கும் நாளில் உலர்ந்த கட்டிடத்தில் பிடித்த தீயை அணைக்க முயல்வது போலாகும். உங்களால் செய்ய முடியாது. அவன் பரிசுத்த ஆவியினால் நிறைந்திருந்தான். அவன் பிறகு என்ன செய்தான்? அவர்கள், ''சகோதரரே, நாங்கள் இரட்சிக்கப்பட என்ன செய்ய வேண்டும்'' என்றார்கள். பேதுருவைக் கவனியுங்கள். அவன் ராஜ்யத்தின் திறவு கோல்களை வைத்திருந்தான். இயேசு மூன்றாம் நாளில் உயிரோடெழுந்த போது, அவரிடம் பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்கள் இருக்கவில்லை. அது உங்களுக்குத் தெரியுமா? ''நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராய் இருக்கிறேன்'' என்றார். அவர். (வெளி.1:18) - பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்கள் அல்ல. ஏனெனில் அவை பேதுருவுக்கு கொடுக்கப்பட்டுவிட்டன. 21.அவர், ''பேதுருவே, பூலோகத்தில் நீ கட்டவிழ்ப்பது எதுவோ அதை நான் பரலோகத்தில் கட்டவிழ்ப்பேன். பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ, அதை நான் பரலோகத்தில் கட்டுவேன்'' என்றார். இதோ அவன் ஆசீர்வாதமான வைகளை உலகத்துக்கு திறந்து கொடுக்க திறவுகோல்களுடன் நின்று கொண்டிருக்கிறான். அவன் கைகளில் திறவுகோல்களை வைத்திருக்கிறான். அவர்கள், ''நாங்கள் இரட்சிக்கப்படுவதற்கு என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்கின்றனர். என்ன செய்ய வேண்டுமென்று அப்போஸ்தலன் கூறினதை தேவன் பரலோகத்தில் அங்கீகரிக்க வேண்டும். அவர் அந்த அதிகாரத்தை அவனுக்கு அளித்திருப்பாரானால்... பேதுரு, ''நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்'' என்றான். அது சரியா? ஆகையால் தான், வேறெந்த நாமத்திலும், வேறெந்த வழியிலும், வேறெந்த முறையிலும், பரலோகத்தில் திறவுகோல்கள் திறந்திருக்க முடியாது. அது பூமியில் திறக்கப்பட்ட போது, பரலோகத்திலும் திறக்கப்பட்டது. இல்லை என்றால் இயேசு பேதுருவுக்கு அளித்த வாக்கைக் காப்பாற்றவில்லை என்று ஆகிவிடும். அதன் பிறகு வேதத்தில் ஞானஸ்நானம் பெற்ற ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றனர். அதற்கு முன்பு ஞானஸ்நானம் பெற்றவர்கள், பரிசுத்த ஆவியை பெறுவதற்கென, மறுபடியும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிற்று. அது உண்மை. இப்பொழுது அது அப்படியே இருந்து வருகிறது. 22.எனவே நாம் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் கொடுக்கப்படும் ஞானஸ்நானத்தைப் போதிப்போமானால், அது கள்ள உபதேசம். உங்களை நான் புண்படுத்த விரும்பவில்லை; ஆனால் சபை அறிந்து கொள்வதற்கென இதை நான் ஆணித்தரமாக கூற வேண்டியவனாயிருக்கிறேன். நாங்கள் படிப்பறியாத, ஒரு கூட்டம் பைத்தியக்காரராக இங்கில்லை. தேவனுடைய வார்த்தையில் நாங்கள் எங்கு நிற்கிறோம் என்பதை அறிந்திருக்கிறோம். எவராகிலும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றதாக வேதத்தில் ஒரு இடத்தையாகிலும் காண்பிக்கும்படி எவருக்கும் சவால் விடுகிறேன். நீங்கள் கள்ள உபதேசத்துக்கு செவி கொடுக்கப் போகின்றீர்களா, அல்லது சத்தியத்துக்கு செவி கொடுக்கப் போகின்றீர்களா? வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். அது உங்களை பொறுத்தது. எந்த சபையாவது ஸ்தாபனமாக நியமிக்கப்பட்டதாக வேதத்திலிருந்து எனக்குக் காண்பியுங்கள் பார்க்கலாம்! பெண் பிரசங்கி நியமிக்கப்பட்டதாக வேதத்திலிருந்து எனக்கு ஆதாரம் காட்டுங்கள் பார்க்கலாம். நாம் இது வரை பேசிக் கொண்டிருந்தவை வேதத்தில் நியமிக்கப்பட்டதாக எனக்கு ஆதாரம் காட்டுங்கள் பார்க்கலாம்! அவை அங்கில்லை. ஒரு இடத்தை காட்டுங்கள் பார்க்கலாம். 23. நீங்கள் ஒரு ஸ்தாபனத்துக்கு செல்கின்றீர்கள்.... மெதோடிஸ்டுகள் எழும்பின போது, அவர்கள் பரிசுத்தமாக்கப்படுதலை பிரசங்கித்தனர். அது நல்லது தான், ஆனால் அவர்கள் அப்படி செய்த போது, ஒரு ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். அத்துடன் அது முடிவு பெற்றது. அதனால் தான் வேதம், ''உனக்கு ஒரு நாமம் உள்ளது'' என்று கூறுகிறது. நீங்கள், “நான் ஒரு கிறிஸ்தவன்'' என்கிறீர்கள். ''நீ, எந்த ஸ்தாபனத்தை சேர்ந்தவன்?'' நீங்கள், “நான் மெதோடிஸ்டு'' என்கிறீர்கள். அப்படியானால், நீ ஒரு வேசி. ''நான் பாப்டிஸ்டு'' - ஒரு வேசி! பெந்தெகொஸ்தேயினன்'' - நீ ஒரு வேசி! நீங்கள் அந்த ஸ்தாபனத்தை சேர்ந்தவர்களாயிருக்கிறீர்கள்! நீங்கள் கிறிஸ்துவை சேர்ந்திருக்க வேண்டும். உங்களை மெதொடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள் என்று அழைத்துக் கொள்ள எந்த உரிமையும் கிடையாது. நீங்கள் கிறிஸ்தவர்கள் என்றால் உள்ளத்தில் கிறிஸ்தவராயிருக்க வேண்டும். 24.அந்த ஸ்தாபனங்கள் ஒவ்வொன்றும் தேவனுடைய பிள்ளைகளை தோன்றச் செய்ய முடியும். அது சரி. ஆனால் நீங்கள் மெதோடிஸ்டு அல்லது பாப்டிஸ்டாக இருப்பதால் பரலோகம் செல்கின்றீர்கள் என்று நினைப்பது தவறாகும். அதன் காரணமாகத்தான் நாங்கள் அதிலிருந்து விலகினோம். பாப்டிஸ்டுகளால் ஏன் அதைக் காணமுடிவதில்லை. ஆராய்ச்சி கட்டுரை எழுதிக் கொண்டிருந்த ஒரு மெத்தோடிஸ்டு மனிதன் என்னிடம் கேட்டான், ''உங்களுக்கு விரோதமாக எங்களுக்குள்ளது, நீங்கள் பெந்தெகொஸ்தேயினரிடம் தொடர்பு கொள்வதே.'' ''எங்களுக்குள்ளது என்றால், அது யார்?'' ''மெதோடிஸ்டுகளாகிய நாங்கள்.'' நல்லது, அப்படியானால் நான் என்ன செய்யப் போகிறேன் என்று கூறுகிறேன். உங்கள் நகரத்துக்கு நான் வருகிறேன். மெதோடிஸ்டுகள் கூட்டங்களை ஒழுங்கு செய்யட்டும்.'' “ஓ, அதை எங்களால் செய்ய முடியாது.'' ''நான் அப்படித்தான் நினைத்தேன். நான் பெந்தெகொஸ்தேயினரிடம் தொடர்பு கொண்டுள்ள காரணம், அவர்கள் அதை விசுவாசிக்கின்றனர். அது உண்மை. அவர்கள் அதை ஆதரிக்கின்றனர். அதன் பலன்களை அனுபவிப்பவர்கள் அவர்களே“ என்றேன். பெந்தெகொஸ்தே சபையைக் குறித்து அண்மையில் லைஃப் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையை எத்தனை பேர் படித்தீர்கள்? அது இந்த காலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய சம்பவங்களில் ஒன்று. ஒரு ஆண்டில் மற்றெல்லா சபைகளும் ஒன்று சேர்ந்து இரட்சிப்புக்குள் கொண்டு வந்தவர்களைக் காட்டிலும் பெந்தெகொஸ்தே சபையில் இரட்சிக்கப்பட்டவர்களின் தொகை கூடுதலாக உள்ளது. ஏன்? அவர்களுடைய தவறுகளில்லும், தேவன் அவர்கள் மேல் அசைவாடுகிறார். ஏனெனில் அவர்கள் சத்தியத்தை விசுவாசித்து அதனுடன் அணிவகுத்து செல்கின்றனர். அது உண்மை. 25. இப்பொழுது நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? அதன் காரணமாகத் தான் நாம் ஒரு ஸ்தாபனம் அல்ல. பாருங்கள். பெந்தெகொஸ்தேயினர் நிச்சயமாக ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர்..... 40- ஆண்டுகளுக்கு முன்பு பெந்தெகொஸ்தே சபையின் மீது முதலாவதாக பரிசுத்த ஆவி ஊற்றப்பட்ட போது, அவர்கள் அந்நிய பாஷைகளில் பேச ஆரம்பித்தனர் - அது வரங்களில் ஒன்று. அது எல்லா வரங்களைக் காட்டிலும் மிகச் சிறிய வரம். அந்நிய பாஷைகளைப் பேசுதல் எல்லா வரங்களைக் காட்டிலும் சிறிய வரம் என்று பவுல் கூறியுள்ளான், பரிசுத்த ஆவி விழுந்தவுடனே, ''ஓ, அதை இப்பொழுது பெற்றுக் கொண்டோம்'' என்று அவர்கள் கூறி, ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு, பொதுவான சங்கத்தை அமைத்தனர். அது இப்பொழுது ''அசெம்பிளீஸ் ஆப் காட்'' என்று அழைக்கப்படுகிறது. ''ஒருவர் அந்நிய பாஷைகள் பேசாவிட்டால், அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். தேவன் அவர்களிடமிருந்து விலகிச் சென்று அவர்கள் அங்கேயே உட்கார்ந்து கொண்டிருக்கும்படி விட்டு விட்டார். நிச்சயமாக. ஆம் ஐயா. 26. பின்பு ஒருத்துவக்காரர் தோன்றி இயேசுவின் நாமத்தில் கொடுக்கப்படும் ஞானஸ்நானத்தைக் கண்டு கொண்டனர். அவர்கள், “ஓ, நாங்கள் அதை பெற்றுக் கொண்டோம்'' என்று கூறினர். அவர்கள் என்ன செய்தனர்? ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். தேவன் அவர்களிடமிருந்தும் விலகிச் சென்று அவர்கள் அங்கேயே உட்கார்ந்து கொண்டிருக்கும்படி விட்டுவிட்டார். அது, ”விருப்பமுள்ளவன் வரக்கடவன்'' என்றுள்ளது. பாருங்கள், ஒருத்துவக்காரர் ''அசெம்பிளீஸ் ஆப் காட்'' ஸ்தாப்னத்துக்கு செல்ல முடியாது. அவ்வாறே அசெம்பிளீஸும் ஒருத்துவக்காரரிடம் செல்ல முடியாது. அவர்களுக்குள்ள மிகச் சிறந்த மனிதர்கள் திரு. காஸ், டாக்டர் போப் மற்றும் சிலரை சந்தித்து நான் பேசியிருக்கிறேன். அவர்களிடம் நான், ''நீங்கள் நுண்ணறிவு படைத்த மேதைகளாயிருக்க, அந்த ஆரம்ப அடையாளம் எப்படி போதிக்க முடியும்'' என்று கேட்டேன். அவர்களில் ஒன்று, இரண்டு, மூன்று பேர் மிகவும் நேர்மையானவர்கள். அவர்கள், ''சகோ.பிரான்ஹாமே, சரியாக கூறினீர்கள். அது தவறென்று எங்களுக்குத் தெரியும். நாங்கள் என்ன செய்வோம்? அதைக் குறித்து நாங்கள் ஏதாகிலும் கூறினால் அது முழு திட்டத்தையுமே தடை செய்துவிடும்'' என்றனர். நிச்சயமாக, நீங்கள் பேராயராகவோ பொதுவான கண்காணியாகவோ ஆக முடியாது. அது தான் அவர்கள் அபிப்பிராயம். 27.சகோதரனே, அதைக் காட்டிலும் நான் ஒரு மூலையில் சிறு ஊழியத்தைக் கொண்டவனாய், ஊசி இலை மரத்தின் கீழ் பிரசங்கித்து, சத்தியத்தைக் கொண்டவனாய் இருப்பேன். நிச்சயமாக நீங்கள் சத்தியத்தைக் கூறுகிறேன் என்று அறிந்தவர்களாயிருங்கள். மனிதனுக்கு சத்தியம் வேண்டும். எனவே கிறிஸ்தவன் என்னும் முறையில் சத்தியத்தைக் குறித்து சாட்சி கொடுக்க நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள். அதற்கு தேவன் உங்களை உத்திரவாதமுள்ளவர்களாக வைப்பார். பிறகு, இந்தக் காரியங்களுக்கு, நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறாதவர்களாயும், இவைகளைச் செய்யாதவர் களாயும் இருந்தால், நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளவில்லை. நீங்கள், “ஓ, நான்; அந்நியபாஷை பேசினேன்'' எனலாம். அது நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்று விட்டீர்கள் என்று அர்த்தமல்ல. நான் மந்திரவாதிகள், பிசாசுகள், மற்றவை அந்நியபாஷை பேசுவதைக் கண்டிருக்கிறேன். நிச்சயமாக, அவர்களுக்கு பரிசுத்த ஆவி இல்லையென்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் மண்டை ஓட்டிலுள்ள இரத்தத்தைக் குடித்து, நடனமாடி, பிசாசைக் கூப்பிட்டு, அந்நிய பாஷைகள் பேசுகின்றனர். நிச்சயமாக அவர்களுக்கு பரிசுத்த ஆவி கிடையாது. நீ அந்நியபாஷை பேசுவதால் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறாய் என்று அர்த்தமல்ல. அதை நீ பெற்றிருக்கிறாய் என்று அறிந்து கொள்ளக்கூடிய ஒரே வழி, உன் ஆவி அவருடைய ஆவியைக் குறித்து சாட்சியுரைத்து, அன்பு, சந்தோஷம், விசுவாசம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், சாந்தம் ஆகிய ஆவியின் கனிகள்; உன்னில் காணப்படுவதன் மூலமே. அப்பொழுது நீ பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளதாக அறிகிறாய். அது தனக்குத்தானே சாட்சி உரைக்கிறது. 28. நீ அசெம்பிளீஸ், அல்லது பாப்டிஸ்டு, அல்லது பிரஸ்பிடேரியன்; ஸ்தாபனத்தை சேர்ந்திருக்கிறாய் என்பதன் பேரில் திருப்தி கொண்டால், நீ என்ன செய்கிறாய் என்று உணருகிறாயா? நீ ஒரு வேசியின் பெயரைத் தரித்துக் கொண்டிருக்கிறாய். அது முற்றிலும் உண்மை. அதை விட்டுவிலகு. அதைவிட்டு வெளியே வா.! உங்கள் சபையை விட்டு வர வேண்டுமென்று நான் கூறவில்லை. அதைக்குறித்து நீ என்ன வேண்டுமானாலும் செய். ஆனால், ''ஓ, நான் பிரஸ்பிடேரியன், அற்புதங்களின் நாட்களில் எங்களுக்கு நம்பிக்கையில்லை'' என்பது போன்றவைகளை விட்டு வெளியே வா. உனக்கு ஏன் அதில் நம்பிக்கையில்லை? வேதம் அதை போதிக்கிறதே! “ஓ, நான் கிறிஸ்துவின் சபை ஸ்தாபனத்தை சேர்ந்திருக்கிறேன். அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டதாக அவர்கள் கூறுகின்றனர் அவர்கள் கள்ளத் தீர்க்கதரிசிகள். வியாதியஸ்தரை சுகப்படுத்த, மரித்தோரை உயிரோடெழுப்ப, பிசாசுகளை துரத்த சபைக்கு இயேசு கிறிஸ்து எங்கு அதிகாரம் அளித்தார் என்று என்னால் காண்பிக்க முடியும். அவர் எப்பொழுது சபையிலிருந்து அந்த அதிகாரத்தை விலக்கினார் அல்லது எது அதை விலக்கினது என்று காண்பிக்க எவருக்கும் நான் சவால் விடுகிறேன். எது அதை விலக்கினது? உங்கள் சொந்த கோட்பாடு, தேவனுடைய வார்த்தை அல்ல. பரிசுத்த ஆவியானவர் இன்னும் பணியை நிறைவேற்றி, முன்பு போலவே சென்று கொண்டிருக்கிறார். அவர் என்றென்றைக்கும் அதை செய்வார். அதன் காரணமாகத் தான் நாங்கள் ஒரு ஸ்தாபனம் அல்ல. “தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.'' உங்கள் கோட்பாடுகளில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. 29.அது எப்படி துவங்கினது? (நாம் வேகமாக இதை முடிக்க வேண்டும்). அது எப்படித் துவங்கினது? பரிசுத்த ஆவியைக் குறித்து நிறைய வேதவாக்கியங்களை இங்கு எழுதி வைத்துள்ளேன். வேறொரு காரியம், நேற்றிரவு பரிசுத்தவான்களின் பாதுகாப்பைக் குறித்து நாங்கள் சவால் விட்டோம் - பாப்டிஸ்டுகள் விசுவாசிப்பதைப் போல் அல்ல. இல்லை, ஐயா. பாப்டிஸ்டுகளுடனும் அவர்களுடைய கால்வீனியக் கொள்கை உடனும் எனக்கு கருத்து வேறுபாடு உண்டு. நான் பிரஸ்பிடேரியன்களுடனும் கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறேன். அவ்வாறே மெதோடிஸ்டுகளுடனும் அவர்களுடைய ஆர்மினிய உபதேசத்துடனும் எனக்கு கருத்து வேறுபாடு உண்டு. ஆம், ஐயா. இருவரிடமும் சத்தியம் உண்டு. ஆனால் அதை சத்தியமுள்ள... இங்கே நீங்கள் திரும்ப கொண்டு வரவேண்டும். அதை அங்கு செலுத்தினால், அதனுடன் நீங்கள் கட்டுக்கடங்காமல் போய்விடுகிறீர்கள். 30.பாப்டிஸ்டுகள் இங்கே வந்து, இங்கேயிருக்கின்ற கணவன் மனைவிக்கு தண்ணீரில் முழுக்கி ஞானஸ்நானம் கொடுக்கின்றனர். போதகர் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறார். ஆனால் அவர்களில் பத்தில் ஒன்பது பேர் சிகரெட்டு பிடிப்பவர்களாயுள்ளனர். அவர்கள் ஞானஸ்நானத்துக்குப் பிறகு திரும்பிச் சென்று இரவு முழுவதும் சீட்டு விளையாடி, சூதாடி, வியாபார ஒப்பந்தத்தில் கோணலான வழிகளில் செல்கின்றனர். ஸ்திரீகள் குட்டைகால் சட்டை அணிந்து தெருக்களில் சென்று தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டு, புகை பிடித்து, தையல் விருந்துகளில் உரையாடி, ஆபாசமான நகைச்சுவை துணுக்குகளை கூறுகின்றனர். இதையா நீங்கள் கிறிஸ்தவ மார்க்கம் என்று அழைக்கிறீர்கள்? இதையெல்லாம் செய்துவிட்டு உங்களுக்கு நித்திய பாதுகாப்பு உள்ளதாக எண்ணுகிறீர்கள்! நீங்கள் நரகத்துக்கு தான் செல்வீர்கள்! நீங்கள் பரலோகத்தில் எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்க முடியாது. நிச்சயமாக முடியாது. இது நித்திய பாதுகாப்பு அல்ல. ஆனால் ஒரு மனிதன் பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறக்கும் போது... பெந்தெகொஸ்தேயினராகிய நீங்கள் மேலும் கீழும் குதித்து, அந்நிய பாஷைகள் பேசி, உட்பாதையில் ஒரு முனையிலிருந்து மறுமுனை ஓடினதால், நீங்கள் நித்திய பாதுகாப்பை பெற்றுள்ளதாக அர்த்தமல்ல. அப்படிப்பட்ட கருத்து உங்கள் தலையில் புக வேண்டாம். இல்லை, ஐயா. நிச்சயமாக இல்லை. ஏனெனில் நீங்கள் தேவனுடன் சரியாக இல்லையென்று உங்கள் சொந்த வாழ்க்கையே சாட்சி கொடுக்கிறது. அது உண்மை. நீங்கள் சரியாக இல்லை. அது நித்திய பாதுகாப்பு அல்ல. 31. உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். நித்திய பாதுகாப்பு என்று ஒன்றுண்டா? வேதம் அது உள்ளதாக கூறுகிறது. உலகத் தோற்றத்துக்கு முன்பே நமது பெயர்கள் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டு விட்டதாக வேதம் கூறுகிறது. இன்று காலை நான் கூறினது போல் (அதை மறுபடியும் கூறுகிறேன்); இன்றிரவு மகிமையில் ஒரு புதிய பெயர் எழுதப்பட்டது. அது என்னுடையது என்னும் பாடலை எழுதின கவிஞனின் கருத்து சரியே, ஆனால் அது வேதப்பிரகாரமாக தவறு. உங்கள் பெயர் நீங்கள் இரட்சிக்கப்பட்ட அன்றிரவு எழுதப்படவில்லை. வேதப் பிரகாரம் - வெளிப்படுத்தல் 13, 17 அதிகாரங்களின் படி - உங்கள் பெயர் உலகத் தோற்றத்தக்கு முன்பே எழுதப்பட்டது. இயேசு கிறிஸ்து உலகத் தோற்றுத்துக்கு முன்பே அடிக்கப்பட்டார். 32. எப்படி முடிவற்ற (infinite) தேவன்... ஆதியிலிருந்து அந்தம் வரை எல்லாவற்றையும் அறியும் முடிவற்ற தேவன், எப்படி காரணமின்றி பூமியில் பாவம் தோன்ற அனுமதித்திருக்கக் கூடும்? நாம் ஏற்கனவே கூறினவைகளை மீண்டும் கூறுவோம்; முதலில் இருந்தது யார்? இரட்சகரா பாவியா? (சபையிலுள்ள யாரோ ஒருவர் இரட்சகர் என்று கூறுகிறார்) நிச்சயமாக இரட்சகர். இவ்விருவரில் யார் அதிக வல்லமையுள்ளவர், இரட்சகரா, பாவியா? பாவத்தைப் போக்க இரட்சகரால் முடியுமானால், அவர் தான் அதிக வல்லமையுள்ளவர். நல்லது, அவர் ஏன் முதலாவதாக பாவம் தோன்ற அனுமதித்தார்? அவர் இரட்சகர் என்று காண்பிக்க. யாருக்கு அதிக வல்லமையுண்டு, சுகமளிப்பவருக்கா, வியாதிக்கா? (சபை - சுகமளிப்பவர் என்கிறது) சுகமளிப்பவருக்கு. அப்படியானால் அவர் ஏன் வியாதியை அனுமதித்தார்? அவர் சுகமளிப்பவர் என்று காண்பிக்க நான் இப்பொழுது பக்தி பரவசப்படுகிறேன்! ஆம் ஐயா) ஓ, என்னே, அது அவருடைய தன்மைகள் (attributes). ஆகையால் தான் அவர் கஷ்டம் வர அனுமதிக்கிறார். ஆகையால் தான் அவர் துன்பம் வர அனுமதித்தார் - அவர் சந்தோஷம் என்பதைக் காண்பிக்க. நிச்சயமாக அது தான். ஆகையால் தான் நாம் இரவைப் பெற்றிருக்கிறோம் - பகல் ஒன்றுண்டு என்பதைக் காண்பிக்க. ஆகையால் தான் நமக்கு கோபம் சுபாவம் உள்ளது - சமாதானம் உண்டு என்பதை காண்பிக்க. நிச்சயமாக. அது ஆதரவாகவும் எதிராகவும் உள்ளவை (pro and Con). ஓ, அவர் அற்புதமானவர். 33. அது எப்படி துவங்கினது (இதற்கு நேரடியாக துரிதமாக வருவோம், அப்பொழுது உங்களை முழு இரவும் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இராது). இவை எல்லாவற்றிற்கும் ஒரு துவக்கம் இருந்திருக்க வேண்டும். உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். இதை உங்கள் பாக்கெட்டில் மறைத்து வைத்துக் கொள்ளுங்கள், இதை வெளியரங்கமாக்க வேண்டிய அவசியமில்லை. இதை கவனியுங்கள். நீங்கள் நித்திய சிருஷ்டியாயிருப்பீர்களானால், உங்களுக்கு துவக்கமும் இருக்கவில்லை, முடிவும் இராது. ஏனெனில் ''நித்தியம் என்னும் சொல் துவக்கமும் முடிவுமில்லாத ஒன்று என்று பொருள்படும். இன்று காலை நான் கூறினது உங்களுக்கு ஞாபகமுள்ளதா? ஆபிரகாம் ராஜாக்களை முறியடித்து திரும்ப வருகிற போது மெல்கிசேதேக்கு அவனை சந்திக்கிறார். லேவி தன் தகப்பனாகிய ஆபிரகாமின் அறையிலிருந்த போதே மெல்கிசேதேக்கு தசமபாகம் செலுத்தினான் என்று வேதம் எபிரேயர் 7-ம் அதிகாரத்தில் கூறுகிறது. ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு லேவியைப் பெற்றான். அது தகப்பனார், பாட்டனார், முப்பாட்டனார். லேவி தன் முப்பாட்டனாரின் அறையிலிருந்த போதே, மெல்கிசேதேக்கு தசமபாகம் கொடுத்ததாக வேதம் அவனைப் பாராட்டுகிறது. நித்தியத்தைக் குறித்து பேசுவோம். என்னே.! என்னே.! 34.அவன் அடையாளமாக அதைச் செய்தான் என்று கூறவில்லை. ஆனால் அவன் அதை மறைமுகமாக செய்தான். அவன் தசமபாகம் செலுத்தினான் என்று வேதம் வலியுறுத்துகிறது. ஆமென்.! அப்படியானால் நாம் சரியான சந்ததியில் தோன்றியிருப்போமானால், பவுல் சுவிசேஷத்தைப் பிரசங்கித்த போது நான் அங்கு இருந்தேன், நீங்கள் அங்கு இருந்தீர்கள். அதற்கு இன்னும் ஒரு நிமிடத்தில் நாம் வரப்போகிறோம். அதை நம் காதுகளினால் கேட்கப் போகிறோம். அப்படித் தான் வேதாகமம் நம்மிடம் உரிமை பாராட்டுகிறது. அது எத்தனையோ காலத்துக்கு முன்பு செல்கிறது. இதை சிந்தித்துப் பாருங்கள். லேவி, பிறகு யாக்கோபு அவன் தகப்பன்; பிறகு அவன் தகப்பனாகிய ஈசாக்கு; அதன் பிறகு அவன் தகப்பனாகிய ஆபிரகாம் - லேவியின் முப்பாட்டனார். லேவி தன் முப்பாட்டனாரின் அரையிலிருந்த போதே மெல்கிசேதேக்குக்கு தசமபாகம் செலுத்தினான். 35. உங்களை ஒன்று கேட்கிறேன். யோபு:38ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள இவர்கள் யார்? கர்த்தர் யோபுவிடம், ''நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிற போது நீ எங்கேயிருந்தாய்? அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி தேவ புத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே,'' என்றார். (யோபு 38:4,7). கெம்பீரித்த இந்த தேவபுத்திரர் யார்-? இயேசு அவர்களிடம், “உலகத் தோற்றத்துக்கு முன் நான் உங்களோடு சந்தோஷமாயிருந்தேன்'' என்றார். நாம் கால வரையுள்ள சிருஷ்டிகள் அல்ல, நாம் நித்தியத்தின் சிருஷ்டிகள், ''பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். என்னிடத்தில் வருகிறவர்களுக்கு நான் நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன்; கடைசி நாளில் நான் அவனை எழுப்புவேன். அவர் எனக்குத் தந்தவர்களின் ஒருவனையும் நான் இழந்து போகமாட்டேன். ஒருவனும் அவர்களை என் கையிலிருந்து பறித்துக் கொள்வதுமில்லை. ''அப்படியிருக்க நீங்கள் எப்படி இழக்கப்படுவீர்கள்? பாருங்கள், நீங்கள் பயப்படுகிறீர்கள். நீங்கள் ஒவ்வொரு இடத்துக்கும் ஓடுகின்றீர்கள். அதுவே நீங்கள் எங்கும் இல்லை என்பதற்கு உலகத்திலேயே மிகப் பெரிய அத்தாட்சி. அது உண்மை. 36. தேவன் முடிவற்றவராயிராமல் போனால் உங்களை எப்படி இரட்சிக்க முடியும்? இந்த சபையிலுள்ள எத்தனை பேர் கைகளையுயர்த்தி தேவன் முடிவற்றவர் என்று கூறமுடியும்? ''முடிவற்றது (infinite) என்னும் சொல் எதைக் குறிக்கிறது தெரியுமா? பரிபூரணமானது. முடிவற்றது. அந்த சொல்லை உங்களால் விவரிக்க முடியாது. உங்கள் புகைப்படக் கருவியை எடுத்து அதை ''முடிவற்றது'' என்பதற்கு பொருத்தினதுண்டா? அப்படியானால், அதிலிருந்து என்று அர்த்தம். நீங்கள் புகைப்படக் கருவியை அதற்கு மேல் பொருத்த முடியாது. அப்படித்தான் தேவன் இருக்கிறார் - அவர் முடிவற்றவர். அவர் முடிவற்றவராயிருந்தால், உலகத் தோற்றத்துக்கு முன்பு அவர் அறியாத ஒரு வண்டு, ஒரு ஈ, ஒரு பேன், ஒரு எலி, ஒரு மிருகம் எதுவுமே இருக்க முடியாது. பூமியிலிருந்ததும் இனி பூமியில்லிருக்கப் போவதுமான அனைத்தையும் தேவன் உலகத் தோற்றத்துக்கு முன்பே அறிந்திருந்தார். ''முடிவற்றவர்'' என்பதைக் குறித்து இது ஒரு சிறிய கருத்து. 37. நல்லது. உங்களை இங்கு இரட்சிக்கும் முடிவற்ற தேவன், அடுத்த வாரம், அடுத்த மாதம் அல்லது அடுத்து ஆண்டு உங்களை இழந்துவிடப் போவதாக அறிந்திருப்பாரானால், அது அவருடைய நோக்கத்தையே தோல்வியடையச் செய்யும். அவர் உங்களை இழந்து போகமாட்டார். ''என் வசனத்தைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்'' அவர் அப்படி செய்ய முடியாது. நீங்களு ம் இனிமேல், “தேவனால் பிறந்த எவனும் பாவஞ் செய்யான். ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது. ஆகவே அவனால் பாவம் செய்ய முடியாது. (1:யோவான்; 3:9). அவனுக்காக ஒரு பாவ நிவாரண பலி இருக்கும் போது, அவனால் எப்படி பாவம் செய்ய முடியும்? நான் முழுவதும் ஆரோக்கியமுள்ளவனாயிருக்கும் போது, எப்படி வியாதியாயிருக்க முடியும்? என் கண்களால் காண முடியும் போது, நான் எப்படி குருடாயிருக்க முடியும்? ஓ, என்னே.! நான் எப்படி கட்டிடத்தின் உள்ளேயும் வெளியேயும் இருக்க முடியும்? நான் ஒரே நேரத்தில் எப்படி குடித்து வெறித்தும் சுய நினைவிலும் இருக்க முடியும்? அப்படியிருக்க முடியாது. நீங்கள் இரட்சிக்கப்படும் போது, பலியின் கீழ் வந்து விடுகிறீர்கள், அப்பொழுது உங்கள் பாவங்கள் உங்கள் கணக்கில் எடுக்கப்படுவதில்லை. 38. ''எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவன் என்று தாவீது கூறவில்லையா? (சங்.32:2). அவனுக்கு விரோதமாக தேவன் பாவத்தைக் கணக்கெடுப்பதில்லை. இது வலிமையான உபதேசம், இது வெண்ணெய் எடுக்கப்பட்ட பால் அல்ல; இது வேத உபதேசம் நீதிமான்களுடைய கணக்கில் தேவன் பாவத்தை எடுப்பதில்லை. தேவன், அவருடைய கிருபையினால், முன்குறித்தலின் மூலம், ''ஒருவரும் கெட்டுப் போகாமல் எல்லோரும் மனந்திரும்ப வேண்டுமென்று தேவன் விரும்புகிறார்'' (2 பேதுரு 3:9). ஆனால் அவர் முடிவற்றவராயுள்ளதால், யார் வருவார்கள், யார் வரமாட்டார்கள் என்பதை முன்னறிந்தவராய், எல்லாம் தமது சித்தத்தின்படி நடக்க அவர் முன் குறிக்கிறார். அவர் அப்படி செய்யவில்லையென்றால், அவர் ஏன் முதலாவது பாவத்தை அனுமதிக்க வேண்டும்? அவர் இரட்சகராயிருந்த போது... பாவி ஒருவன் இல்லையென்றால், அவர் இரட்சகராகவே இருந்திருக்க முடியாது, அவருக்குள் இருந்த தன்மை வெளியரங்கமாக வந்திருக்காது. 39.அவர் எப்படி சுகமளிப்பவராக ஆனார்? அவர் எப்படி சுகமளிப்பவராக ஆனார். அவர் வியாதியை அனுமதித்த காரணத்தால், அவர் தம்மை சுகமளிப்பவர் என்று காண்பிக்க முடிந்தது. அவர் சுகமளிப்பவர். அவர் சுகமளிப்பவராக எப்படி.... அவர் சுகமளிப்பவராக எப்படி அறியப்பட முடியும்? அந்த அவருடைய தன்மை எப்படி கிரியை செய்திருக்கும்? வியாதி இல்லாமல் போயிருந்தால், அவர் எப்படி சுகமளிப்பவராக இருந்திருக்க முடியும்? அவர் வியாதியை அனுமதிக்க வேண்டியிருந்தது. ரோமர்: 8-ம் அதிகாரத்தில் பவுல், ''புத்தியீனனே, குயவனிடம் அவன் என்ன செய்ய வேண்டுமென்று யார் கூறமுடியும்?'' என்கிறான். (ரோமர் 9:20-21). களிமண், “நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா?'' எகிப்திலே தம்முடைய மகிமையைக் காண்பிக்க வேண்டுமெனும் நோக்கத்துடன் அவர் பார்வோனை எழுப்பவில்லையா? அவர் யாரைக் கடினப்படுத்த சித்தமாய் இருக்கிறாரோ, அவர்களைக் கடினப்படுத்துகிறார். அவர் யாரை நீதிமானாக்கச் சித்தமாயிருக்கிறாரோ, அவர்களை நீதிமான்களாக்குகிறார். ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்'' (ரோமர் 9:16). எனவே உனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. நீ செய்யக் கூடியது ஒன்றுமில்லை. அது கிருபையாயிருக்குமானால், இலவசமாக அளிக்கப்படும் ஈவாக இருக்குமானால், அதைக் குறித்து நீ ஒன்றுமே செய்ய முடியாது. தேவன் அதை உனக்கு அளித்திருக்கிறார். அது தேவனுடைய சித்தம். அதை தேவன் உனக்கு முன் குறித்திருக்கிறார். 40. நாம் உலகத் தோற்றத்துக்கு முன், சுவிகாரப்புத்திரராகவும், தேவனுடைய புத்திரராகவும் முன்குறிக்கப்பட்டிருக்கிறோம் என்று வேதம் கூறுகிறது. அப்படியானால், தேவன் தமது தன்மைகளை நிரூபிப்பதற்கென உலகத் தோற்றத்துக்கு முன்பு தமது சிந்தையில் ஆட்டுக் குட்டியானவரை கொன்ற போது... ஆட்டுக் குட்டியானவர் அடிக்கப்பட்ட போது, நாமும் அவருடன் கூட அடிக்கப்பட்டோம். உலகத் தோற்றத்துக்கு முன்பு அவருடைய சிந்தையில் ஆட்டுக் குட்டியானவருடைய இரத்தம் வந்த போது, என் பெயரும், உங்கள் பெயர்களும் அப்பொழுது புஸ்தகத்தில் எழுதப்பட்டு விட்டது. எல்லாமே அவருடைய மகத்தான சிந்தையில். அவர் முடிவற்றவர். அவர் அப்படி இல்லை என்றால், பின்னை ஏன் அவர் அதை அனுமதித்தார்? 41.நான் சற்று முன்பு கூறினது போல், யார் பலசாலி? இரட்சகரா, பாவியா? யாருக்கு அதிக பெலன் உள்ளது? அதிக பெலன் கொண்டவர், சிறிது பெலன் கொண்டவரை அனுமதிக்க வேண்டியதாயிருந்தது. அதை அவர் தமது மகிமைக்கென்று செய்தார். அவர் லூசிபரை உண்டாக்கின போது, அவன் பிசாசாயிருப்பான் என்று அவர் அறிந்திருந்தார். அவர் இரட்சகராகிய கிறிஸ்து என்பதை வெளிப்படுத்த அவர் அதை அனுமதிக்க வேண்டியதாயிருந்தது. தேவனிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது என்று வேதம் கூறவில்லையா? சபையோர் (ரோமர்;8:28) “ஆமென்” என்கின்றனர். எனவே நீங்கள் எதைக் குறித்து பயப்படுகிறீர்கள்? ஆகையால் என்ன நடந்தாலும். மனம் தளராமல் நாம் எழுந்து நமது பணியைச் செய்வோம். வாயில்லாத ஆடு, மாடுகளைப் போல் உங்களிடம் கெஞ்சவோ, உங்களைச் செய்யும்படி தூண்டவோ நீங்கள் வைத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் வீரனாயிருங்கள் அது எனக்குப் பிரியம். தைரியமாக எழுந்து நில்லுங்கள். 42.நான் சிறுவனாயிருந்த போது இந்த சிறு கவிதை எனக்கு மிகவும் உபயோகமாயிருந்தது. ரோம சக்கரவர்த்தி நாட்களில், ஒரு ரோம வீரன் இருந்தான்; ஒரு கோழை கோட்டைக்கு முன்னால் நின்று, இப்படி சொல்வதைக் கேட்டான்: இந்த தேவதாரு மரத்தின் கீழ் பாதுகாப்பாயுள்ளது, அதை யாருமே அசைக்க முடியாது. ஆனால் வீரனோ ''ஓ, இல்லை,“ ''நான் வழி கண்டுபிடிப்பேன்.'' ''அல்லது உண்டாக்குவேன்“ என்றான். பார்த்தீர்களா? அது உண்மை. 43. இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று இந்த வேதம் போதிக்குமானால் அது எளிதாய் இருக்கவில்லை. அந்த நாள் இந்த கூடாரத்தை விட்டு நான் வெளியே சென்ற போது, எல்லோருமே என்னிடம் இப்படி நடக்கும் அப்படி நடக்குமென்று கூறினர். ''நீ மூடமதாபிமானியாய் கருதப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவாய்'' மருத்துவ சங்கம் அனைத்தும் உனக்கு விரோதமாய் எழும்பும்'' என்றனர். ஆனால் தேவனோ, “அதை செய்!'' என்றார். அவர் மாறாதவர் என்று வேதம் கூறுகிறது. இப்பொழுது வானத்தின் கீழுள்ள ஒவ்வொரு நாட்டிலும் எழுப்புதல் தீ எரிந்து கொண்டிருக்கிறது.! ஏன்? அதற்கு உண்மையாக எழுந்து நில்லுங்கள் உன் அன்றாடம் வேலையை எப்படி செய்கிறாய்? அதைக் கண்டு பயப்படுகிறாயா? உனக்கு முன்னால் உள்ள வேலைக்கு நீ நிற்க முடியுமா? உனக்கு களைப்பும் காலியுமான சிந்தை உள்ளதா? (அது எனக்குப் பிடிக்காது!) உனக்கு முன்னால் உள்ள வேலைக்கு நின்கின்றாயா? அல்லது பயம் அதன் வழியாக ஓடுகின்றதா? அப்படியானால் உனக்கு கிடைக்கும் அடுத்த வேலையை செய்யப் போகிறேன் என்று நினைத்து அதை செய். அதில் நிலைத்திரு. நிச்சயமாக. தானியேலைப் போல், இருதயத்தில் வைத்து சிந்தனை செய். தேவனுடன் தங்கியிரு. 44.“இவையெல்லாம் எங்கு நிகழ்ந்தன? அது எப்படி நிகழ்ந்தது? எது ஜனங்களை எவ்வாறு செய்கின்றது? ''நாம் ஏன் அழிக்கப்படும் நேரத்தில் இருக்கிறோம்? சகோ. பிரான்ஹாமே, எனக்கு விளக்கித்தாரும். எல்லாருமே அழிந்துபோக வேண்டும் என்று நீர் நினைக்கும் காரணம் என்ன?'' அது முன்பு ஒரு சமயம் அழிக்கப்பட்டது. (அது சரியா?) ஜலப்பிரளயத்தின் போது. (இப்பொழுது சில ஆழமான காரியங்கள் வருகின்றன. அதை படிக்க நாம் ஆயத்தமாவோம்). 45.இப்பொழுது நீங்கள் என்னுடன் ஆதியாகமம் 3-ம் அதிகாரத்துக்கு திருப்ப விரும்புகிறேன். நீங்கள் ஏதாவதொன்றை அறிய விரும்பினால், இன்று நாம் பெற்றுள்ள எல்லா ''பிரத்தியேகக் கொள்கைகளும் (Cult), எல்லா தத்துவங்களும்'' (isms) ஆதியாகமத்தில் துவங்கின என்று என்னால் உங்களுக்குக் காண்பிக்க முடியும். ''ஆதியாகமம்“ என்றால் ”தொடக்கம்'' என்று பொருள் என்று எத்தனை பேருக்குத் தெரியும்? நிச்சயமாக. தொடக்கத்தில் நாம் கத்தோலிக்க சபையை நிம்ரோத் என்பவன் ஸ்தாபித்த பாபிலோனில் காண்கிறோம். அதை நாம் வேதாகமத்தின் நடுவில் காண்கிறோம்; அதை வேதாகமத்தின் கடைசியிலும் காண்கிறோம். பெண் பிரசங்கிகளை உள்ளே கொண்டு வர முனைதலை நாம் வேதாகமத்தின் தொடக்கத்தில் காண்கிறோம். வேர்களிலிருந்து உண்டாக்கப்பட்ட சிறு விக்கரங்களைத் தொழுதலையும் நாம் காண்கிறோம்; அதை வேதாகமத்தின் கடைசியிலும் காண்கிறோம். பெண் பிரசங்கிகளை உள்ளே கொண்டு வர முனைதலை நாம் வேதாகமத்தின் தொடக்கத்தில் காண்கிறோம். வேர்களில் இருந்து உண்டாக்கப்பட்ட சிறு விக்கிரகங்களைத் தொழுதலையும் நாம் காண்கிறோம். ஹிஸ்-லப் என்பவர் எழுதிய, ''இரு பாபிலோன்கள் வரலாற்றுப் புஸ்தகத்தை எத்தனை பேர் படித்திருக்கிறீர்கள்? இந்த வரலாறுகளில் அவர்கள் ஒரு ஸ்திரீயை.... உங்களுக்கு ஞாபகமுள்ளதா, யாக்கோபும் கூட தன் மாமனாரின் விக்கிரகத்தை திருடிக் கொண்டான். அவனுடைய மனைவி அதை அவளுக்கடியில் ஒளித்து வைத்தாள். அவர்கள் அதை வனாந்தரத்தில் வெளியே எடுத்தார்கள். அது பிறகு பாளயத்தை அசுசிப்படுத்தினது. 46. அது சரி. இப்பொழுது நாம் ஆதியாகமத்திலிருந்து படிப்போம்: தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்க வேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது. ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து: நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம்; ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து, தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள். அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும்...... (பார்த்தீர்களா? புதிய வெளிச்சத்தைத் தேடுதல்)..... நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப் போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது. ஆதி. 3:1-5. 47. பாருங்கள், எப்படி இவர்கள் வேதத்திலுள்ளவைகளை எடுத்துப்போட முயல்கின்றனர் என்று, ''ஊற்றுதல் அல்லது தெளித்தல், இந்த விதமானாலும் அந்த விதமானாலும் மிகவும் எளிது'' என்கின்றனர். இல்லை, ஐயா.! தேவன் ஒன்றை கட்டளையிட்டால், அதை நாம் கைக்கொள்ள வேண்டியவர்களாய் இருக்கிறோம். (சகோ.பிரான்ஹாம் தம்முடைய வேதாகமத்தை சுட்டிக் காட்டுகிறார்). அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப் படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதன் கனியைப் பறித்து புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான். அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டு பண்ணினார்கள். ஆதி. 3:6-7 48. இங்கு ஒரு நிமிடம் நிறுத்த விரும்புகிறேன். ஒவ்வொன்றுக்கும் ஒரு தொடக்கம் இருந்தாக வேண்டும். உங்களுக்கு ஒரு தொடக்கம் இருந்தது. இங்கு தான் கடைசி இரண்டு கூட்டங்களில் நான் பேசினவைகளை ஆதாரமாகக் கொள்ள விரும்புகிறேன். இன்று காலை நாம் ஆதி காலத்தைக் குறித்து வேதத்தில் காணப்படுபவைகளை நாடக வடிவில் சித்தரித்தோம். தேவன் பூமியை உண்டாக்கின போது, அவர் வாயுக்களை உருவாக்கினார். (அந்த வாயுக்கள் கால்சியம், பொட்டாஷ் போன்றவைகளாக மாறின). அவர் உங்கள் சரீரத்தையும் உண்டாக்கினார். அவர் சிறந்த கட்டிடம் கட்டுபவர் - ஒரு கான்ட்ராக்டரைப் போல் - வீட்டைக் கட்டுவதற்கு வேண்டிய பொருட்களை அங்கு வைத்திருந்தார். உங்கள் சரீரத்தையும் அவர் உண்டாக்கி அதை அங்கு வைத்தார். என்ன செய்யப்பட வேண்டுமென்பதை அவர் தமது சிந்தையில் அப்படியே அறிந்திருந்தார். இந்த கை... அவர் உலகத்தை உண்டாக்கின போது, இந்த கையையும் உண்டாக்கினார். ஆனால் என் ஆவியை, உலகம் என்று ஒன்று உண்டாவதற்கு முன்பே உண்டாக்கி விட்டார். ஆனால் இந்த கையையும் இந்த சரீரத்தையும், அவர் உலகத்தை உண்டாக்கின போது உண்டாக்கினார். ஏனெனில் இந்த சரீரம் பூமியிலிருந்து உண்டாகி மறுபடியும் பூமிக்குத் திரும்புகிறது. தேவன் அதை உண்டாக்கினார், தேவன் தமது மகத்தான வரைபடத்தில் அதையும் தமது திட்டத்தையும் வரைந்திருந்தார். அவர் பூமியை உண்டாக்க சென்ற போது, மனிதனை உண்டாக்கினார். மனிதன் சரியாக காணப்படவில்லை. 49. இன்று காலை அதை நாம் நாடக வடிவில் கண்டோம்: எப்படி பிதா இறங்கி வந்து தமது சாயலில் உண்டாக்கப்பட்ட தமது குமாரனை நோக்கினார் என்று. பிறகு அவனுக்குத் துணையாக ஒரு மனைவியை உண்டாக்கினார். இதை ஞாபகம் கொள்ளுங்கள், பூமியிலிருந்து எல்லா சிருஷ்டிகளுக்கும் ஆதாம் பெயரிட்டான். அவர் ஆடுமாடுகளையும், மிருகங்களையும் மற்றெல்லாவற் றையும் உண்டாக்கினார். இன்று விஞ்ஞானத்தில் சிறந்த அறிவாளிகள் ஆறாயிரம் ஆண்டுகளாக காணாமற்போன இணைப்பை (missing link) கண்டு பிடிக்க முயன்று வருகின்றனர். ஏன் அந்த மிருகம்... மனிதனும் ஒரு மிருக ஜீவன் என்று நமக்குத் தெரியும். ஸ்திரீ மனிதனின் ஒரு பாகம் - ஒரு உப-பொருள் (ஸ்திரீ மூல சிருஷ்டிப்பில் இடம் பெறவில்லை. தேவன் சிருஷ்டிப்பதை நிறுத்தி எத்தனையோ ஆண்டுகள், ஆண்டுகள், ஆண்டுகள், சென்ற பின்பு, மனிதனின் விலாவெலும்பிலிருந்து ஸ்திரீயை உண்டாக்கினார்). 50.ஆதாம் எல்லா சிருஷ்டிகளுக்கும் பெயரிட்டான். ஆனால் அவனுக்குத் துணையாருமில்லை. எனவே தேவன் அவனுக்குத் துணையை உண்டாக்கினார். அவர் அவனுடைய விலாவிலிருந்து விலாவெலும்பை எடுத்து, அந்த துவாரத்தை மூடி, அவனுக்கு ஒரு துணையை உண்டாக்கினார். மனிதன் தன்னுடைய ஆவியில், ஆணும் பெண்ணுமாக இருந்தான். ஸ்திரீ மனிதனின் ஒரு பாகமே. ஒரு மனிதன் தனக்கென ஒரு மனைவியைத் தெரிந்து கொள்ளும் போது, அவள் சரியாக அவனுடைய மனைவியாக - தேவனால் கொடுக்கப்பட்ட மனைவியாக இருப்பாளானால், அவள் அவனுடைய பாகமாக இருப்பாள். அதன் காரணமாகத் தான் குடும்பங்களில் இன்று அநேக சச்சரவுகள் உண்டாகின்றன. ஏனெனில் நீ வெளியே செல்லும் போது, அழகான பழுப்பு நிறக் கண்கள் அல்லது நீல நிறக் கண்களையுடைய, அழகான உடலுருவம் கொண்ட பெண்ணைக் கண்டு, அவள் அழகில் மயங்குகிறாய். அவள் முதலாம் குழந்தையைப் பெற்றெடுத்தவுடன், அவளுடைய பற்கள் வெளியே வந்து விடுகின்றன, அவளுடைய தோல் சுருங்கி வயதாகி விடுகிறது. அப்பொழுது அவளை உதைத்து வெளியே அனுப்பிவிடப் பார்க்கிறாய். பெண்களாகிய உங்களில் சிலர் அழகிய சுருண்ட தலைமயிர் கொண்ட பையன் ஒருவனை சந்திக்கிறீர்கள். அவனுடைய தாயின் எண்ணெய் குப்பியிலுள்ள பாதி எண்ணெயை அவன் தலையில் ஊற்றி தலைவாரிக் கொண்டிருக்கிறான். ஆனால் தலைமயிர் உதிர்ந்து போக வழியுண்டு. அதை என் அனுபவத்தில் அறிந்து இருக்கிறேன். என்ன நேரிடுகிறது? அது என்ன? நீங்கள் தலை மயிரைக்கண்டு மயங்கி விடுகிறீர்கள். நீங்கள் முதலில் ஜெபம் செய்ய வேண்டும். ஏனெனில் ஸ்திரீ மனிதனின் ஒரு பாகமாக இருக்கிறாள். ஒரு ஸ்திரீயை நீங்கள் கட்டித்தழுவி அவளை உங்கள் மனைவியாக ஏற்றுக் கொண்டால், அவள், உங்கள் மேல் ஒரு முத்திரையை (imprint) போட்டு விடுகிறாள்.... (நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்படி கூறுகிறேன்..... அந்த மார்பில் கட்டித் தழுவப்படும் வேறெந்த பெண்ணும் அந்த முத்திரையில் பொருந்தமாட்டாள். அதற்கு தேவன் உங்களை உத்திரவாதம் உள்ளவர்களாகச் செய்வார், அதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். 51. வேறொருவரின் மனைவியை நீங்கள் வெளியே கூட்டிச் சென்றால்... இன்று ஒரு சிறு பெண்ணைக் குறித்து கேள்விப்பட்டேன், ஏழைப் பெண், அவளை எனக்குத் தெரியும்.... ஏதோ ஒரு சூதாட்டக்காரன் அவளுக்கு அழகிய துணிகளை வாங்கிக் கொடுத்து அவளை வசப்படுத்திக் கொண்டான். அப்படிப்பட்ட செயலைப் புரியும் ஒரு எலி, மனிதனாகவே கருதப்பட முடியாது. ஒரு நாய் அவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்வதில்லை. இருப்பினும் நீங்கள் தாய் நாயை ''ஸ்லட்'' (slut) என்றழைக்கிறீர்கள். அதற்கு ஜெபர்ஸன்வில்லில் உள்ள பெண்களில் பாதி பேர்களைவிட அதிக நல்லொழுக்கம் உள்ளது. நீங்கள் பன்றியை ''சோ'' (sow) என்றழைக்கிறீர்கள். அதற்கு அமெரிக்க ஐக்கிய நாடுகளிலுள்ள பல பெண்களைக் காட்டிலும் அதிக நல்லொழுக்கம் உள்ளது. அது முற்றிலும் உண்மை. அது மிகவும் வெளிப்படையாக கூறப்பட்டதென்று அறிவேன். அதை உங்களுக்கு ஆணித்தரமாகப் பதியச் செய்யப் போகிறேன் என்று ஏற்கனவே கூறினேன். இதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அது உண்மை. இப்பொழுதெல்லாம் ஸ்திரீகளுக்கு நல்லொழுக்கம் என்றால் என்னவென்று தெரிவதில்லை. “அது என் மனச்சாட்சியை நோகச்செய்கிறதில்லை'' என்கிறீர்கள். உங்களுக்கு மனச்சாட்சியே இல்லை.! ஆம், ஐயா, அது இருந்தால் தான் எது சரி, எது தவறு என்று உங்களால் அறிந்து கொள்ள முடியும். 52. மனிதன் சிருஷ்டிக்கப்பட்ட போது தேவன் அவனுடைய ஆவியைப் பிரித்தார். அவர் மனிதனுடைய விலாவிலிருந்து ஒரு துண்டை எடுத்து, அவனிலிருந்து ஒரு ஸ்திரீயை உண்டாக்கினார். அதன் பிறகு அவர் மனிதனிலிருந்த பெண்ணின் ஆவியை எடுத்து, அதைக் கொண்டு ஒரு ஸ்திரீயை உண்டாக்கினார். அவர் மனிதனை ஆண்மையுள்ளவனாக, திடகாத்திரமுள்ளவனாக படைத்தார். ஒரு மனிதன் தன் விரல் நகங்களுக்கு வர்ணம் பூசி (ஒரு கையில் நான்கு விரல்களையும் மற்ற கையில் ஐந்து விரல்களையும்), தன் தலைமயிர் கீழே விழுவது போல் அழகாக சீவிக்கொண்டு, முன்னால் தன் வாயை பிளந்து கொண்டிருப்பதை நீங்கள் கண்டால் - அந்த அழகிய பையன்களில் ஒருவன் - அவன் பெண்மைத்தனம் கொண்டவன் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். உங்கள் பார்வை அவன் மேல் இருப்பது நலம். 53. ஒரு பெண் வாயின் ஓரத்தில் சிகரெட் வைத்து புகைத்து, மேல் ''கோட்டு ஒன்றை அணிந்து, “பையன்களே, அது என்னவென்று உங்களுக்குச் சொல்கிறேன்'' என்று கூறினால், சகோதரனே, அந்தப் பெண்ணை கவனித்து வாருங்கள். அவளுக்கு ஏதோ தவறுள்ளது. ஒரு ஸ்திரீ, ஸ்திரீயாக இருந்து ஸ்திரீயைப் போல் உடை உடுக்க வேண்டும். தேவன் மனிதனை உண்டாக்கின போது அவனை ஒரு விதமாகவும், ஸ்திரீயை வேறு விதமாகவும் உண்டாக்கினார். தேவன் மனிதனை உடுத்தின போது, அவனை ஒரு விதமாகவும் பெண்ணை வேறொரு விதமாகவும் உடுத்தினார். புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிப்பது தேவனுக்கு அருவருப்பானது என்று வேதம் கூறுகிறது (உபா. 22:5). 54. ஸ்திரீகளாகிய நீங்கள் இந்த கால்சட்டைகளை அணிந்து செல்வது... அவைகளை என்னவென்று அழைக்கிறீர்கள்? “நிக்கர் பாக்கர்ஸ்'' (knicker bockers).... இல்லை, அவைகள் குட்டை கால்சட்டைகள் அல்ல, நீண்ட கால்கள் உள்ளவை. பெடல் புஷர்களும் ஓவர் ஆல்களும்.! டுங்காரீஸ்.! போன்றவை. அவர்கள், “இது லேடீஸ் (ladies) களுக்கு'' என்றனர். நான், ''இல்லை, நீங்கள் கூறுவது தவறு. லேடீஸ் இதை அணிவதில்லை'' என்றேன். ஸ்திரீகள் இதை அணியலாம், ஆனால் லேடிஸ் இதை அணிய மாட்டார்கள் ('லேடீஸ்' என்னும் சொல் நற்பண்புள்ள பெண்ணைக் குறிக்கிறது - தமிழாக்கியோன்). அது உண்மை. அப்படிப்பட்ட உடைகளை ஸ்திரீகள் தரிப்பது அருவருப்பானது. அப்படிப்பட்ட ஸ்திரீகளின் உடையை மனிதன் தரிப்பதும்... ஒவ்வொரு நாளும் மனிதர் அதிக பெண்மையுள்ளவர்களாவும், பெண்கள் அதிக ஆண்மையுள்ளவர்களாகவும் ஆகி வருகின்றனர். என்ன விஷயம்? (இன்னும் சில நிமிடங்களில் அதை வேதத்தின் வாயிலாக கண்டறியப் போகிறோம்). ஸ்திரீகள் இப்பொழுது ஸ்திரீகளாக இல்லை. நான் கிறிஸ்தவ ஸ்திரீகளாகிய உங்களை குறிப்பிடவில்லை. நான் பொதுவான போக்கைக் குறித்தே பேசுகிறேன். அவர்கள் மனிதரைப் போல் நடந்து கொள்ள விரும்புகின்றனர். அவர்கள் மனிதரைப் போல் தலைமயிரை கத்தரித்துக் கொண்டு, வாயின் ஓரத்தில் சிகரெட்டை வைத்துக் கொண்டு, ஒரு கட்டையின் மேல் கையைப் போட்டு, தேவன் அமெரிக்காவை ஆசீர்வதிப்பாராக என்று பாடுகின்றனர். 55. நீங்கள் நெடுஞ்சாலைக்குச் சென்று பாருங்கள்.... உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். பெண் காரோட்டிகளே, கேளுங்கள். தேசம் முழுவதிலும் நடந்து சென்ற சுவிசேஷக் கூட்டங்களின் போது, நானும், பில்லிபாலும் ஆறு மாத காலமாக காரோட்டி செல்ல நேர்ந்தது. அப்பொழுது வழியில் கண்ட விபத்துகளை நான் கணக்கெடுத்தேன்..... சாலையில் நடந்த 300 விபத்துகளில், எத்தனை விபத்துகள் பெண் காரோட்டிகளால் நேர்ந்தது என்று ஊகித்து சொல்லுங்கள்.! அவைகளில் 19-விபத்துகளே ஆண்களால் நேர்ந்தவை. மற்ற 281-விபத்துகளுக்கும் பெண் காரோட்டிகளே காரணம். நல்ல பெண் காரோட்டிகள் இல்லையென்று நான் சொல்ல வரவில்லை. அவள் எந்த பக்கத்திலும் திரும்பி விடுவாள். அவள் பின்னால் சென்று பாருங்கள். அவள் அழகாக இருந்து, போலீஸ்காரன் வரும் போது அங்கு நின்று கொண்டு தன் தலைமயிரை தூக்கி விடட்டும் பார்க்கலாம்.! அவன், ''நீ செய்தது தவறு'' என்று சொல்லி அவளை விட்டுவிடுவான். நமக்கு சட்டங்களே எதுவும் இல்லை. (அன்றொரு நாள் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் என் வரி வழக்கில் அது நிரூபிக்கப்பட்டது.) “நமக்கு சட்டங்கள் எதுவும் இல்லை.'' 56. அந்த பெரிய இங்கிலாந்து பிரபு, ''ஜனநாயகம் என்பது எல்லாம் பாய்மரமாக உள்ளது. அதில் நங்கூரம் எதுவும் இல்லை“ என்று கூறியதில் வியப்பு ஓன்றுமில்லை. அது உண்மை. தொலைக்காட்சியில் தேர்தல் பிரச்சாரம் செய்தல், ஜனநாயகம் அழுகிப்போன ஒன்று. அவ்வாறே சர்வாதிகாரிகளும் மற்றவர்களும் உள்ளனர். முழுவதுமே அழுகினதாய் உள்ளது. தேவனுக்கு, அவர் கூறினது போன்று, எல்லாவற்றையுமே அழித்து போட்டு புதிதாகத் தொடங்குவதைத் தவிர வேறொன்றும் இல்லை. அவருடைய வருகைக்கு நீங்கள் எவ்வளவு அருகாமையில் இருக்கிறீர்கள் என்பதை கவனியுங்கள்! 57.அவர் இந்த ஸ்திரீயை அவனுக்குத் துணையாக உண்டாக்கினார். அவள் அவனுக்குத் துணையாக இருக்க வேண்டும். எந்த போதகரையும் இன்னும் இதற்கு என்னால் இணங்கச் செய்ய முடியவில்லை. அவர்கள் வேறுவிதமான கருத்தைக் கொண்டவர்களாய் இருக்கின்றனர். ஆனால் அது எனக்கு அர்த்தமுள்ளதாக தென்படவில்லை. ஆதாமும் ஏவாளும் சில ஆப்பிள் பழக்கங்களைத் தின்றதாக அவர்கள் கூறுகின்றனர். சகோதரனே, இதை வேடிக்கையாக கூறவில்லை. நீங்கள் புரிந்து கொள்ள இதை கூறுகிறேன்... ஆப்பிள் பழங்களைத் தின்பது, தாங்கள் நிர்வாணிகள் என்று பெண்களை அறிந்து கொள்ளச் செய்யுமானால், நாம் மறுபடியும் அவர்களுக்கு ஆப்பிள் பழங்களைக் கொடுப்பது நலம். அது உண்மை என்று உங்களுக்குத் தெரியும். ஆப்பிள் பழங்களைத் தின்பது... அவர்கள் செய்தது அதுவல்ல. அது அவர்கள் நிர்வாணிகள் என்று அறிந்து கொள்ளக்கூடிய செயல் நிச்சயமாக. அது இன சேர்க்கை செயல். அது அப்படித் தான் இருக்க வேண்டும். ஏனெனில் புசிக்க வேண்டாம் என்று சொல்லப்பட்ட கனியை அவர்கள் புசித்த போது, அவர்கள் நிர்வாணிகள் என்று அறிந்து கொண்டனர். ஒரு ஸ்திரீ கனி தரும் மரம் அல்லவா-? நீங்கள் உங்கள் தாயின் கனி அல்லவா-? அந்த கனியைத்தான் அவர்கள் புசிக்கக்கூடாது என்று கூறப்பட்டது. 58. இதோ ஒரு பெரிய காரியம். மானிடவர்க்கம் என்னவென்று அறிந்து கொள்ள விஞ்ஞானம் அதற்கு மிக அருகாமையில் இது வரை வந்துள்ளது. அவர்கள் பழைய எலும்புகளைத் தோண்டி எடுக்கின்றனர். அவர்கள் புதைந்து கிடக்கும் மண்டை ஓடுகள், கைகள், எலும்புகள், போன்றவைகளை தோண்டி எடுத்து, அவைகளை ஒன்றாக பொருத்தி, அது மனித உருவம் போல் காணும்படி செய்கின்றனர். மானிட வர்க்கத்தைக் குறித்து அறிந்து கொள்ள அதற்கு நெருங்கிய தோற்றமுள்ள ஒன்றை அவர்கள் இதுவரை கண்டுபிடித்தது.... அதற்கு அடுத்தது மனித குரங்கு. அது மானிடவர்க்கத்து மிக நெருங்கிய தோற்றம் கொண்ட வர்க்கம். ஆயினும் அதற்கும் மானிட வர்க்கத்துக்கும் சம்பந்தமில்லை. ஜீவராசிகளில் மிகவும் கீழாக உள்ளது தவளை. மிகவும் மேலானது மானிட வர்க்கம். தேவன் அடியிலிருந்து தொடங்கி படிப்படியாக உண்டாக்கி முடிவில் தமது சாயலில் மனிதனை உண்டாக்கினார். அவர் பறவைகளையும் மிருகங்களையும் இவ்வாறு மேலே மேலே உண்டாக்கி, முடிவில் தேவன் உடைய சாயலுக்கு வந்தார். அவர் மனிதனை அந்த சாயலில் உண்டாக் கினார். அது தான் மிகவும் மேலான வர்க்கம். மிகவும் கீழான வர்க்கம் தவளைக் குஞ்சு. அது பின்பு தவளையாக மாறினது. 59. அந்த காணாமற் போன இணைப்பு, அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்பொழுது வேத வாக்கியங்களை கவனியுங்கள். உங்களில் அநேகர் இதை ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள். ஆனால் இதை நீங்கள் மனதில் கொண்டவர்களாய், தப்பெண்ணம் கொள்ள வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறோம். கவனியுங்கள். கவனியுங்கள், உங்களில் அநேகர் டாக்டர் டீஹான் - அவர்களின் பிரசங்கத்தைக் கேட்டிருக்கிறீர்கள் என்று அறிவேன். அவர் திறன் கொண்டவர், ஒரு நல்ல பாப்டிஸ்டு சகோதரன்... அவரை நான் பாராட்டுகிறேன். அவர் என்னைக் காட்டிலும் மிகுந்த நுண்ணறிவும், ஞானமும் கொண்டவர். ஏனெனில் அவர் வேதசாஸ்திரத்தில் டாக்டர் பட்டமும், மருத்துவத்தில் டாக்டர் பட்டமும், விஞ்ஞானத்தில் டாக்டர் பட்டமும் பெற்றவர். அவர் அதிக கல்வி ஞானம் கொண்டவர். ஆனால் அவர் என்ன கூறுகிறார் என்றால், தேவகுமாரர் மனுஷ குமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்கள் என்று கண்ட போது... அவர் ஜோசிபஸின் கருத்தை ஆதரித்து, விழுந்து போன தூதர்கள் மானிட சரீரம் கொண்டு மனுஷ குமாரத்திகளுக்குள்ளே பெண் கொண்டார்கள் என்றும், அதன் விளைவாக நோத் என்னும் தேசத்திலே இராட்சதர் தோன்றினார்கள் என்றும், இனச்சேர்க்கை விருப்பம் மோசமானது என்றாலும், அவர்கள் விழுந்து போன காரணத்தால் பாவ சிந்தை கொண்டவர்களாகி, மானிட சரீரம் கொண்டவர்களாய் வந்தார்கள் என்று கூறுகிறார். அவர்கள் அப்படி செய்திருந்தால், தெய்வீக சுகமளித்தலையும் மற்ற எல்லாவற்றையும் பாழ்படுத்தியிருப்பார்கள். பிசாசினால் சிருஷ்டிக்க முடியும் ஆனால், அவன் தேவனுக்கு சமமாகிவிடுவான். பிசாசினால் சிருஷ்டிக்க முடியாது. அவனால் சிருஷ்டிக்க முடியும் என்பதற்கு வேதத்தில் ஒரு இடத்தை ஆகிலும் காட்டுங்கள் பார்க்கலாம். அவனால் சிருஷ்டிக்க முடியாது. ஏற்கனவே சிருஷ்டிக்கப்பட்டதை அவனால் தாறுமாறாக்க மாத்திரமே முடியும். அவன் சிருஷ்டிகன் அல்ல, அவன் தாறுமாறாக்குகிறவன். 60. நல்லது. அப்படியானால் என்ன நடந்தது? கவனியுங்கள். இதோ என் கருத்து. இது தான் காணாமற்போன இணைப்பு. மனிதக் குரங்கு அவர்களிடையே உள்ளது. ஆனால் அவர்கள் மனிதக் குரங்கை ஸ்திரீயுடன் இனசேர்க்கை செய்து குழந்தையைப் பெற முடியாது. மானிட வர்க்கத்தையும் மிருக வர்க்கத்தையும் இனசேர்க்கை செய்ய முடியாது. அது கலவாது. மிருக இரத்தத்தை நீங்கள் மானிடருக்குள் செலுத்த முடியாது. 61. நான் ஆப்பிரிக்காவுக்கு சென்றிருந்த போது..... அவர்கள் அந்த ஏழை கறுப்பு நிற மக்களை அப்படித் தான் நடத்துகின்றனர். ஒருவர் என்னிடம், ''அவர்கள் மிருகங்களே அன்றி, வேறு யாரும் அல்ல'' என்றார். நான், “என்னை மன்னிக்கவும். அவர்கள் உங்களைப் போலவே மானிடர், ஒருக்கால் உங்களைக் காட்டிலும் சிறிது மேலானவர்கள்'' என்றேன். அவர்கள் அத்தகைய மனப்பான்மை கொண்டிருந்தால், மிருகங்களாக மாறிவிடுகின்றனர். நான் அவரிடம், ''அவன் சீட்டுக்கட்டிலுள்ள 'ஏஸ் ஆப்ஸ்பேட்' (ace of spades) போன்று கறுப்பாயிருக்கலாம், அல்லது பூசணிக்காயைப் போல் மஞ்சள் நிறம் உள்ளவனாயிருக்கலாம், நீல சாயத்தை போல் நீல நிறமுள்ளவனாய் இருக்கலாம். ஆயினும் அவன் இரத்தத்தை உங்களுக்குள் செலுத்தி உங்கள் உயிரைக் காப்பாற்றக்கூடும். நீங்கள் மிருக இரத்தத்தை உங்களுக்குள் செலுத்துவதில்லை. நிச்சயமாக அவன், ''ஒரு மனிதன்'' என்றேன். 62. ஒருவருடைய சருமம் கறுப்பாகவும், மற்றொருவர் பழுப்பு நிறம் உள்ளவராகவும், வேறொருவர் மஞ்சள் நிறமுள்ளவராகவும், இன்னுமொருவர் வெள்ளை நிறமுள்ளவராகவும் இருப்பதனால் ஒன்றுமில்லை. தேவன் மனுஷ ஜாதியான சகல ஜனங்களையும் ஒரே இரத்தத்தினால் உண்டாக்கினதாக வேதம் கூறுகிறது (அப். 17:26). அது முற்றிலும் உண்மை. நாம் வசிக்கும் இடங்கள் நமது நிறங்களை மாற்றிவிட்டன. அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. மனுஷ ஜாதியான சகல ஜனங்களையும் தேவன் ஒரே இரத்தத்தினால் உண்டாக்கினார். எல்லா ஜாதிகளும் ஒன்றே. கறுப்பு மனிதன், ''அவன் மஞ்சள் நிறமுள்ள சீனன், அவனுடன் நான் எவ்வித தொடர்பும் கொள்ள மாட்டேன்'' என்று சொல்லக்கூடாது. அவன் உன் சகோதரன். சகோ. பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை அநேக முறை தட்டுகிறார். அவ்வாறே வெள்ளையனும், மஞ்சள் நிறத்தவன் அல்லது கறுப்பு நிறத்தவனை நோக்கி, “உன்னிடம் நான் தொடர்பு கொள்ள மாட்டேன்'' என்று சொல்லக்கூடாது. அவன் உன் சகோதரன். முற்றிலும் உண்மை. 63. இது தான் நடந்ததென்று நான் நம்புகிறேன். அதற்கு வேத ஆதாரம் என்னால் காண்பிக்க முடியும். சர்ப்பம் தான் அதை செய்தது? சர்ப்பம் தான் மனிதனுக்கும் மனிதக்குரங்குக்கும் இடையே இருந்ததும் இப்பொழுது காணாமற் போனது-மான இணைப்பு. இதை கவனியுங்கள். சர்ப்பம் துவக்கத்தில் ஊரும்பிராணியாய் இருக்கவில்லை . அது எல்லா காட்டு மிருகங்களைப் (beast of the filed) பார்க்கிலும் தந்திரமுள்ளதாயிருந்தது. (தமிழ் வேதாகமத்தில் 'காட்டு ஜீவன்கள்' என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது - ஆதி 3:1 - தமிழாக்கியோன்). நான் எல்லாவிடங்களிலுமிருந்து அகராதிகளைக் கொண்டு வந்து 'subtil' என்னும் ஆங்கில சொல்லுக்கு அர்த்தம் நோக்கினேன். அப்படியென்றால் சாமர்த்தியம் உள்ளவன், தந்திரசாலி என்று அர்த்தம். ஆனால் அதற்கென உபயோகிக்கப்பட்ட 'மாஹா' என்னும் எபிரேயச் சொல் ''வாழ்க்கையின் கொள்கைகளைக் குறித்து உண்மையான அறிவு கொண்டவன்'' என்று பொருள்படும். 64. இதை ஒரு நிமிடம் கவனிப்போம். அவன் சாமர்த்தியமுள்ளவன், தந்திரசாலி. இருப்பினும் அவன் சர்ப்பம் என்றழைக்கப்படுகிறான். அவன் அங்கிருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும் சாமர்த்தியமுள்ளவன், காட்டிலிருந்த மற்றெல்லா வற்றையும்விட மானிடருடன் நெருங்கிய தோற்றம் கொண்டவன். அவன் தொடக்கத்தில் ஊரும் பிராணியல்ல. சாபம் தான் அவனை ஊரும் பிராணியாக மாற்றினது. அவன் எல்லாரைக் காட்டிலும் அழகுள்ளவன் என்று வேதம் கூறுகிறது. சாபமும் கூட அவனுடைய அழகை முற்றிலும் எடுத்துப் போடவில்லை. பாம்பின் நிறங்கள் மிகவும் அழகானவை. அது ஊர்ந்து செல்லும் அழகும் அதன் புத்திசாலித்தனமும்.... சாபம் அதை முற்றிலும் எடுத்துப் போடவில்லை. ஆனால் ஞாபகம் கொள்ளுங்கள், அது கால்களை இழந்து போகும் என்றும், வயிற்றினால் நகரும் என்றும் தேவன் கூறினார். இப்பொழுது பாம்பில் காணப்படும் ஒரு எலும்பும்கூட மானிடரின் எலும்புபோல் காணப்படவில்லை. அதன் காரணமாகத் தான் விஞ்ஞானத்தால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் இதோ அவன். 65. தேவன் இதை ஞானிகளுக்கும் கல்விமான்களும் மறைத்து, தேவபுத்திரர் வெளிப்படும் கடைசி நாட்களில் அவர்களுக்கு வெளிப்படுத்துவதாக வாக்கு அளித்தார். உலகத்தோற்றத்துக்கு முன்பு அவருடன் கெம்பீரித்த தேவபுத்திரருக்கு கடைசி நாட்களில் தேவத்துவமும் இதைப் போன்ற மகத்தான வெளிப்பாடுகளும் அளிக்கப்படும். அவர் இவைகளை தேவபுத்திரர் மூலமாக வெளிப்படுத்தித் தருவார். அதை வேதாகமம் போதிக்கிறது என்று நமக்குத் தெரியும். இதோ நாம் அங்கு வந்திருக்கிறோம். அதன் காரணமாகத்தான் தேவன் இவைகளை நமக்குத் திறந்து கொடுக்கிறார். தேவன் தமது புத்திரரை வெளிப்படுத்துகிறார். அவர் மனித அறிவுக்கு அப்பால் ஆவிக்குரிய வெளிப்பாடுகளுக்குள் சென்று, அதை கீழே கொண்டு வருகிறார். ''இதிலே ஞானம் விளங்கும்'' என்று இந்த வேதத்திலிருந்து நாம் போதித்ததில்லையா?. வேதாகமப் பள்ளியில் கற்றதல்ல, ஆனால் தேவனுடைய சமுகத்திற்கு முன்பாக முழங்காற்படியிட்டு, தேவன் அவனுக்களிக்க விருப்பங் கொண்டதை கற்பது. தேவனுடைய புத்திரர் வெளிப்படும் காலம். 66. இதோ அந்த சர்ப்பம். சர்ப்பம் இப்படித் தான் இருந்தது. அதைக் குறித்த விவரணத்தை நான் கொடுக்கப் போகிறேன். நாம் தவளைக் குஞ்சிலிருந்து தவளைக்கு வந்து இப்படியாக முடிவில் குரங்குக்கு - மனிதக் குரங்குக்கு - வருகிறோம். மனிதக் குரங்கிலிருந்து நாம் மானிடருக்குத் தாவுகிறோம். நாம் ஏன் என்று வியக்கிறோம். விஞ்ஞானம், “சற்று பொறு. நாம் ஸ்திரீயை குரங்குடன் இனச்சேர்க்கை செய்யலாம். மனிதனும் மனிதக் குரங்குடன் சேரலாம்'' என்கிறது. அது கிரியை செய்யாது. வேறெந்த மிருகத்துடன் இனசேர்க்கை செய்து பாருங்கள். அது கிரியை செய்யாது. வேறெந்த மிருகத்துடனும் இனசேர்க்கை செய்து பாருங்கள். அது கிரியை செய்யாது. இரத்தம் கலவாது. அது முற்றிலும் வித்தியாசப்பட்ட இரத்தம். அதற்கும் இதற்கும் இடையே வேறொரு இரத்தம் உள்ளது. அந்த இரத்தத்தைக் கொண்ட மிருகத்தை அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. அல்லேலூயா-! இப்பொழுது நான் பக்தி பரவசப்படுகிறேன். 67. ஏன்-? தேவன் அதை அவர்களிடமிருந்து மறைத்து விட்டார். இப்பொழுது பாம்பின் ஒரு எலும்பு கூட மனித எலும்பைப் போல் இல்லை. அவர் அதை வெகு தூரம் நீக்கிவிட்டபடியால், புத்தி சாதுரியம் கொண்ட மனிதன் அதைக் கண்டு பிடிக்க இயலவில்லை. புத்தி சாதுரியமான மனிதன் எங்கிருந்து வந்தான் என்று உங்களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன் - அவன் இப்பொழுது எங்கிருக்கிறான் என்றும், அது நுண்ணறிவின் மூலம் வரமுடியாது. அது வெளிப்பாடு மூலமே வரவேண்டும். ''நீர் ஜீவனுள்ள தேவனுடயை குமாரனாகிய கிறிஸ்து.'' ''இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.'' ஆவிக்குரிய வெளிப்பாடு. ஆபேல், காயீனின் பலியாகிய நிலத்தின் கனிகளைக் காட்டிலும் மேன்மையான பலியைச் செலுத்த எவ்வாறு அறிந்திருந்தான்-? அது ஆவிக்குரிய விதமாய் அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டது. நீங்கள் அதை வேதாகமப் பள்ளிகளிலிருந்து பெறுவதில்லை. நீங்கள் ஸ்தாபனங்களின் மூலம் அதை பெறுவதில்லை. நீங்கள் பரலோகத்திலிருந்து அதை பெறுகிறீர்கள். 68. இப்பொழுது, சர்ப்பத்தை கவனியுங்கள் - முதலாவதாக இருந்த சர்ப்பத்தை. அவன் படத்தை இப்பொழுது நாம் வரைவோம். அவன் பெரிய உருவம் படைத்தவன். அவன் மனிதக் குரங்குக்கும் மனிதனுக்கும் இடையே இருந்தவன். சர்ப்பம் - பிசாசு - லூசிபர், அவனுடைய இரத்தம் மாத்திரமே மனித இரத்தத்துடன் கலக்கும் என்று அறிந்திருந்தான். அவன் மனிதக் குரங்குடன் ஈடுபடவில்லை. ஏனெனில் அதன் இரத்தம் கலவாது. அவன் மற்றவைகளுடன் ஈடுபடவில்லை. அவன் ஆடுகளுடன் ஈடுபடவில்லை. அவன் குதிரையுடன் ஈடுபடவில்லை. அவன் வேறெந்த மிருகத்துடனும் ஈடுபடவில்லை. அவன் சர்ப்பத்தினிடம் மாத்திரமே ஈடுபட முடிந்தது. இப்பொழுது அவனுடைய தோற்றம் எப்படியிருந்தது என்று நாம் காண்போம். அவன் பெரிய உருவம் படைத்தவன் - சரித்திரத்துக்கு முன்பிருந்த இராட்சதன். அங்கு தான் அவர்கள் பெரிய எலும்புகளைத் தோண்டி எடுக்கின்றனர். இதை வேதத்திலிருந்து உங்களுக்குக் காண்பிக்கிறேன். இதை கூர்ந்து கவனியுங்கள். இந்த பெரிய உருவம் படைத்தவன் - அவன் பத்து அடி உயரமிருந்தான் என்று வைத்துக் கொள்வோம். பரந்த தோள்கள். காண்பதற்கு அவன் மனிதனைப் போலிருந்தான். அவனுடைய இரத்தம் தோன்றும் வரைக்கும், அது ஒரு மிருகத்திலிருந்து மற்றொரு மிருகத்துக்கு ஒத்துப்போனது. 69. நீங்கள் மிருகங்களை இனசேர்க்கை செய்யலாம். அதன் இரத்தம் உயர்ந்து கொண்டே வந்து - உயர்ந்த ஜீவ வர்க்கம் - முடிவில் மானிட வர்க்கத்தை அடைகிறது. ஆனால் அந்த கடைசி தொடர்பு முறிந்து விட்டது. காணாமற்போன இணைப்பை விஞ்ஞானம் கண்டுபி டிக்க முடியவில்லை என்று எத்தனை பேருக்குத் தெரியும்-? ஏன்? இதோ அது. சர்ப்பம். இதோ ஒரு பெரிய உருவம் படைத்தவன் இருந்தான். இதோ பிசாசு இறங்கி வருகிறான். சர்ப்பமோ, “என்னால் கவர முடியவில்லை'' என்கிறான். நீங்கள் உங்கள் மனைவி அல்லாத வேறொரு ஸ்திரீயையும் அவளுடைய நடத்தையையும் கண்டு இச்சிக்கும் போது, நீங்கள் பிசாசினால் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிசாசு இறங்கி வந்து சர்ப்பத்துக்குள் நுழைந்து கொண்டான். அவன் ஏவாளை ஏதேன் தோட்டத்தில் நிர்வாணமாயிருக்கக் கண்டான். நடுவில் இருந்த கனியைக் குறித்து வேதம் உரைக்கிறது. உங்களுக்குப் புரியும்..... ஆண்களும், பெண்களும் கலந்த கூட்டத்தில். அவன், ''அது நல்லதும் பார்வைக்கு இன்பமுமாயிருக்கிறது'' என்றான். 70. அவன் என்ன செய்தான்? அவன் ஏவாளிடம் காதல் கொள்ளத் தொடங்கினான். புருஷனைப் போல் அவளுடன் வாழ்ந்தான். அவள் அது இனிமையாயிருக்கக் கண்டு, சென்று தன் புருஷனுக்கு அறிவித்தாள். ஆனால் சாத்தானால் அவள் ஏற்கனவே கர்ப்பமுற்றாள். அவள் தன் முதலாம் குமாரனைப் பெற்றாள். அவன் பெயர் காயீன், சாத்தானின் குமாரன். “அது தவறு என்று நீங்கள் கூறலாம். சரி, அது தவறா, இல்லையாவென்று பார்ப்போம். ''சர்ப்பத்தின் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்”. என்ன? சர்ப்பத்தின் வித்து. அவளுக்கு ஒரு வித்து இருந்தது. அவனுக்கு ஒரு வித்து இருந்தது. ''அவர் உன் தலையை நசுக்குவார். நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்.'' நசுக்குதல் என்றால் பாவ நிவாரணம் செய்தல் என்று அர்த்தம். இதோ உங்கள் சர்ப்பத்தின் வித்து.! இப்பொழுது கவனியுங்கள், இந்த இரு மனிதர்களும் புறப்பட்டு வருகின்றனர். இந்த சர்ப்பம் அங்கு நின்று கொண்டிருந்த போது... இந்த இராட்சத உருவம் கொண்டவன் அங்கு நின்று கொண்டிருந்தான். அவன் ஆதாமின் மனைவியுடன் விபச்சாரக் குற்றத்தைப் புரிந்தான். இன்று பாவம் எங்கு படுத்துகிடக்கிறது-? இன்றைக்கு காரியங்கள் ஏன் இவ்விதமாக உள்ளன-? (நான் என்ன கூறுகிறேன் என்பதை நீங்கள் கிரகித்துக் கொள்ளுங்கள்). 71.அவன் அப்படி செய்த போது, தேவன் ஏவாளையும், ஆதாமையும் கூப்பிட்டார். அவன், ''நான் நிர்வாணியாயிருக்கிறேன்'' என்றான். தேவன், “நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்?'' என்றார். அதன் பிறகு அவர்கள் பழியை மற்றவர்கள் மேல் சுமத்தினார்கள். அவன், “தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அதை செய்தாள். அவள் தான் என்னை இணங்கும்படி செய்தாள்'' என்றான். அவன், “சர்ப்பம் எனக்கு கனியைக் கொடுத்தது என்றா சொன்னாள்-? போதகரே, நன்றாக கவனியுங்கள். அவள், ”சர்ப்பம் என்னை வஞ்சித்தது (beguiled)'' என்றாள். வஞ்சித்தல் என்பதற்கு அர்த்தம் தெரியுமா-? அதற்கு 'கறைபடுதல்' (defile) என்று அர்த்தம். பிசாசு அவளுக்கு ஆப்பிள் கனியைக் கொடுக்கவில்லை. “சர்ப்பம் என்னை வஞ்சித்தது.'' அப்பொழுது சாபம் உண்டானது. 72. அவர், ''உன் புருஷனுக்குப் பதிலாக சர்ப்பத்துக்கு நீ செவி கொடுத்தபடியால், நீ உலகத்திலிருந்து ஜீவனை எடுத்துப் போட்டுவிட்டாய். உன் கர்ப்ப வேதனையை நான் பெருகப் பண்ணுவேன். உன் ஆசை உன் புருஷனைப் பற்றி இருக்கும்'' என்றார். ''நீ எனக்கு பதிலாக உன் மனைவிக்கு செவி கொடுத்த படியால் - மிக உயர்ந்த வர்க்கமாகிய உன்னை நான் மண்ணிலிருந்து எடுத்தேன், நீ மண்ணுக்குத் திரும்புவாய்.'' “சர்ப்பமே, இதை நீ செய்தபடியால், உன் கால்கள் உன்னை விட்டு நீங்கும். நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் உன் வயிற்றினால் நகர்ந்து மண்ணைத் தின்பாய். நீ வெறுக்கப்படுவாய்.'' பார்த்தீர்களா-? அது தான் காணாமற்போன இணைப்பு. 73. இதோ காயீன் வருகிறான். இப்பொழுது சுபாவங்களை ஒப்பிடுவோம். இதோ காயீன் வருகிறான். அவன் யார்-? அவன் புத்தி நுட்பமுள்ள வியாபாரி. அவன் நிலத்தை உழுகிறான். சாமர்த்தியமுள்ளவன், நுண்ணறிவு படைத்தவன், மதாபிமானம் கொண்டவன், மிகவும் பக்தியுள்ளவன். அவன் தன்மைகளை இப்பொழுது கவனியுங்கள். என்னுடன் இன்னும் சில நிமிடங்கள் இதை சிந்தியுங்கள். இதோ அவன் வருகிறான். அவன் மத ஒழுக்கங் கொண்டவன் என்பதை அறிந்திருக்கிறான். அவன் ஆலயத்துக்கு செல்ல விரும்புகிறான். அவன் தனக்கென ஒரு ஆலயத்தைக் கட்டுகிறான். அவன் காணிக்கை செலுத்தி, பலிபீடத்தை உண்டாக்கி அதை மலர்களினால் அலங்கரித்து, நிலத்தின் கனிகளை அதன் மேல் வைத்து அதை தேவனுக்கு செலுத்தி, “கர்த்தாவே, பாரும். நாங்கள் ஆப்பிள் கனிகளைப் புசித்தோம். அது தான் காரணமாயிருந்தது'' என்றான். (அவனுடைய சந்ததியார் சிலர் இதே போன்ற அபிப்பிராயத்தைக் கொண்டு உள்ளனர். அது எங்கிருந்து வருகிறது என்பதை அது காண்பிக்கிறது. அவன் நிலத்தில் விளைந்த ஆப்பிள் கனிகளை கொண்டு வந்து, பலிபீடத்தின் மேல் வைத்து, ''இது பாவ நிவாரணம் செய்யும்'' என்றான். தேவன், ''அது ஆப்பிள் கனிகள் அல்ல'' என்றார். ஆனால் ஆவிக்குரிய வெளிப்பாட்டின் மூலம் ஆபேல் அது இரத்தம் என்று அறிந்திருந்தான். எனவே அவன் ஒரு ஆட்டுக் குட்டியை கொண்டு வந்து, அதன் தொண்டையை அறுத்தான், அது செத்துப் போனது. தேவன், “அது சரி. இரத்தம் தான் அதற்கு காரணமாயிருந்தது'' என்றார் (நான் எந்த இரத்தத்தைக் குறித்து பேசுகிறேன் என்று உங்களுக்குத் தெரியும். சரி, இரத்தம் தான் அதற்கு காரணமாயிருந்தது. இப்பொழுது கவனியுங்கள். 74. காயீன் தன் உருளும் பரிசுத்த சகோதரன் தேவனுடைய சமுகத்தில் அங்கீகரிக்கப்பட்டு அடையாளங்களும் அற்புதங்களும் அந்த இடத்தில் நடப்பதைக் கண்ட போது, அவன் பொறாமை கொண்டு, “இதை இப்பொழுதே நிறுத்துவோம்'' என்றான். அவனுடைய சகோதரரைப் பாருங்கள். இன்று அவனுடைய பிள்ளைகளைப் பாருங்கள். ''நான் அவனைவிட சாமர்த்தியசாலி. அவன் கோபங் கொண்டான். அவனுடைய கோபம் எங்கிருந்து வந்தது-? அதை கோபம் என்று நீங்கள் அழைக்க முடியுமா-? அவன் தன் சகோதரனை கொலை செய்தான். அவன் கொலை பாதகன். தேவனை கொலை பாதகன் என்று நீங்கள் அழைக்க முடியுமா-! ஆதாம் தேவனுடைய குமாரன். ஆதாம் தேவனால் உண்டானவன் என்று வேதம் கூறுகிறது - அந்த தூய்மையான துவக்கம். ஆதாம் தேவனுடைய குமாரன். அந்த பொறாமையும், குரோதமும், மற்ற தீய குணங்களும் தூய்மையான ஆற்றிலிருந்து வரமுடியாது. அது வேறொரு இடத்திலிருந்து வந்திருக்க வேண்டும். அது சாத்தானின் மூலம் வந்தது. அவன் ஆதிமுதற் கொண்டு கொலை பாதகனாயிருக்கிறான் (யோவான் 8:44). அவன் ஆதிமுதற் கொண்டு பொய்யனும் கொலை பாதகனுமாயிருக்கிறான் என்று வேதம் கூறுகிறது. பார்த்தீர்களா-? அவன் தன் சகோதரனை கொன்று போட்டான். அது கிறிஸ்துவின் மரணத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. அதன் பிறகு ஆபேலின் இடத்தில் தேவன் சேத்தை எழுப்பினார். கிறிஸ்துவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல். 75.கவனியுங்கள், (இதோ உங்கள் இராட்சதர் வருகின்றனர்). பிறகு காயீன், நோத் என்னும் தேசத்தில் சஞ்சரித்தான். அவன் தகப்பன் பெரிய உருவம் படைத்த இராட்சதனாயிருந்தால் காயீன் எப்படி இருந்திருப்பான்-? அவன் நோத் என்னும் தேசத்துக்கு சென்று அவனுடைய சகோதரிகளில் ஒருத்தியை மணந்தான். அப்படி தான் அவன் செய்திருக்க முடியும். ஏனெனில் ஏவாளின் மூலம் தோன்றாத பெண்களே கிடையாது. அவர்களுக்கு எழுபது குமாரரும் குமாரத்திகளும் இருந்ததாக அவர்கள் கூறுகின்றனர். பெண்களே இல்லாமல் போயிருந்தால்.... (பெண்கள் பிறப்பை வேதாகமம் எழுதி வைக்கவில்லை. ஆண்களை மாத்திரமே). ஏவாளைத் தவிர வேறு பெண்களே இல்லாமல் போயிருந்தால், அவள் மரித்த போது மானிட வர்க்கமே அத்துடன் முடிவு பெற்றிருக்கும். எனவே அவர்களுக்கு குமாரத்திகள் இருந்திருக்க வேண்டும். அவன் தன் சொந்த சகோதரியை மணந்திருக்க வேண்டும். அவன் நோத் என்னும் தேசத்துக்குச் சென்று அங்கு பெண் கொண்டான். அவன் அங்கு மணந்த போது, அந்த இடத்தில் தான் இராட்சதர் தோன்றினர். அவர்கள் விழுந்து போன தேவனுடைய குமாரர்கள். அவர்கள் தங்கள் தகப்பனாகிய பிசாசின் மூலம் காயீனின் வழியில் தோன்றினவர்கள். இதோ உங்கள் காணாமற் போன இணைப்பு. 76. சர்ப்பத்தின் வித்தை கவனியுங்கள். சர்ப்பத்தின் வித்து மார்க்க பக்தி கொண்டது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அது நகர்ந்து செல்வதை சில நிமிடங்கள் கவனியுங்கள். இதோ சர்ப்பத்தின் வித்து செல்கிறது. அவர்களுக்கு என்ன நேர்ந்தது? இன்று பிற்பகல் நான் எழுதி வைத்த ஒன்றை வாசித்து காண்பிக்கப் போகிறேன். ஆபேலின் சந்ததியில் தோன்றினவர் யார்? இதை கேளுங்கள். ஆபேல் தோன்றினான். ஆபேலுக்குப் பிறகு சேத் வருகிறான். சேத்துக்குப் பிறகு நோவா. நோவாவுக்குப் பிறகு சேம். சோமுக்குப் பிறகு ஆபிரகாம். ஆபிரகாமுக்குப் பிறகு ஈசாக்கு, ஈசாக்குக்குப் பிறகு யாக்கோபு. யாக்கோபுக்குப் பிறகு யூதா. யூதாவுக்குப் பிறகு தாவீது. தாவீதின் வழியாக கிறிஸ்து வந்தார். பரிபூரணத்துக்கு-! 77. தேவனுடைய ஆவி ஆபேலில் எவ்வாறு தங்கினது என்பதை கவனியுங்கள். அது எவ்வாறு சேத்தில் தங்கினது என்பதை கவனியுங்கள். அது எவ்வாறு யூதாவில் தங்கினது, அது எவ்வாறு தாவீதில் தங்கினது என்று கவனியுங்கள். அதே ஆவி நீதிமான்களின் சந்ததி வழியாக தொடர்ந்து வருவதை கவனியுங்கள். அவர்கள் என்ன செய்த போதிலும் முன்குறிக்கப்பட்டனர். யாக்கோபைப் பாருங்கள் மோசமான... இதை அவ பக்தியாக கூறவில்லை. ஆனால் யாக்கோபு நாணம் கொண்ட சிறுவனாக தன் தாயின் உடுப்பை பிடித்துக் கொண்டே அவள் பின்னால் சென்று கொண்டிருந்தான். அவன் பெண்மைத்தனம் கொண்டிருந்தான். அவன் தகப்பனிடமிருந்து ஆசீர்வாதத்தைப் பெற எண்ணி அவனை ஏமாற்றினான். ஆனால் அது உலகத் தோற்றத்துக்கு முன்பே அவனுக்கு அளிக்கப்பட்டது-! நிச்சயமாக அது அளிக்கப்பட்டது. அவன் மாமனாரிடம் பொய் சொல்லி, புன்னை மரக்கொப்புகளை வெட்டி, தண்ணீரில் போட்டு ஆடுகளை பயமுறுத்தி, அவைகள் பொலியும் போது புள்ளியுள்ள குட்டிகளைப் போடும்படி செய்து, ஏமாற்றி அவைகளை அபகரித்துக் கொண்டான். தேவன் அதில் அவனை ஆசீர்வதித்தார். அது உண்மை-! 78.யாக்கோபைக் குறித்து யார் என்ன சொன்னாலும் அவனுக்கு ஐயோ-! கள்ளத் தீர்க்கதரிசியாகிய பிலேயாம் என்ன சொன்னான் தெரியுமா - அவன் தீர்க்கதரிசனம் உரைத்த போது-? அவன், ''அவனை ஆசிர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களும் அவனைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்களுமாய் இருப்பார்கள்,'' என்றான். ''அவர் யாக்கோபை வெறுமையான அவாந்தர வெளியில் கண்டு பிடித்தார், கழுகு தன் கூட்டைக் கலைப்பது போல் நான் கலைத்து அவனைச் சுமந்து கொண்டு போனேன்.'' அல்லேலூயா! (சகோ. பிரான்ஹாம் தனது கைகளை மூன்று முறை தட்டுகிறார் - ஆசி) ''பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும்'' என்று கர்த்தர் சொல்லுகிறார். அது வழி வழியாக பரிபூரணத்துக்கு வருவதைக் கவனியுங்கள். அந்த ஆவி வழி வழியாக வந்து கிறிஸ்துவில் பரிபூரணமடைந்தது. அது கோத்திரப் பிதாக்களின் வழியாக வந்தது. அவர்கள் என்ன செய்த போதிலும், என்ன சொன்ன போதிலும், அவர்கள் முற்றிலும் நீதிமானின் வித்தாயிருந்தனர். 79. நீதிமானாகிய ஆபிரகாம்.... ஓ, எனக்கு நல்லுணர்வு தோன்றுகிறது! நீதிமானாகிய ஆபிரகாம் மெல்கிசேதேக்கைச் சந்தித்த போது; மெல்கிசேதேக்கு தேவன்... மெல்கிசேதேக்கு யார்-? சாலேமின் ராஜா, அதாவது எருசலேமின் ராஜா, சமாதானத்தின் ராஜா (எபி. 7:2). இவர் தகப்பனும் தாயும் இல்லாதவர். இவர் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவும் இல்லாதவர். இவர் யாராயிருப்பினும், இவர் இன்னும் உயிரோடிருக்கிறார். இவர் பிறக்கவில்லை, இவர் மரிக்கவும் மாட்டார். இவர் தகப்பனும் தாயும் இல்லாதவர். இவர் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவும் இல்லாதவர். இவர் யாரென்று எனக்கு கூறுங்கள். நித்திய தேவன்-! ஓ, அதை எப்படி அழைப்பது என்று நான் மறந்து போனேன். நாம் ''தியோபனி'' (theophany) என்றழைக்கும் சரீரத்தில் வந்தவர். இது கட்டுக்கதை அல்ல, ஆனால் வெளிப்படுத்தப்பட்ட ஒன்று. அவர் ஆபிரகாமிடம் கூடாரத்துக்கு தூதனைப் போல் வந்து சாராளைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்தது போல். அவருக்கு பின்னால் கூடாரத்திலிருந்த சாராள் நகைத்தாள். அதே காரியம். இதோ அவர். லேவியின் முப்பாட்டனாரும் நீதிமானின் சந்ததியில் வந்த ஆபிரகாம் மெல்கிசேதேக்கை சந்தித்த போது, அவருக்கு தசமபாகம் கொடுத்தான். அது அவன் கொள்ளு பேரனாகிய லேவியின் கணக்கில் எடுக்கப்பட்டது. நீதிமானின் வித்து-! 80. இதோ சர்ப்பத்தின் வித்து வருகிறது. ஞாபகம் கொள்ளுங்கள். இவ்விரு வித்துக்களுக்குமிடையே பகை உண்டு - சண்டை உண்டு. சர்ப்பத்தின் வித்து வழிவழியாக வருகிறது. அது எதை தோற்றுவிக்கிறது-? நாம் முதல் சில ஆண்டுகளை எடுத்துக்கொள்வோம். என்ன நடக்கிறதென்று கவனியுங்கள். நீங்கள் படித்துக் கொண்டே வாருங்கள். ஏனெனில் இப்பொழுது அதை நான் ஒப்பிட்டுப் பார்த்தேன். சர்ப்பத்தின் வித்து காயீனைத் தோன்றச் செய்தது. காயீன் நோத் என்னும் தேசத்துக்கு சென்று இராட்சதர்களை தோன்றச் செய்தான், அவர்கள் நோவாவின் தேசத்துக்கு வருகிறார்கள். அவர்கள் சாமர்த்தியமுள்ளவர்கள், கல்வி அறிவுள்ளவர்கள், புத்திசாலிகள். அது சரியா-? அவர்கள் கட்டிடம் கட்டுபவர்கள், புதிதாக கண்டு பிடிப்பவர்கள், விஞ்ஞானிகள் - இவர்கள் நீதிமான்களின் வித்தின் மூலம் வராமல், சாத்தானின் - சர்ப்பத்தின் - வித்தின் மூலம் தோன்றினவர்கள். அவர்கள் விஞ்ஞானிகள், கட்டிடம் கட்டுபவர்கள், படித்தவர்கள் - அறிவில் சிறந்தவர்கள். அப்படித் தான் வேதம் கூறுகிறது. அவர்கள் வெண்கலம், இரும்பு போன்ற உலோகங்களைக் கொண்டு பணி புரிந்தவர்கள். அவர்கள் புதிதாக கண்டு பிடித்தனர். அவர்கள் வெவ்வேறு உலோகங்களை உருக்குதல், கட்டிடங்கள் கட்டுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர். வேதம் அப்படி கூறுகிறது. அவர்கள் ஸ்திரீயின் வித்தை - நீதிமானாகிய நோவாவை - பரியாசம் செய்தனர். அது சரியா-? (சபையார் ''ஆமென்'' என்கின்றனர்- ஆசி). 81.அவர்களை இன்னும் சிறிது தொடர்ந்து சென்று பார்ப்போம். பிறகு அவர்களை பேழை வரைக்கும் காண்கிறோம். பாவம் பெருகி எல்லாமே அழிக்கப்பட்டது. அவர்கள் அதிகாரத்தை கைப்பற்றினர். அவர்கள் மிகவும் சாமர்த்தியம் உள்ளவர்களாயும் நுண்ணறிவு படைத்தவர்களாயும் இருந்தனர். தேவன் கீழே நோக்கின போது, நீதிமான்கள் அநேகர் இருக்கவில்லை. எனவே அவர் நோவாவையும் அவனுடைய குடும்பத்தினரையும் பேழைக்குள் கொண்டு சென்று, மழை பெய்யப் பண்ணி, எல்லாவற்றையும் அழித்து போட்டார். (அதற்கு முன்பு அவர் ஏனோக்கை மேலே எடுத்துக் கொண்டார். அது சரியா-? (சபையார் ''ஆமென்“ என்கின்றனர். ஆசி) அங்கு ஏறக்குறைய எல்லா வித்துக்களும் இருந்தன. ஆனால் தேவனுடைய நோக்கம் நிறைவேற வேண்டியதாயிருந்தது. 82. பேழையை விட்டு வெளி வந்த நோவாவும் அவனுடைய குமாரரான சேம், காம், யாப்பேத்தும் நீதிமான்களின் சந்ததியில் தோன்றினவர்கள். அப்படியானால் சர்ப்பத்தின் வித்து எப்படி உள்ளே நுழைந்தது-? ஆதியில் அது ஸ்திரீயின் மூலம் வந்தது போன்று, நோவாவின் குமாரரின் மனைவிகளின் மூலம் அது பேழைக்குள் பிரவேசித்தது. ஏவாள் சாத்தானின் வித்தை சுமந்து காயீனை பெற்றது போல. இவர்களும் சாத்தானின் வித்தை பேழைக்குள் கொண்டு சென்றனர். ஸ்திரீயின் மூலம் அப்படியிருக்க நீங்கள் ஸ்திரீகளை பிரசங்கிகளாக மேடையின் மேல் ஏற்றுகின்றீர்கள். வேதம் அதை கடிந்து கொள்கிறது. பவுல், “ஒருவன் தன்னை தீர்க்கதரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகள் என்று அவன் ஒத்துக் கொள்ளக்கடவன். ஒருவன் அறியாதவனாயிருந்தால், அவன் அறியாதவனாயிருக்கட்டும்'' என்கிறான். 83.ஆகையால் தான் நான் பாப்டிஸ்டு சபையை விட்டு வெளி நடந்தேன். சற்று முன்பு சகோ.பிளிமென் இங்கு இருந்தார், அன்று டாக்டர் டேவிஸ் என்னிடம், “இந்த பெண்களை நீ பிரசங்கிகளாக அபிஷேகம் செய்ய வேண்டும்'' என்று கூறின போது அவரும் அங்கிருந்தார் என்று நினைக்கிறேன். நான், “அப்படி ஒருக்காலும் செய்யமாட்டேன்” என்றேன். அவர், ''அப்படியானால் உன்னை வெளியே துரத்தி விடுவேன்'' என்றார். நான், ''அப்படி செய்தால் நலமாயிருக்கும். இது தேவனுடைய வார்த்தை. அது இதற்கு கண்டனம் தெரிவிக்கிறது. தேவன் கடிந்து கொள்பவைகளை நான் ஆதரிக்க முடியாது,'' என்றேன். ஆம், ஐயா-!அப்படி செய்பவர் எவரும், தாங்கள் கள்ளப்போதகர்கள், கள்ள தீர்க்கதரிசிகள் என்பதை வெளிப்படுத்துகின்றனர். கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றி கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிப்பார்கள் என்று வேதம் கூறுகிறது. பார்த்தீர்களா-? 84. இதை இப்பொழுது கவனியுங்கள். காமும் அவனுடைய மனைவியும் மற்றவரும் பேழைக்கு வெளியே வந்தனர். காமின், மேல் சாபம் போடப்பட்டது. காமிலிருந்து நிம்ரோத் தோன்றினான். நிம்ரோத் பாபிலோனைக் கட்டினான். பாபிலோனிலிருந்து கத்தோலிக்க சபை தோன்றினது. அது தான் அதன் தொடக்கம். அது வழிவழியாக ஆகாபை அடைந்தது. ஆகாபிலிருந்து யூதாஸ் காரியோத். அத்துடன் அது முடிவு பெற்றது - அந்திகிறிஸ்து. இந்த கடைசி நாட்களில் இதோ அந்திக் கிறிஸ்துவின் ஆவியும் கிறிஸ்துவின் ஆவியும். அந்தி கிறிஸ்துவின் ஆவி, ''அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன'' என்கிறது. கிறிஸ்துவின் ஆவி, “அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்'' என்கிறது. அந்தக் கிறிஸ்துவின் ஆவி, ''நீங்கள் பிதா, குமாரன் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெறுவதனாலோ; ஊற்றப்பட்டாலோ, தெளிக்கப்பட்டாலோ, எவ்வகையில் ஞானஸ்நானம் பெற்றாலும் பாதகமில்லை. எல்லாம் ஒன்று தான்“ என்கிறது. ஆனால் வேதம், தேவன் பிழையற்றவர், அவர் மாற முடியாது என்கிறது. நீங்கள் யாரை சேவிக்கப் போகிறீர்கள்-? அது உங்களைப் பொறுத்தது. 85. நீங்கள், ''அவர்கள் ஒன்றாக வசிக்க முடியுமா-? சகோ. பிரான்ஹாமே, அவர்கள் பேழையில் ஒன்றாக இருந்ததாக நீர் கூறினீர் - காம், சேத் இருவரும் இருந்ததாக“ என்று நீங்கள் கேட்கலாம். அது உண்மை, முற்றிலும் உண்மை. காம் பொல்லாங்கானவன், சேத் பயபக்தியுள்ளவனும், நீதிமானும். சரி, நாம் காமை பின் தொடருவோம். சரி, காம், சேத் இருவரும் ஒரே பேழையில் இருந்தனர். ஒருவன் நீதியுள்ளவன், மற்றவன் அநீதியுள்ளவன். காகமும், புறாவும் ஒரே பேழையில் இருந்தன. யூதாஸ்யும், இயேசுவும் ஒரே சபையில் இருந்தனர். அந்திக் கிறிஸ்துவும் பரிசுத்த ஆவியும் ஒரே சபையில் இருந்தனர். இன்றைக்கு அதே ஆவிகள் கிரியை செய்கின்றன - தேவ பக்தியின் வேஷத்தை தரித்து, மிக பயபக்தியாய், ஆனால், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாய் இருப்பார்கள். இப்படிப் பட்டவர்களை நீ விட்டு விலகு.'' 86. இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று பரிசுத்த ஆவி உரிமை கோருகிறார். எந்த பக்கத்தை நீ தெரிந்து கொள்வாய்-? அந்தி கிறிஸ்து அது கோட்பாடுகளின் புஸ்தகமே என்று கூறி, (சகோ. பிரான்ஹாம், தம்முடைய வேதாகமத்தை சுட்டிக் காட்டுகிறார் - ஆசி.) ''நாம் அப்போஸ்தலருடைய விசுவாசப் பிரமாணத்தை கூறுவோம்'' என்கிறான். அப்போஸ்தலருடைய விசுவாசப் பிரமாணம் வேதத்தில் உள்ளதாக என்னிடம் கூற நான் போதகர் எவருக்கும் சவால் விடுகிறேன். ''வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனை விசுவாசிக்கிறேன். அவருடைய ஒரே குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன். நான் ரோமன் கத்தோலிக்க சபையையும் பரிசுத்தவான்களின் ஐக்கியத்தையும் (Communion) - அதாவது மரித்த பரிசுத்தவான்களுடன் பேசுதல் - தமிழாக்கியோன்) விசுவாசிக்கிறேன். அது வேதத்தில் எங்குள்ளது-? இருப்பினும் அது பெரிய மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு சபைகளில் உச்சரிக்கப்படுகிறது. அது பிசாசின் உபதேசம், கள்ளத்தீர்க்கதரிசிகள் அதை போதிக்கின்றனர். 87. உங்கள் மனதைப் புண்படுத்தவில்லையென்று நினைக்கிறேன் இதை என் கூடாரத்துக்கு வலியுறுத்துகிறேன். இங்கு பிரான்ஹாம் கூடாரத்திலுள்ளவர்களே, அப்படிப்பட்டவைகளிலிருந்து விலகுங்கள். மரித்த பரிசுத்தவான்களுடன் பேசுவதென்பது இறந்தவர்களின் ஆவிகளுடன் தொடர்பு கொள்ளுலாகும் (Spiritualism). தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியஸ்தர் ஒருவரே, அதுமனிதனாகிய இயேசு கிறிஸ்து (சகோ.பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை 4 முறை தட்டுகிறார் - ஆசி) எத்தனை மரியாள்கள் இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. பாருங்கள், அந்த ஸ்திரீயின் வழியாக பேழைக்குள் நுழைந்த வித்து என்ன செய்ததென்று-? இன்று அமெரிக்காவில் நடப்பதை பாருங்கள். அமெரிக்கா பிசாசினுடைய வித்தின் இருப்பிடமாக விளங்குகிறது. அது என்ன-? அது ஸ்திரீயின் தேசம். ''இது ஸ்திரீயின் உலகம்'' என்று கூறுவதைக் கேட்டிருக்கிறீர்கள். அது உண்மை. இது ஸ்திரீயின் தேசம் இவர்கள் மாதிரியை அமைக்கின்றனர். 88. நான் அண்மையில் ஸ்விட்சர்லாந்து நாட்டுக்கு சென்றிருந்தேன். அங்கு பரிசுத்த ஆவி பெற்ற ஒரு ஸ்திரீ, ''எனக்கு அமெரிக்காவுக்கு செல்ல பிரியம். அங்கு ஸ்திரீகளுக்கு சுயாதீனம் உள்ளதாக கூறுகின்றனர்“ என்றாள். நான், ''அது எங்கு நடத்துகிறதென்று உனக்குச் சொல்லுகிறேன்'' என்று கூறி, எல்லாவற்றையும் விவரிக்கத் தொடங்கினேன். அவள், “ஓ, ”தேவனே இரக்கமாயிரும், அது ஒன்றும் எனக்கு வேண்டாம்'' என்று கூறி விட்டாள். நான், ''அங்கு தான் அது நடத்துகிறது'' என்றேன். உங்களுக்குத் தெரியுமா, இங்கு இவர்கள் செய்வது போல, அவர்கள் அங்கு செய்வதில்லை. அது என்ன-? 89. அமெரிக்கா ஏன் ஒரு ஸ்திரீயின் தேசம் என்று உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். நமது நாணயத்தில் ஒரு ஸ்திரீயின் படம் உள்ளது. இங்குள்ள ஒவ்வொன்றுமே ஸ்திரீயின் ஆதிக்கம் தான். நமது நாட்டில் வேண்டிய அளவுக்கு மது அருந்தும் இடங்கள் உள்ளதா இல்லையாவென்று கூறுங்கள், நீங்கள் மது அருந்தும் ஸ்தலங்களையும், தெருவில் உடலை நெளித்து நடந்து செல்லும் அழகான விலை மாதர்களையும் ஒன்றாக வையுங்கள். இந்த மூன்று பெண்களும் நகரத்திலுள்ள எல்லா மது அருந்தும் ஸ்தலங்களைக் காட்டிலும் அதிக ஆத்துமாக்களை நரகத்துக்கும் அனுப்பி விடுவார்கள். அது முற்றிலும் உண்மை. அப்படியானால் அது யார்? அது ஸ்திரீ. அவள் யார்? அவள் அமெரிக்காவின் தேவதை. 90. நான்கைந்து முறை மணம் புரிந்து, மூன்று அல்லது நான்கு கணவர்களுடன் ஒரே நேரத்தில் வாழ்க்கை நடத்தும் இந்த சினிமா நட்சத்திரங்களைப் பாருங்கள். இங்குள்ள சில பத்திரிக்கைகள், அவர்களை நிர்வாணமாக படமெடுத்து வெளி இடுகின்றன. சிறுமிகளாகிய நீங்கள் அதை உங்கள் உதாரணமாக எடுத்துக் கொள்கிறீர்கள், ஏன் ஒருக்கால் தாயார், அல்லது உங்கள் பாட்டி உங்கள் முன்னிலையில்... சர்ப்பத்தின் வித்து எங்கு கிரியை செய்கிறது பார்த்தீர்களா? நிச்சயமாக அது கிரியை செய்து வருகிறது. அது என்ன செய்துள்ளது? நியாயப்பிரமாணத்தின் கீழ் அக்கிரமம் 14 தலைமுறைகளுக்கு விசாரிக்கப்படுமானால், இக்காலத்தில் அது எவ்வளவாக விசாரிக்கப்படும்-? நீதிமான்களின் வித்தின் கிரியைகள் முடியப் போகும் தருணம் இது. தெரிந்து கொள்ளப்பட்டவர்களினிமித்தம் அந்த நாட்கள் குறைக்கப்படுமென்றும், அப்படி அந்நாட்கள் குறைக்கப்படாது இருந்தால் ஒருவனாகிலும் தப்பிப் போவதில்லை என்று தேவன் கூறியுள்ளார். நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம்! 91. இன்றிரவு நீதிமான்களை தேடிப்பிடியுங்கள். நகரமெங்கும் செல்லுங்கள். ஓ, நீங்கள் பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன் போன்ற ஸ்தாபனங்களுக்கு மிகவும் விசுவாசமுள்ள சபை அங்கத்தினர்களைத் தான் காணமுடிகிறது. ஒரு முயலுக்கு பனிக் காலணிகளுடன் (snow shoes) எவ்விதம் சம்பந்தமில்லையோ, அவ்வாறு இவர்களும் தேவனுடன் எவ்வித சம்பந்தம் கொள்ளாதவர்களாய் உள்ளனர். அவர்களுக்கு அதைக் குறித்து ஒன்றுமே தெரியாது. அவர்களுக்குத் தெரிந்தெல்லாம்.... ''நீ கிறிஸ்தவனா?'' ''நான் கத்தோலிக்கன்.'' ''நீ கிறிஸ்தவனா?'' ''நான் பாப்டிஸ்டு.'' ''நீ கிறிஸ்தவனா?'' ''நான் பிரஸ்பிடேரியன்.'' ''நீ கிறிஸ்தவனா?'' ''நான் பெந்தெகோஸ்தேகாரன்.'' ஆனால் அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. தேவன் தமது கிருபையினால் உன்னை இரட்சித்து, அதைக் குறித்து நீ அறிந்து, ஏதோ ஒன்று உன் வாழ்க்கையை மாற்றி வித்தியாசமான வாழ்க்கை வாழும்படி செய்து, நீ கிறிஸ்து இயேசுவுக்குள் புது சிருஷ்டியாக, புது நபராக இருக்கும் காரணத்தினால் தான் நீ கிறிஸ்தவனாயிருக்கிறாய். 92. நிச்சயமாக. ஆனால் சர்ப்பத்தின் வித்து எங்குள்ளது என்று பார்த்தீர்களா? சர்ப்பத்தின் வித்து எப்படி தோன்றினது? விபசாரத்தின் மூலம் உங்களுக்குப் புரிகிறதா-? ஏவாளுடன் நடந்த விபச்சாரத்தின் விளைவாக. அதற்கு என்ன நேர்ந்தது-? அதை தோன்றச் செய்தது எது-? இன்றிரவு அது எப்படியாயுள்ளது-? சில ஆண்டுகளுக்கு முன்பு, முதலாம் பாடல் வெளி வந்ததை யோசித்துப் பாருங்கள். உங்களில் வயது சென்றவர்கள்... முன்பெல்லாம் வானொலியில் பாடுவதற்கு முன்பு, அவர்கள் பாடல்களை தணிக்கை செய்வது வழக்கம். முதலாவதாக வெளி வந்த ஆபாசமான பாடல், ''சுருட்டி விடுங்கள், பெண்களே, சுருட்டி விடுங்கள் உங்கள் அழகான முழங்கால்களைக் காண்பியுங்கள். உங்கள் அப்பாவையும் அம்மாவையும் பார்த்து சிரித்து, அவர்களுக்கு பழைய ஹா - ஹா - ஹா- ஒன்றைக் கொடுங்கள்'' என்பதே. இந்த பாடலை தான் அவர்கள் முதலில் நழுவவிட்டார்கள். அந்த பாடலை எழுதின ஆள் இன்று எங்கிருக்கிறான் என்று நினைக்கிறீர்கள்? அவன் மரித்து விட்டான். முதன் முறையாக, “ஆபத்தான வளைவுகள் (dangerous), ''உடைகளை களைந்து மனதை தொந்தரவு செய்தல்'' (striptease) என்னும் சொற்களை கண்டு பிடித்து ஆயிரக்கணக்கான ஆத்துமாக்களை நரகத்துக்கு அனுப்பின கிளாரா பெள்-வைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்-? அவள் இன்றிரவு எங்கிருக்கிறாள் என்று நினைக்கிறீர்கள்-? அவள் மரித்து நீண்ட காலமாகி விட்டது. அவளுடைய உடல் கல்லறையில் படுத்து, புழுதியில் அரிக்கப்படும் இந்நேரத்தில் அவள் எங்கிருக்கிறாள்-? புழுக்கள் அவள் உடலைத் தின்று கொண்டிருக்கின்றன. அவளுடைய ஆத்துமாவோ நீதியுள்ள தேவனுக்கு முன்பாக நியாயத் தீர்ப்புக்காக காத்திருக்கிறது. 93. பெண்களை ஆபாசமான உடைகள் அணியச் செய்து, அவர்கள் முன்பாகமும் பின்பாகமும் வெளியே தள்ளிவரும் வகையில் இறுக்கமான உடைகளை தைத்து கொடுத்த அந்த மனிதன் இப்பொழுது எங்கிருக்கிறான்? ''அவர்கள் ஏன் அப்படி செய்கிறார்கள்? அவர்கள் ஏன் அப்படிப்பட்ட உடைகளை உடுத்துகின்றனர்?'' என்று நீங்கள் கேட்கலாம். மனிதர் உங்களைப் பார்க்க வேண்டும் என்பதற்காக அப்படி செய்கிறீர்கள். வேறெதற்காக செய்கிறீர்கள் என்று நீங்கள் நிரூபிக்க முடியாது. (சகோ. பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை அநேக முறை தட்டுகிறார் - ஆசி.) நீங்கள் அப்படி செய்து, பாவி ஒருவன் உங்களைப் பார்க்கும் போது, என்ன நடக்கிறது. தெரியுமா-? நியாயத்தீர்ப்பு ஸ்தலத்தில்... ''சகோ. பிரான்ஹாமே, என் கணவருக்கு என்னால் இயன்றவரை உண்மையுள்ளவளாக வாழ்ந்து வருகிறேன்'' எனலாம். ஆனால் நீ விபாச்சாரம் செய்ததாக குற்றஞ்சாட்டப்படுவாய். “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபச்சாரஞ் செய்தாயிற்று என்று இயேசு கூறினார் (மத். 5:28). அந்த மனிதன் விபச்சாரம் செய்த குற்றத்துக்காக பதில் கூறும் போது, அதற்கு காரணமாய் இருந்தது யார்? நீ அப்படிப்பட்ட ஆபாசமான உடை உடுத்தி உன்னைக்காண்பித்த விதமே. நீ பண்டைய காலத்து உடைகளைத்தான் உடுத்த வேண்டுமென்று நான் கூற வரவில்லை, ஆனால் நீ நற்பணபுள்ள பெண்ணைப் போல் காணப்படுதல் நலம். 94. பின்பு இங்கு வந்து உடைகளைக் களைவது..... உன் குட்டையிலும் கட்டை கால் சட்டை அணிந்து அதைச் சுற்றி ஒரு நாடா கட்டுவது... சிகரெட் துண்டை போடும் ட்ரே (Tray)வைப் போன்ற கண்களை உடைய உன் குழந்தையுடன், உன் வாயில் சிகரெட்டை வைத்துக் கொண்டு தெருவில் நடந்து செல்வது... இதெல்லாம் நன்மைக்காக நீ செய்யவில்லை. நீ ஒருக்கால் அந்த விஷயத்தில் அப்பாவியாயிருக்கலாம், ஆனால் பிசாசு ஏவாளை உபயோகித்தது போல், உன்னை ஒரு கருவியாக உபயோகிக்கிறான். இது ஸ்திரீயின் தேசமே. ஏனெனில் இது கத்தோலிக்க மார்க்கத்தின் ஆதிக்கத்திற்குள் சென்று கொண்டிருக்கிறது. இன்று என்ன நடக்கிறது-? அவர்கள் இயேசு என்று உரைப்பதை நீங்கள் கேட்பது கிடையாது. “மரியாளே வாழ்க,'' ''தேவனின் தாயாகிய மரியாளே,'' ''பரி.சிசிலியா'' போன்ற எல்லாவிதமான பரிசுத்தவாட்டிகள் மரித்து போனவர்கள். சில நாட்களுக்கு முன்பாக... 95.அண்மையில் நான் மெக்ஸிகோவுக்கு சென்றிருந்தேன் சென்ற ஆண்டு ஒரு ஏழை ஸ்திரீ முழங்காலில் நடந்து வந்தாள். அவளுடைய தோல் இப்படி உரித்து விட்டிருந்தது. அவள் அழுது கொண்டே, கையை கூப்பிக் கொண்டு வந்தாள். அவளுடைய கணவர் தங்கள் இரண்டு குழந்தைகளையும் சுமந்து அவள் பக்கத்தில் நடந்து வந்து கொண்டிருந்தனர். தாயின் வேதனையைக் கண்டு குழந்தைகள் அழுதனர். இதெல்லாம் அவர்கள் பரிசுத்தவாட்டி என்றழைக்கும் மரித்து போன ஒரு ஸ்திரீக்காக. அவர்கள் மலையின் மேல் அவளுடைய சொரூபத்தை வைத்திருந்தனர். அவளுடைய காதலன் அவளைக் கொன்று விட்டான். அவள் அப்படி கொல்லப்பட்ட பின்பு பரிசுத்தவாட்டியாகி விட்டாள். இப்படி முழங்காலில் நடந்து வந்த பெண் கத்தோலிக்க பெண். அவள் எடுத்துக் கொண்ட நோன்புக்காக இரண்டு மைல் தூரம் சொரசொரப்பான கற்களின் மேல் முழங்காலில் நடந்து சென்றாள். சகோதரனே, நான் ஏதாவதொன்றை இப்படி செய்ய வேண்டுமானால், இயேசு கிறிஸ்து மரித்தது வீணாயிருக்கும். நான் கிருபையினால் இரட்சிக்கப்பட்டேன், என் கிரியைகளினால் அல்ல. ஆனால் தேவனுடைய சித்தத்தினாலும், அவருடைய நன்மையினாலும் இரக்கத்தினாலும்..... 96. செய்தி நிருபர்கள் என்னிடம், ''சகோ. பிரான்ஹாமே'' என்றனர் (மரித்துப் போன ஒரு சிறு குழந்தை உயிரோடெழுப்பப்பட்டது. இன்னும் வேறு சில அற்புதங்களும் நடந்தன.) முப்பதாயிரம் கத்தோலிக்கர்கள்... இல்லை உங்கள் மன்னிப்பை கோருகிறேன், அது இருபதாயிரம் (ஆப்பிரிக்காவில் தான் முப்பதாயிரம் பேர்). மெக்ஸிகோ நகரத்தில் நின்று கொண்டிருந்த போது அந்த அற்புதம் நிகழ்ந்தது. அது நிகழ்ந்த போது, ஒரே நேரத்தில் இருபதாயிரம் கத்தோலிக்கர்கள் இயேசு கிறிஸ்துவை தங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டனர். அங்கே நின்று கொண்டிருந்த அந்த குருவானவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. ''திரு. பிரான்ஹாம் அவர்களே, எங்கள் பரிசுத்தவான்கள் நீங்கள் செய்பவைகளை செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா?'' என்று கேட்டனர். நான், அவர்களுடைய உபதேசங்களை அறிந்தவனாய், நிச்சயமாக. ''அவர்கள் உயிரோடிருந்தால்'' என்றேன். மரித்த பின்பு தான் கத்தோலிக்க பரிசுத்தவானாக இருக்க முடியும், பாருங்கள்? உங்களுக்குத் தெரியும். எனவே அந்த நிருபர், “ஓ, மரிக்காவிட்டால் பரிசுத்தவானாக முடியாதே” என்றார். நான், “அப்படி எங்கு படித்தீர்களா? பவுல், ”தேவனால் அழைக்கப்பட்ட எபேசுவிலுள்ள பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது என்று கூறியிருக்கிறான். அவன் இப்படியாக கலாத்தியா, ரோமாபுரி போன்ற மற்ற இடங்களில் உள்ளவர்களுக்கும் நிரூபங்கள் எழுதி அனுப்புகிறான். பரிசுத்தவான்கள் பரிசுத்தம் ஆக்கப்பட்டவர்கள். அதைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?'' என்று கேட்டேன். 97. அவர்களோ, “நாங்கள் வேதத்தைக் குறித்து வாக்குவாதம் செய்யக்கூடாது. ஏனெனில் நாங்கள் சபை. சபை சொல்வதை தான்... வேதம் என்ன கூறினாலும் எங்களுக்கு கவலையில்லை. சபை என்ன கூறுகிறதோ அதுதான் முக்கியம்'' என்று கூறிவிட்டு, ”கத்தோலிக்க சபையைக் குறித்த உங்கள் அபிப்பிராயம் என்ன? என்று கேட்டார்கள். நான், ''அந்த கேள்வியை நீங்கள் என்னிடம் கேட்காமலிருந்தால் நலமாயிருக்கும். ஆனால் நீங்கள் கேட்டதனால் உண்மையைக் கூறப் போகிறேன்'' என்றேன். அவர்கள், ''நாங்கள் உண்மையைக் கூற விரும்புகிறோம்'' என்றனர். நான், “எனக்குத் தெரிந்தவரையில், அது இறந்தவர்களின் ஆவியுடன் தொடர்பு கொள்ளுதலின் உச்ச நிலை” என்றேன். அவர்கள், ''ஏன் அப்படி கூறுகிறீர்கள்?'' என்றார்கள். நான், ''மரித்தோரிடம் பேசும் எவனும் அவர்களுடைய ஆவியுடன் தொடர் கொள்ளும் ஒருவனாக இருக்கிறான். அந்த பரிசுத்தவானுக்கு மறு உத்தரவு அருள் முடியுமானால், அவர் நரகத்தில் இருக்கிறார் என்றாகிவிடுகிறது. ஏனெனில் அங்கு கடந்து சென்றவர்கள் திரும்பி வர முடியாதென்று என் வேதம் உரைக்கிறது. அது உண்மை. எனவே அது பரிசுத்தவான் அல்ல. பிசாசு அந்த பரிசுத்தவானைப் போல் பேசுகிறான்“ என்றேன். அவர் ஒரு நிமிடம் பொறுங்கள். நீங்களும் கூட மரித்தோருடன் பேசுகின்றீர்கள்'' என்றார். நான், “எப்பொழுது?'' என்று கேட்டேன். அவர், “இயேசு மரித்தார்'' என்றார். நான், ''ஆனால் அவர் உயிரோடெழுந்தார். அவர் மரித்த நிலையில் இல்லை. அவர் உயிரோடிருந்து பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார். தேவனுக்கும், மனிதனுக்கும் மத்தியஸ்தர் அவர் ஒருவரே'' என்றேன். மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன். நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். விருப்பமுள்ளவன் வந்து ஜீவத்தண்ணீரை இலவசமாய் பருகக்கடவன். என்னே, அவர் தான் நம்முடைய தேவன் நம்முடைய தேவன்-! 98. நீதிமானின் சந்ததி முடிவுபெறும் நேரமாகி விட்டது. ஜனங்களிடம் இவைகளைக் குறித்து பேசுங்கள்; ஜனங்களிடம் இவைகளைக் குறித்துப் பேசுங்கள்; ஜனங்களிடம் வேத வழிக்குத் திரும்பச் செல்லும்படி கூறுங்கள்; ஜனங்களிடம் அற்புதங்களைக் குறித்துப் பேசுங்கள். இவைகளைக் குறித்து எல்லாம் நீங்கள் பேசினாலும் அவர்களுடைய சபை அதை விசுவாசிப்பதில்லை. எனவே அவர்கள் தேவனுடைய பார்வையில் வேசிப்பிள்ளைகள். நீங்கள் சிட்சையையும், சோதனைகளையும், பரியாசங்களையும், ''உருளும் பரிசுத்தர்'' என்றழைக்கப்படுவதையும் சகிக்காமல் போனால், நீங்கள் தேவனுடைய புத்திரராயிராமல் வேசிப் பிள்ளைகளாயிருப்பீர்கள் என்று வேதம் கூறுகிறது. நீங்கள் வேண்டுமானால் என்னை ''உருளும் பரிசுத்தன்'' என்று கூப்பிடுங்கள். நீங்கள் என்ன வேண்டுமானாலும் என்னைக் கூப்பிடுங்கள். என் இருதயம் தேவனுடன் சரியாயிருந்து, என் ஆவி தேவனுடைய வார்த்தையுடன் இணைந்து இருக்கும் வரைக்கும் நான் சரியான வழியில் சென்று கொண்டிருக்கிறேன். ஆம் ஐயா. 99.ஆம், ஐயா! அப்படித் தான் நாங்கள் விசுவாசிக்கிறோம். அது தான் ஜீவனுள்ள தேவனின் சபை. அது வேதசாஸ்திரத்தின் மூலமோ, மனித அறிவுத்திறனால் விளைந்த கருத்தின் அடிப்படையிலோ தோன்றின ஒன்றல்ல. இயேசுகிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று முற்றிலுமாக வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தின் அடிப்படையில் அது தோன்றினது. பாப்டிஸ்டு சபை அல்லது மெதோடிஸ்டு சபை, ''இன்னின்னதை செய்ய வேண்டும் என்று எனக்குப் போதித்ததன் விளைவாக மனித அறிவினால் விளைந்த கருத்தை நான் கொண்டடிருப்பேனானால்..... இந்த வேதாகமத்திலுள்ள வேத வாக்கியங்களை கேட்கும் போது, அது வேதாகமம்! நான் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றிருந்து, போதகர் ஒருவர் என்னிடம், வேதாகமத்தில் எவருமே இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலேயன்றி, வேறெந்த வகையிலும் ஞானஸ்நானம் பெறவில்லை என்று கூற, நானும் வேதாகமத்தைப் படித்து அது உண்மை என்று கண்டறிந்தால், நான் மிக வேகமாக தண்ணீரை அடைவேன். ஆம், ஐயா! 100. யாராகிலும் என்னிடம், இயேசு கிறிஸ்து சுமளிப்பவர் என்று கூறி, என் சபை என்னிடம், ''அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன'' என்று கூறி, எனக்கு சுகம் தேவைப்பட்டால், நான் பீடத்துக்கு என்னால் முடிந்தவரை வேகமாக ஓடிச்சென்று சுகத்தைப் பெற்றுக் கொள்வேன். நான் நிச்சயம் அப்படி செய்வேன். நான் பிரசங்கியாயிருந்து, என் பிரசங்க பீடத்தில் ஒரு பெண் பிரசங்கியை நான் ஏற்றி, ஒரு பெண் பிரசங்கம் செய்யக்கூடாதென்று நான் வேதத்தில் படித்தால், அவர்கள் என் முதுகு தோலை உறித்தாலும் நான் கவலைப்படாமல் அவளை நீக்கி விடுவேன். இப்பொழுது சகோதரி.ரைட் உட்கார்ந்து கொண்டிருக்கும் இடத்தில் ஒரு இரவு உட்கார்ந்திருந்த ஒரு பெண், அப்படி ஏதோ ஒன்றை நான் செய்ததற்காக என்னை வெளியே எறிந்துவிட முயன்றாள். ஆம், ஐயா. நான் அவளிடம், “இப்படிப்பட்ட உடை உடுத்தி என் சபைக்குள் வர நான் அனுமதிக்க மாட்டேன்” என்றேன். முன்பெல்லாம் அவர்கள் இதுவரை வெட்டின ஆபாசமான ஆடைகளை அணிவது வழக்கம். அவர்களுடைய பாதி உடல் வெளியே காணப்படும். நான், ''அவர்கள் என் சபைக்கு வருவார்களானால் நிச்சயம் வெளியே துரத்தி விடுவேன் என்றேன். இங்கிருந்த அவலட்சணமான ஆடை உடுத்த ஒரு பெண் (அதற்கு பிறகு அவள் இறந்து விட்டாள். இறக்கும் தருவாயில் அவள் என்னை வரவழைத்தாள். அவள் ஒரு கத்தோலிக்கப் பெண்.) இங்கு நடந்து வந்து இப்படி உட்கார்ந்தாள். நான் திரும்பிப் பார்த்து அவள் அங்கு உட்கார்ந்திருப்பதைக் கண்டேன். அவர்கள் பாடல்கள் பாடிக் கொண்டிருந்தார்கள். நான் என் கோட்டை கழற்றி, அவளிடம் நடந்து சென்று, அவளுடைய தோள்களில் அதை போட்டு கொடுத்து, அம்மணி, நான் பிரசங்கிப்பதை நீ கேட்க விரும்பினால், தேவனுடைய சபையில் நீ உள்ள போது, தயவு செய்து இந்த ''கோட்டை அணிந்து கொள்“ என்றேன். 101.அவள் வேகமாக எழுந்து முணுமுணுத்துக் கொண்டே கட்டிடத்தை விட்டு வெளியே சென்று, ''என் பசுவும் கூட அப்படிப்பட்ட மார்க்கத்தை பின்பற்ற நான் அனுமதிக்க மாட்டேன்'' என்றாள். நான், “கவலைப்படாதே, அது பின்பற்றாது'' என்றேன். நாங்கள் கூடாரக் கூட்டம் நடத்திக் கொண்டிருந்த போது, அவள் மரணத்தருவாயிலிருப்பதாக கூறி என்னை வரும்படி அழைத்தனர். அவளுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணத்தருவாயிலிருந்தாள். என்னை அழைத்துச் செல்ல அவள் கணவர் வந்திருந்தார். அவர் ''வேகமாக வாருங்கள்'' என்றார். (நான் அப்பொழுது கூட்டத்தில் இருந்தேன்). அவர் உயரமானவர். அவர் கதவருகில் நின்று எனக்காக காத்திருந்தார். நான் ஓடினேன். நான் என் காரில் ஏறி அங்கு சென்றேன். அங்கு சென்ற போது, ஹாவர்ட் பார்க்கில் வசிக்கும் அந்த வயோதிப நர்ஸை கண்டேன். அவள், ''சங்கை போதகரே, நீங்கள் வந்திருக்க வேண்டிய அவசியமில்லை'' (அது சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு, அதைக் காட்டிலும் அதிகமாக கூட இருக்கலாம்), ''அவள் இறந்து விட்டாள். அவள் இறந்து மூன்று நிமிடங்களாயின. அவள் உங்களுக்காக உரக்கச் சத்தமிட்டாள். உங்களுக்கு என்னிடம் ஒரு செய்தி உண்டு'' என்றாள். நான், “என்ன?” என்றேன். அவள், ''அந்த போதகரிடம், 'தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்' என்று கூறினதாக சொல்லவும்,'' என்றாள் என்று கூறினாள். 102.அவளைக் காண நான் சென்றேன், அழகானவள். அவள் அதிகமாக வேதனைப்பட்டதால் மூக்கில் சுருக்கங்கள் விழுந்திருந்தன. அழகான பெண். அந்த சுருக்கங்கள் கவனத்தை கவரும் வகையில் இருந்தன. கண்கள் குழியிலிருந்து முழுவதும் வெளியே வந்திருந்தன. அவை பின்னால் செருகியிருந்தன, அவள் மலம் கழித்திருந்தாள். மூத்திரமும் போயிருந்தாள். அவளுடைய படுக்கையிலிருந்து புகை வந்து கொண்டிருந்தது. அவள் கணவர், ''சகோ. பிரான்ஹாமே, ஜெபம் செய்யுங்கள். அவள் உங்களைக் காண வேண்டுமென்று விரும்பினாள்'' என்றார். நான் அவளுக்கு இப்பொழுது எந்த ஜெபமும் உபயோகமிராது'' என்றேன். மரம் எந்தப்பக்கம் சாய்கிறதோ அந்தப் பக்கம் விழுந்து போகும். “மோசம் போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதை அறுப்பான்.'' (கலா.6:7). 103. அது எங்குள்ளது என்று காண்கிறீர்களா? என்ன நடந்தது? அப்படி செய்யும் ஒரு பெண்ணைப் பாருங்கள். பாடல் நாடகக் குழுவில் பாடி நடனமாடும் பெண்ணாக இருந்தவர்களைப் பாருங்கள். அவளுடைய பெண் யார்-? தெருவில் திரிபவள். அவளுடைய பெண்? ராக் அண்டு ரோல் நடனமாடும் இளம் பெண். அவளுடைய பெண் என்னவாயிருக்கப் போகிறாள்? அது என்ன? சர்ப்பத்தின் வித்தைக் கண்டீர்களா? பாப்டிஸ்டுகளே, சிறிது பின்னோக்கிப் பாருங்கள். உங்கள் ஸ்தாபகரான ஜான் ஸ்மித் காலத்துக்கு செல்லுங்கள். ஜனங்களின் அக்கிரமத்துக்காக அவர் அழுது ஜெபித்து, கண்கள் வீங்கிப் போயின. அவருடைய மனைவி அவரை மேசைக்குக் கொண்டு சென்று காலை உணவை ஊட்டி கொடுக்க வேண்டியதாயிற்று. 104. மெதோடிஸ்டுகளாகிய நீங்கள் மூக்குத்திகளும் காதணிகளும் அணிகிறீர்கள். அவை பிசாசின் பக்க சேணங்கள் போல் காட்சியளிக்கின்றன. நீங்கள் இவைகளை அணிந்து, குட்டை கால்சட்டை உடுத்தி வெளியே செல்கிறீர்கள்... மெதோடிஸ்டு சபையின் மூப்பர்களில் ஒருவரான ஜான் ஸ்மித் 85 வயதில் மரிக்கும் முன்பு ஒரு சிறு பிரசங்கத்தை நிகழ்த்தினார். (4 மணிநேரம்). அவர்கள் தூக்கி அவரை பிரசங்க பீடத்தில் நிறுத்த வேண்டியதாயிற்று. ''நான் மெதோடிஸ்டு சபையின் நடத்தையைக் கண்டு அதிர்ச்சியடைகிறேன்'' என்பதே அவருடைய கடைசி சொற்கள். ''மெதோடிஸ்டு சபையின் குமாரத்திகள் கூட விரலில் மோதிரம் அணிகின்றனர்'' என்றார் அவர். இப்பொழுது அவர்கள் குட்டை கால்சட்டை அணிந்து பாடற்குழுவில் பாடுவதைக் கண்டால் என்ன சொல்வார்? நீங்கள் நன்றாய் ஓடினீர்களே, உங்களுக்கு என்ன நேர்ந்தது? உங்கள் தாயை போல் நீங்கள் நடந்து கொள்கிறீர்கள். அதன் காரணமாகத்தான் எந்த ஸ்தாபனத்தின் பெயரும் இங்கு தொங்கிக் கொண்டிருப்பதை அல்லது இணைக்கப்பட்டிருப்பதை நாங்கள் விரும்புவதில்லை. ''நாங்கள் மெதோடிஸ்டுகள்.'' ''நாங்கள் பாப்டிஸ்டுகள்.'' நாங்கள் கிறிஸ்துவினுடையவர்கள் மாத்திரமே. அதையெல்லாம் அப்படியே விட்டுவிட்டு சுயாதீனராயிருங்கள். 105.சர்ப்பத்தின் வித்தைக் காண்கிறீர்களா? அப்படிப்பட்ட ஒரு ஸ்திரீ இப்பொழுது என்ன கிரயம் செலுத்துவாள்? அது என்ன செய்யும்? அது... அவர்கள் வாழ்ந்து கொண்டே வந்தனர். அது பாப்டிஸ்டுகளை பின்னால் தள்ளினது, அது மெதோடிஸ்டுகளை பின்னால் தள்ளினது. அது பிரஸ்பிடேரியன்களை பின்னால் தள்ளினது. அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் எல்லோரும் வேசியாகிய தங்கள் தாயிடம் சென்றனர். அங்கு அவர்கள் அதே வேசித்தனத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், ''அதனால் ஒரு வித்தியாசமும்மில்லை. அவர்கள் முழுக்கு பெற்றனர், தெளிக்கப்பட்டனர். அவர்கள் பாவ அறிக்கை செய்து இங்கு வந்தனர். அவர்களுக்கு ஆறுமாதம் பயிற்சி கொடுக்கப்பட்டது. அந்த சமயத்தில் அவர்கள் அதிகம் குடிக்கவில்லை. அவர்கள் நல்ல அங்கத்தினர்களாய் இருந்து வருகின்றனர். அவர்கள் நிறைய பணம் கொடுக்கின்றனர் என்கின்றனர். ஓ, என்னே! அதற்கும் ஆவியின் கனிகளுக்கும் சம்பந்தமில்லை. ஆவியின் கனிகள் விசுவாசம் - நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிற இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்திருத்தல் - சகோதரிடம் அன்பு செலுத்துதல், சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், சாந்தம், இச்சையடக்கம் என்பனவாம். இவையே ஆவியின் கனிகள். 106.''நாங்கள் ஒரு மனிதனைத் தெரிந்து கொள்கிறோம். அவர் அண்டையில் நல்ல வாழ்க்கை கடைபிடிக்கிறார். ''ஏசாவும் அப்படித்தான் இருந்தான். அவன் யாருக்கும் தீங்கிழைக்கவில்லை. ஏசா பிசாசினுடையவன், ஆனால் அதே கர்ப்பத்திலிருந்து வெளி வந்த யாக்கோபு, தேவனுடையவன். ஒன்று பிசாசின் வித்து, மற்றது ஸ்திரியின் வித்து. தேவனுடைய வித்து... இப்பொழுது பாருங்கள், ''இன்று உலகில் எது விடப்பட்டுள்ளது?'' என்பதற்கு எல்லாமே வந்துள்ளது. இதை கொடூரமாகக் கூறப் போகிறேன்; அதை ஆணித்தரமாக கூறுவதற்காக. இதற்கு பிறகு அடுத்த கூட்டத்தில் நாம் எழுப்புதலைத் தொடங்குவோம். இது ஒரு உருவுக்கு வந்து விட்டது. தயவு செய்து இதை அவபக்தியாய் கூறுவதாக எண்ண வேண்டாம். நான் நீசத்தனமாக இருக்க வேண்டும் என்பதற்காக இதை கூறவில்லை. முறைதவறிப் பிறந்தவர்கள் கொண்ட ஒரு பெரிய மார்க்க சம்பந்தமான கூட்டம் என்னும் நிலைக்கு இது வந்து விட்டது. இதுவே என் முடிவான குறிப்பு. 107.அந்நிலைக்கு தான் அது முற்றிலுமாக வந்துவிட்டது. அது உண்மையென்று உங்களுக்குத் தெரியும். அது “சபையை சேர்ந்து கொள்ளுதல்'', ''சபை உறுப்பினர்'' என்னும் நிலைக்கு வந்துவிட்டது. தேவபக்தியின் வேஷத்தை தரித்து அதின் பெலனை மறுதலித்து, மதப்பிரகாரமான முறைதவறிப் பிறந்தவர்களின் கூட்டம் என்னும் நிலையை அது அடைந்து விட்டது. அது தான் முற்றிலும் உண்மை. அப்படியானால், அடுத்தபடியாக என்ன? அங்கு அநேக ராக்கெட்டுகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த அதிகாரம் வரும் வரைக்கும் கோபால்ட் குண்டுகளும் மற்ற அணுகுண்டுகளும் காத்திருக்கின்றன. தண்ணீரினால் முன்பு அழிவு உண்டானது போல, அக்கினியினால் இப்பொழுது அழிவு உண்டாகும். 108. நண்பர்களே, நீங்கள் என்ன செய்தாலும், நீங்கள் கிறிஸ்தவர்களாயிருந்தால், உங்கள் இருதயத்தில் தேவனைப் பெற்றிருந்தால், நீங்கள் மரணத்திலிருந்து ஜீவனுக்குள் பிரவேசித்திருக்கிறீர்கள் என்று அறிந்திருந்தால், உலகத்திலேயே மிகவும் சந்தோஷமுள்ள நபராக நீங்கள் இருக்க வேண்டும். உங்களுக்குள் வாசம் பண்ணும் பரிசுத்த ஆவி... ''இயேசு கிறிஸ்து, நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்'' என்று வேதம் உரைத்திருக்கிறது. ஸ்தாபனங்கள், “அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன என்று நம்புகிறோம்'' என்கின்றன. பரிசுத்த ஆவி, “ஆமென்.'' ''இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அது அப்படியே ஆகக்கடவது'' என்கின்றது. 109. ''நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், புறஜாதிகளுக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது'' என்று வேதம் கூறுகிறது? “மெதோடிஸ்டுகள் வரவழைக்கும்'' அல்லது பாப்டிஸ்டுகள் வரவழைக்கும்! என்றல்ல. ''நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் யாவருக்கும் அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்று பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வார்கள். அப்படித்தான் வேதம் கூறுகிறது. அது உங்கள் மேல் படும்போது, நீங்கள் ''ஆமென்'' என்கிறீர்கள். சபையோ, “ஓ, அதனால் வித்தியாசம் எதுவுமில்லை என்கிறது. ஆனால் உங்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவி அவருடைய வார்த்தைக்கு, “ஆமென்'' என்று உரைக்கும். ''மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.'' பார்த்தீர்களா? 110. ஒரு ஆப்பிள் கனி இவை எல்லாம் தொடங்கக் காரணமாயிருந்தது என்று ஒரு வேத வாக்கியத்தையாகிலும் நீங்கள் எனக்குக் காண்பிக்க விரும்புகிறேன். அவர்கள் ஆப்பிள் கனியைப் புசித்ததாக எனக்கு காண்பியுங்கள். காயீன் அப்படித்தான் நினைத்திருந்தான் என்றும், அவனுடைய வித்து இன்றைக்கும் அப்படித் தான் நினைத்துக் கொண்டிருக்கிறது என்றும் உங்களுக்குக் காண்பித்தேன். ஆனால் தேவனுடைய ஆவிக்குரிய வெளிப்பாடு, அது மனிதனுக்கும் ஸ்திரீக்கும் இடையே முறைதவறி நடந்த இனசேர்க்கை என்பதை வேதத்தின் மூலம் நிரூபிக்கிறது. அங்கு தான் உங்கள் இராட்சதர் தோன்றினர். அங்கு தான் உங்கள் பாவம் தோன்றினது. அங்கு தான் அழிவு தோன்றினது. அங்கு தான் அது ஆரம்பித்தது. இப்பொழுது கவனியுங்கள், சற்று பாருங்கள். சர்ப்பமானது இரட்டிப்பான நுண்ணறிவு கொண்டது. அதன் வித்தும் எப்பொழுதுமே இரட்டிப்பான நுண்ணறிவு படைத்தது. நான் பிரசங்க பீடத்தில் ஏறி, என் கையில் ஒலிபெருக்கியை பிடித்துக் கொண்டு, பிரசங்க பீடத்தில் காலூன்றி இதை கேட்க விரும்புகின்றேன்: (சகோ. பிரான்ஹாம் ஒலிபெருக்கியை அசைக்கிறார் - ஆசி ) ''நுண்ணறிவு படைத்த மேதைகள் இன்று எங்கேயுள்ளனர்?'' உங்கள் போதகர் வேத பள்ளிக்கு சென்று, அதிக அறிவைப் பெற்று அங்கு வந்து நிற்கிறார். அவர் நகரத்திலுள்ள சபைகள் எல்லாவற்றிலும் மிகப்பெரிய சபைக்கு மற்றும் அது போன்ற காரியங்களுக்கு போதகராக இருக்கிறார்... சர்ப்பத்தின் வித்து எங்கு நின்று கொண்டிருக்கிறது? அப்படிப்பட்ட நுண்ணறிவு படைத்த இடங்களில் அறிவு நிறைந்த மேதைகள். அங்கு தான் அவன் இருக்கிறான். அங்கு தான் அவன் படுத்திருக்கிறான். “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலே ஆகும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” பாருங்கள்? அங்கே தான் நீங்கள்.... 111. தெரு முனையில் நின்று கதறி அழுது, ஒரு பழைய கிடார் (guitar) இசைக் கருவியை இசைத்து, ''சகோதரரே, கர்த்தரைத் தேடி கண்டடையுங்கள்'' என்று கூறும் சிறு சகோதரனைப் பாருங்கள். (சகோ. பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை ஒருமு றை தட்டுகிறார் - ஆசி) போதகர் அந்த பக்கம் நடந்து செல்கிறார்: ''ஹ, என் சபையோர் அங்கு செல்லக் கூடாது. நான் சாவகாசம் கொள்ள மாட்டேன். லிடியும், ஜானியும் என்னை அப்படிப்பட்ட இடத்தில் காண்பதை நான் விரும்பமாட்டேன்.'' போ, பிசாசின் சந்ததியே-! நீ நித்திய அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறாய். அது உண்மை. நான் மற்றொரு வார்த்தையும்கூட இங்கு உபயோகிக்க முடியும் - வேசிப் பிள்ளைகள். அதுதான் அது பாருங்கள். “என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால், அவன் என்னிடத்தில் வரமாட்டான். கடைசி நாளில் நான் அவனை எழுப்புவேன். அவர்கள் ஒருவராகிலும் இழந்து போகவில்லை.'' நான் பெற்றுக் கொண்டேன், அதை நான் காத்துக் கொள்வேன். அவரைத்தவிர வேறுயாரும் அதை செய்ய முடியாது. எல்லாம் அவருக்குள் இருக்கிறது. நான் ஒன்றை செய்தேன் என்று நீங்கள் யாரும் கூற முடியாது. தேவனுடைய கிருபையே எல்லாவற்றையும் செய்தது. ஆகவே நான் ஒன்றுமே செய்யவில்லை. நீங்களும் ஒன்றுமே செய்யவில்லை. நீங்கள் எவ்வித தகுதியும் பெற்றிருக்கவில்லை. அவை ஒவ்வொன்றையும் தேவன் தாமே செய்தார். அதில் ஒரு சிறுபாகத்தை செய்ய உங்கள் சிறு விரலைக்கூட நீங்கள் அசைக்கவில்லை. நீங்கள், ''நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவன். நான் இதை செய்தேன்'' எனலாம். ஆனால் அதற்கும் இதற்கும் சிறிது கூட சம்பந்தமில்லை. தேவன் ஒருவரே அதை செய்தார். தேவனுடைய இரக்கம். 112. நான் வருந்துகிறேன், இன்னும் 11.00 மணி ஆகவில்லை. இருப்பினும் நான் முடிக்கப் போகின்றேன். இவை உண்மையென்று வேதம் கூறுகிறதென்று எத்தனை பேருக்குத் தெரியும்? முக்கியமாக பிரான்ஹாம் கூடாரத்தை சேர்ந்தவர்கள். (சபையார் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி) நாங்கள் போதித்து விசுவாசிப்பதில் இது பதினாறில் ஒரு பாகம் மாத்திரமே. இங்கு புதிதாக வந்திருப்பவர்களுக்கு இதைக்கூற விரும்புகிறேன்- அதாவது அங்கத்தினராய் இராதவர்களுக்கு. நாங்கள் இது வேதாகமம் என்றும், வேதாகமம் முழுவதும் தேவனுடைய சத்தியத்தைக் கொண்டது என்றும் விசுவாசிக்கிறோம். பழைய ஏற்பாட்டின் காலத்தில், எது உண்மையென்றும் எது உண்மையல்ல என்றும் அறிந்து கொள்ள ஒரு வழி இருந்தது. அவர்களுக்கு எழுதப்பட்ட நியாயப்பிரமாணம் இருந்ததென்று நாமறிவோம். அது எத்தனை பேருக்குத் தெரியும்? உடன்படிக்கை பெட்டியில் பத்து கட்டளைகள் எழுதப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. அது, “விபச்சாரம் செய்யாதிருப்பாயாக. விபச்சாரம் செய்தவன் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்'' என்றது. பாருங்கள்? அதுவே நியாயப்பிரமாணம். நியாயப்பிரமாணத்தின் கட்டளையாயிருந்தது. உடன்படிக்கை இப்படி வைக்கப்பட்டிருந்தது. அதற்குள் இருந்தது நியாயப்பிரமாணம் நியாயப்பிரமாணத்தின் கட்டளைகளோ உடன்படிக்கை பெட்டியின் ஓரத்தில் இருந்தது. ஒரு மனிதன் விபச்சாரம் செய்தால், கட்டளைகளை அவர்கள் எடுத்து அவனைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும், என்பதைப் படிப்பார்கள். அவர்கள் அவனை வெளியே கொண்டு சென்று கல்லெறிவார்கள். அதுவே கட்டளைகளின் மீதுள்ள பிரமாணமாயிருந்தது. 113. இதைத் தவிர அவர்கள் அறிந்து கொள்ள இன்னும் இரண்டு வழிகள் இருந்தன (மூன்று என்பது நிலைவரப்படுத்தும் ஒன்று). அவர்கள் அறிந்து கொள்ள மற்றொரு வழி இருந்தது. அது தீர்க்கதரிசி அல்லது சொப்பனக்காரனின் மூலம் அறிந்து கொள்ளுதல், அது எத்தனை பேருக்குத் தெரியும்-? ''உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன்.'' (எண். 12:6). அது உண்மை. அவன் தீர்க்கதரிசனம் உரைத்தான். ஒரு மனிதன் வந்து, “ஓ, அல்லேலூயா, நான் பெற்றுக் கொண்டேன். நான் இப்பொழுது கர்த்தருடைய நாமத்தினால் தீர்க்கதரிசனம் உரைக்கிறேன். எனக்கு வெளிப்பாடு கிடைத்து விட்டது'' என்று கூறுவானானால், நீங்கள் செய்வது போல் அவர்கள் அதை சும்மா விட்டுவிட மாட்டார்கள். அவர்கள் முதலாவதாக அதை தேவனைக் கொண்டு பரிசோதித்து பார்த்தார்கள். 114. ஆரோனின் மார்ப்பதக்கத்தில் ஊரீம் தும்மீம் என்பவை இருந்தன (யாத். 28:30). அந்த சொற்களை எத்தனை பேர் கேட்டிருக்கிறீர்கள்? அது என்ன? அது 12 கற்கள். அவை இஸ்ரவேல் கோத்திரத்துக்கு அடையாளமாயிருந்தன. ஒவ்வொரு பக்கமும் ஆறு கற்கள். வச்சிரக்கல் யூதா கோத்திரத்துக்கு அடையாளமாய் இருந்தது. இப்படியாக பன்னிரண்டு கற்கள். அவர்கள் தீர்க்கதரிசி அல்லது சொப்பனக்காரனை கொண்டு சென்று, இந்த மார்ப்பதக்கத்தை தொங்கவிட்டு, அவனை அந்த இடத்தில் நிறுத்தி, “உன் தீர்க்கதரிசனம் என்னவென்று இப்பொழுது சொல்'' என்பார்கள். அவன், “கர்த்தர் என்னோடு பேசி இன்னின்ன காரியத்தை உரைத்தார்'' என்பான். அது எவ்வளவு உண்மையாக காணப்பட்டாலும் - அது முற்றிலும் உண்மை என்பது போல் ஒலிக்கக் கூடும். இருப்பினும் ஊரீம் தும்மீமிலுள்ள கற்கள் ஒருமித்து பிரகாசித்து வானவில் வண்ணத்தை உண்டாக்கி, இயற்கைக்கு மேம்பட்ட அந்த கிரியை அதை உறுதிபடுத்தாமல் போனால் - பாருங்கள். தேவன் எப்பொழுதுமே தமது வார்த்தையை உறுதிபடுத்துகிறவராயிருக்கிறார். அந்த இயற்கைக்கு மேம்பட்ட ஒளி அங்கு விட்டுவிட்டு பிரகாசிக்காமல் போனால், அது எவ்வளவு உண்மையாக காணப்பட்டாலும் எனக்கு கவலையில்லை, அது தவறு. 115. சொப்பனக்காரன் ஒருவன், ''நான் ஒரு சொப்பனம் கண்டேன். அதன்படி இஸ்ரவேல் ஜனங்கள், புறப்பட்டு ஓரிடத்துக்கு செல்ல வேண்டும். ஏனெனில் சீரியர்கள் வந்து இதை முற்றுகையிடப் போகிறார்கள்'' என்று கூறுவானானால், அவர்கள் சொப்பனக்காரனை அங்கு கொண்டு செல்வார்கள். அவன் தான் கண்ட சொப்பனத்தை உரைப்பான். அங்கு ஒளி விட்டுவிட்டு பிரகாசிக்கவில்லை என்றால், அது எவ்வளவு உண்மையாக காணப்பட்ட போதிலும், சீரியர்கள் ஏற்கனவே பாளயமிறங்கியிருந்தாலும், அது தவறு தான். இல்லை ஐயா. அது முற்றிலுமாக ஊரீம் தும்மீம் என்பவைகளால் நிரூபிக்கப்பட வேண்டும். பழைய ஆசாரியத்துவம் நீக்கப்பட்டு விட்டதென்று எல்லோருக்கும் தெரியும். அதனுடன் கூட ஊரீமும் தும்மீமும் சென்றுவிட்டது. அது நமக்குத் தெரியும். இல்லையா? (சபையார் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி) புது ஆசாரியத்துவம் வந்து விட்டது. இன்றைக்கு ஊரீம் தும்மீமாக நமக்கு எது உள்ளது? ஆம் ஐயா, தேவனுடைய வார்த்தை. ஆம், ஐயா அதுதான். (சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய வேதாகமத்தைச் சுட்டிக் காட்டுகிறார் - ஆசி) எந்த மனிதனுக்காகிலும் எந்த விதமான வெளிப்பாடு கிடைக்கப் பெற்று, அவன் பேசுவது எதுவோ, அல்லது அவன் பெற்றுள்ள உபதேசம் வேதாகமம் முழுவதிலும் ஒத்துப் போகாவிட்டால், அவன் கூறுவது தவறாகும். அவன் எந்த ஸ்தாபனத்தைச் சேர்ந்தவனாயிருந்தாலும் எனக்கு கவலையில்லை. அவன் எவ்வளவு நல்லவனாயிருந்தாலும், எவ்வளவு புத்திசாலியாயிருந்தாலும், எவ்வளவு கல்வி கற்றவனாயிருந்தாலும், அவன் கூறுவது தவறாகும். 116. இந்த சபையில் நாம் போதிக்கப்பட்டுள்ளதற்கு முரணாக, ஒருவன் தெளிப்பு ஞானஸ்நானம் பரவாயில்லை என்றால், அவன் உங்களிடம் ஒரு பொய்யை கூறினான். அது ஊரீம் தும்மீமை பிரகாசிக்கச் செய்யாது. தண்ணீர் ஊற்றினால் பரவாயில்லை என்று அவன் உங்களிடம் கூறினால், அவன் பொய் சொன்னான். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றால் பரவாயில்லை என்று அவன் கூறினால், அவன் உங்களிடம் பொய் சொன்னான். அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன என்று அவன் கூறினால், அவன் உங்களிடம் பொய் சொன்னான். பெண்கள் பிரசங்கம் செய்வதனால் பாதகம் இல்லை என்று அவன் கூறினால், அவன் உங்களிடம் பொய் சொன்னான். நீங்கள் உங்கள் ஸ்தாபனத்தில் நிலை கொண்டிருந்தால் பரவாயில்லை என்று அவன் கூறினால், அவன் உங்களிடம் பொய் சொன்னான். அது ஊரீம் தும்மீமை பிரகாசிக்கச் செய்யாது. இப்படியாக டஜன் கணக்கான செயல்கள் தாய் வேசியிலிருந்து இங்கு பிரவேசித்து விட்டன. ஆகையால் தான் நாங்கள் ஸ்தாபனங்களிலிருந்து விலகியிருக்கிறோம். 117. அந்த ஸ்தாபனங்களிலுள்ள சகோதரர்களையும் சகோதரிகளையும் நாங்கள் நேசிக்கிறோம். ஆனால் நீங்கள் போய், “நான் மெதோடிஸ்டு, ஆகையால் நான் கிறிஸ்தவனாயிருக்கிறேன்'' என்று கூற வேண்டாம். நீங்கள் தேவனுடைய ஆவியால் பிறந்துள்ளதால் கிறிஸ்தவராயிருக்கின்றீர்கள். நீங்கள் மெதோடிஸ்-டாகவோ, பாப்டிஸ்டாகவோ இருக்க வேண்டும் என்பதில்லை. நீங்கள் அவைகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதில்லை. நீங்கள் தேவனுடைய ஆவியால் மாத்திரம் பிறந்திருக்க வேண்டும். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (சபையார் ''ஆமென்'' என்கின்றனர் -ஆசி). இந்த அடிப்படையில், இங்குள்ள எவராகிலும் ஒத்துழைத்து, இந்த ஆராதனையின் ஐக்கியத்துக்குள் வந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் தண்ணீர் முழுக்கு ஞானஸ்நானம் பெற விரும்பினால், குளம் இங்குள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் அவர்கள் ஞானஸ்நானம் கொடுக்கப் போகிறார்கள். இங்கு எவராகிலும் இருப்பார்களானால்... நாங்கள் இங்கிருக்கிறோம். அது உண்மை. இங்கு இருக்கின்ற அநேகரில் எவராயினும், வரவேண்டும்மென விரும்புவோர்; எந்த வழியிலாவது வரலாம். நாங்கள் இங்கேயிருக்கிறோம். அது சரி. 118. எங்களுக்கு அங்கத்தினர்கள் கிடையாது. நீங்கள் இங்கு சபைக்கு வருகிறீர்கள். அவ்வளவு தான். கிறிஸ்து மெதோடிஸ்டு சபையில் இருக்கிறார், பாப்டிஸ்டு சபையில் இருக்கிறார், பிரஸ்பிடேரியன் சபையில் இருக்கிறார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். அவை ஒவ்வொன்றிலும் அவருக்கு அங்கத்தினர்கள் உண்டு. ஆனால் இன்று நடப்பது என்னவெனில்... கள்ளத் தீர்க்கதரிசனம். அவர்கள் வேதத்துக்கு முற்றிலும் முரணாயுள்ள தங்கள் சபை உபதேசங்களை பகிரங்கமாக போதிக்கின்றனர். இவ்வளவு வெளிப்படையாக யாராகிலும் எனக்கு விவரித்துக் காண்பித்திருந்தால், நான் உடனே சென்று வேதத்தை ஆராய்ந்து பார்த்து என் தவறை சரிசெய்து கொண்டிருப்பேன். (இதை செய்ய போதுமான அளவுக்கு பரிசுத்த ஆவி எனக்குள் இருக்கிறதென்று நினைக்கிறேன்). நான் நடந்து சென்று போதகரிடம் கைகுலுக்கி, என் பெயரை புஸ்தகத்தில் பதிவு செய்து கொண்டு, அதே சமயத்தில் என் இருதயத்தில் பகையும், குரோதமும், பொறாமையும், வெறுப்பும் கொண்டிருந்து, இயேசுகிறிஸ்து சுகமளிப்பவர் என்று விசுவாசியாமலிருந்தால், நான் வேகமாக சென்று தேவனிடம் அதை சரி செய்து கொள்வேன். நான் நிச்சயம் அப்படி செய்வேன். அதைக் குறித்து நான் உத்தமமாக செயலாற்றுவேன். நான் தேவனுடன் சரிசெய்து கொள்வேன். நான் வெறும் பாப்டிஸ்டாகவோ அல்லது மெதோடிஸ்டாகவோ மாத்திரம் இருந்தால், நான் சென்று கிறிஸ்தவ மார்க்கத்தை என் இருதயத்தில் கொள்வேன். நான் அப்படிசெய்வேன். ஆம், ஐயா. 119. இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், கர்த்தருக்கு சித்தமானால் எழுப்புதல் கூட்டங்கள் வரும் புதன் இரவு இந்த அடிப்படையில் துவங்கவிருக்கிறது. நண்பர்களே, கேளுங்கள். உண்மையும் ஜீவனுமுள்ள தேவன் ஒருவர் இருக்கிறார். அது உண்மை. இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன். பரிசுத்த ஆவி இன்று சபையில் உள்ளது. அதை மாத்திரம் யாராகிலும் என்னிடம் கூறியிருந்தால், அதை சந்தேகிக்க எனக்கு உரிமையுண்டு. ஆனால் கேளுங்கள், நான் சிறுவனாயிருந்த போது ஒரு நாள் நான் ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருந்தேன். அவரை நான் கண்டேன். அவர் கூறினதை நான் கேட்டேன். அவர், ''இந்த ஆபாசமான பெண்களிடமிருந்து விலகியிரு. சிகரெட் புகைத்தல், குடித்தல், சபித்தல் போன்றவைகளைச் செய்யாதே. நீ பெரியவனாகும் போது உனக்கு ஒரு பணியை வைத்திருக்கிறேன்'' என்றார். அவர் தமது வார்த்தையைக் காக்கும் உண்மையுள்ள, ஜீவனுள்ள தேவன் என்று நானறிவேன். 120. நான் சிறிது பெரியவனான போது, அவர் என்னை சந்தித்தார். அவர் எப்படி என்னுடன் பேசினார். எப்படி அவரை நான் தொலைவில் கண்டேன், எரிகிற முட்செடியில் காண்பதுபோல, அந்த அக்கினி அங்கு அசைவாடிக் கொண்டு இருந்தது. அவர் என்னோடு பேசி, ஒவ்வொரு முறையும் என்ன நடக்கும் என்று அவர் கூறின யாவும் எப்போதும் இருந்தது போல இப்போதும் பிழையின்றி நிறைவேறின. அந்த பிழையற்ற காரியங்களை என்னிடம் கூறினவரே, இப்பொழுது நான் போதிக்கும் விதத்தில் வேதத்தைப் போதிக்க என்னை ஊக்குவிக்கிறார். அது உண்மை. எனவே அது தேவனிடத்திலிருந்து வருகிறது. என்னைப் பொறுத்தவரையில் அது சர்வ வல்லவமையுள்ள தேவன், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். இயேசு, ''நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு வந்தேன், மறுபடியும் பிதாவினிடத்திற்குப் போகிறேன்'' என்றார். அவர் வந்த போது.... அவர் வனாந்தரத்தில் தேவனாயிருந்த போது, அவர் எரிகிற ஒளியாய் இருந்தார். எத்தனை பேருக்கு அது தெரியும்? (சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி). அவர் அக்கினி ஸ்தம்பமாக, எரிகிற ஒளியாக இருந்தார். அவர் உலகத்தில் இயேசுவாக வந்து, ''நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு வந்தேன். மறுபடியும் பிதாவினிடத்திற்குப் போவேன். தேவனிடத்திலிருந்து வந்தேன். மறுபடியும் நான் தேவனிடத்திற்கு போகிறேன்'' என்றார். 121.அவர் மரித்து அடக்கம் பண்ணப்பட்டு உயிர்த்தெழுந்தார். தமஸ்குவுக்குப் போகும் வழியில் பவுல் அவரை சந்தித்த போது, அவர் எப்படியிருந்தார்? (யாரோ ஒருவர் ''அக்கினி ஸ்தம்பம் என்று கூறுகிறார் - ஆசி) அக்கினி ஸ்தம்பமாக. ஆம். ஐயா அவர் உலகத்திலிருந்த போது என்ன செய்தார்? அவர் பவுலை சந்தித்த போது என்ன செய்தார்-? அவனை எங்கே அனுப்பினார்-? அவனை ஒரு தீர்க்கதரிசியிடம் அனுப்பினார். அவன் பவுலிடம், எப்படி ஞானஸ்நானம் பெற வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று கூறினான். அவன் பவுலின் மேல் கைகளை வைத்து அவனை சுகப்படுத்தினான். அவன் ஒரு தரிசனம் கண்டதாக பவுலிடம் கூறினான். அதே இயேசு இன்று இங்கிருந்து கொண்டு, அதே காரியங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இன்னும் அக்கினி ஸ்தம்பமாக இருக்கிறார். அவர் அதே காரியத்தை போதித்து, அவருடைய வார்த்தையை அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் உறுதிப்படுத்திக் கொண்டு வருகிறார். நான் கிறிஸ்தவனாய் இருப்பதற்கு மகிழ்வுறுகிறேன், மகிழ்ச்சி மேலிட்டு என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை! நீங்கள் கிறிஸ்தவர்களாயிருப்பதால் நான் மகிழ்வுறுகிறேன். 122. இந்த கூடாரத்தைச் சேர்ந்தவர்களே, இதன் பெயரை மாற்றப் போகிறேன் என்று நான் உங்களிடம் கூறினேன். இது ''பிரான்ஹாம் கூடாரம்'' என்றழைக்கப்படுவது சரியல்ல. நான் வெறும் மனிதனே. இதை மாற்றி வேறு பெயர் வைக்கப் போகிறோம். சற்று பின்பு அதை செய்வோம். இது ஜீவனுள்ள தேவனுடைய சபையாக இருக்க விரும்புகிறேன். இது “மெதோடிஸ்டு,'' ''பாப்டிஸ்டு,'' ”பிரஸ்பிடேரியன்,'' “பெந்தேகோஸ்தே சபை'' என்பதாக இருக்க நான் விரும்பவில்லை. அவர்கள் எல்லோரையும் என் முழு இருதயத்தோடும் நேசிக்கிறேன். எது எதுவென்று எனக்குத் தெரியாது, என்னால் சொல்ல முடியாது. 123. நான் வார்த்தையை மாத்திரம் பிரசங்கிக்க வேண்டும். நான் வலையை வீசி அதை இழுக்கிறேன். அதில் தவளைகள், தண்ணீர் சிலந்திகள், பாம்புகள் உள்ளன. அதில் சில மீன்களும் உள்ளன. அதை தீர்மானிப்பது தேவனுடைய பொறுப்பு. நான் வலையை இழுக்க மாத்திரம் செய்கிறேன். வார்த்தையை பிரசங்கித்து வலையை இழுத்து, “கர்த்தாவே, பீடத்தைச் சுற்றிலும் இதோ இவர்கள். உமக்கு சொந்தமானவர்களை நீர் அறிந்திருக்கிறீர். அவர்களை நீர் உலகத்தோற்றத்துக்கு முன்பே அறிந்திருக்கிறீர். எதுஎதுவென்று எனக்குத் தெரியாது. ஆனால் உமக்குத் தெரியும். எனவே கர்த்தாவே, அது உம்மைப் பொறுத்தது. இவ்வளவு சிறப்பாக மாத்திரமே என்னால் செய்ய முடியும். நான் இங்கிருந்து புறப்பட்டு வேறொரு இடத்துக்கு சென்று வலையை வீசி வேறொரு கூட்டத்தைக் கொண்டு வருவேன். அவ்வளவு தான் என்னால் செய்ய முடியும்'' என்பேன். அது சரி. ஓ, நான் பயணம் செய்ய வேண்டுமென்று தோன்றுகிறது, நான் பயணம் செய்ய வேண்டுமென்று தோன்றுகிறது, என் பரலோக வீடு பிரகாசமாயும் பளிங்காகவும் உள்ளது; நான் பயணம் செய்ய வேண்டுமென்று தோன்றுகிறது. 124.ஞாபகம் கொள்ளுங்கள், யாருக்காகிலும் என்னைக் காண வேண்டுமென்று விரும்பினால், இங்குள்ள திரு. மெர்சியரை பட்லர் 2-1519 தொலைபேசி எண்ணில் கூப்பிடுங்கள். உங்களைக் காண்பதற்கு எங்களுக்கு மகிழ்ச்சியாயிருக்கும். உங்களுக்கு அருமையானவர்கள் இங்கு வந்திருந்து எழுப்புதல் கூட்டத்துக்கு இருக்க முடியாமல் வேகமாக செல்ல வேண்டுமென்றிருந்தால்; நானும் கூட இரண்டு நாட்களுக்கு இங்கிருக்க மாட்டேன். நான் அங்கு சென்று வேதத்தைப் படித்து, ''கர்த்தாவே, நீர் என் அருகில் இருக்கிறீர். நீர் இங்கிருக்கிறீர் என்று அறிவேன். நாங்கள் உம்மிடத்தில் சேர்ந்தால், நீர் எங்களிடத்தில் சேருவீர் என்று உம்முடைய வார்த்தை உரைக்கிறது'' (யாக்.4:8) என்று அக்கினி ஸ்தம்பம் அசையத் துவங்கும் வரைக்கும் ஜெபித்துக் கொண்டிருப்பேன். அப்பொழுது அது ஆயத்தமாயுள்ளதென்று நான் அறிந்து கொள்வேன். பிறகு நான் மேடையின் மேல் சுகமளிக்கும் ஆராதனையில் ஜெபிக்கச் சென்று, வியாதியஸ்தருக்கும் அவதியுறுவோருக்கும் என்னால் இயன்றதை செய்வேன். 125. உங்கள் தயவை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். நீங்கள் வரும் போது, விசுவாசித்து வாருங்கள். நாங்கள் ஒரு பெரிய கூட்டத்தை எதிர்பார்க்கிறோம். இதை கூற விரும்புகிறேன். சகோ. ஜெப்பிரீஸ்.... அவர் இன்றிரவு இங்கிருக்கிறாரா? சகோ. ஜெப்பிரீஸையும் அவருடைய ஊழியத்தையும் நான் பாராட்ட விரும்புகிறேன். அவர் தீவுகளுக்கு திரும்பிச் சென்றுவிட்டாரென்று எண்ணுகிறேன். சகோதரன் சகோதரி ரைட்டையும் மற்றும் அநேகரையும் இங்கு காண்பதில் எனக்கு மகிழ்ச்சி. நான் சற்று முன்பு வழக்கறிஞர் ராபின்ஸன் உள்ளே வருவதைக் கண்டேன். அன்றொரு நாள் அவர் அளித்த செய்திக்காக அவரைப் பாராட்ட விரும்புகிறேன். அது யாரென்று யாரும் அறிவிக்கவில்லை. நான் வெட்கப்பட்டு போனேன். அவர் தீர்க்கதரிசனங்களின் பேரில் ஒரு நல்ல செய்தி அளித்தார் இன்றிரவு நான் பிரசங்கித்தது போன்ற ஒன்று. இன்று காலை, இல்லை நேற்றிரவு, வேறொரு போதகர் இங்கிருந்தார் - தேவ சபையைச் சேர்ந்த சகோ.ஸ்மித். இன்றிரவு அவர் இங்கிருக்கிறாரா இல்லையாவென்று எனக்குத் தெரியாது. பிரசங்க பீடத்தில் நின்று அந்த பக்கம் பார்த்தால், யாரையும் அடையாளம் கண்டு கொள்வது கடினமாயுள்ளது. அது மங்கலாயுள்ளது. எனவே இது யாரென்று கூற முடியவில்லை. சகோ. ஸ்மித், இங்கு நீங்கள் இருக்க நேர்ந்தால், உங்களைப் பாராட்டுகிறோம். 126. இங்கு உட்கார்ந்து கொண்டிருப்பது ஜார்ஜியாவிலிருந்து வந்துள்ள சகோதரன் அல்லவா? சகோ.காலின்ஸின் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர்? (சகோ. நெவில் 'ஆம்' என்கிறார் - ஆசி) சகோதரனே, மறுபடியுமாக இன்றிரவு உங்களைக் காண்பதில் எனக்கு மகிழ்ச்சி. மற்றவர்களையும் கூட, எல்லோரையும். நீங்கள் யாரென்று ஒவ்வொருவருக்கும் தெரியும். அந்த சமயம் அந்த பெண்ணுக்காக ஜெபிக்கச் சென்ற சகோதரியும் சகோதரனும் இவர்கள் என்று நினைக்கிறேன். இங்கு ஒரு மருத்துவர் அமர்ந்திருக்கிறார்.- மருத்துவரே, கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. 127. போதகர்களே, சகோதரர்களே, நான் ஆணித்தரமாக கூறின விதத்தைக் கண்டு என் மீது கோபங்கொள்ள வேண்டாம். இது எங்கள் கூடாரம். இதற்காகவே நாங்கள் உறுதியாய் நிற்கிறோம். இதை நாங்கள் வார்த்தையின் அடிப்படையில் போதித்து, அதைக் கொண்டு அவர்களைக் குலுக்கப் பார்க்கிறோம். நீங்கள் வரிசையை விட்டு அகல நேர்ந்தால், நாங்கள் ''இதோ அது ஒலிநாடாவில் உள்ளது. பாருங்கள். இதோ அது ஒலிநாடாவில் உள்ளது என்று கூறுவோம்: நாங்கள் கூற வேண்டிய இன்னும் அநேக காரியங்கள் உண்டு... பிறகு லியோ அவர்கள். இவ்வளவை நீங்கள் பெற்றுக் கொண்டீர்கள். அதில் நிலைத்திருங்கள். நாங்கள் சிறிது கழிந்து மற்றவைகளை போதிப்போம். தர்ப்பூசணியை தின்று கொண்டிருந்த ஒருவன், ''அது மிகவும் நன்றாயுள்ளது. இன்னும் கொஞ்சம் இருக்கிறதா?'' என்று கேட்டானாம், நாங்கள் இன்னும் வரப் போகின்ற அநேக காரியங்களை கூறப் போகிறோம். 128. கர்த்தர் உங்களை அதிகமாய் ஆசிர்வதிப்பாராக. இப்பொழுது நாங்கள் ஞான ஸ்நான ஆராதனையை நடத்தப்போகிறோம். அப்படித்தானே சகோ. நெவில்? (சகோ. நெவில் ''ஆம்'' அப்படித்தான் என்கிறார் - ஆசி). இப்பொழுது ஞான ஸ்நானம் பெற்றுக்கொள்ள விருப்பமுடையோர் யாராகிலும் உண்டா? நீங்கள் யாராயிருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க நாங்கள் இருக்கிறோம். ஞானஸ்நானம் பெற வேண்டுவோர் உங்கள் கைகளையுயர்த்துங்கள். இங்கு ஒரு ஸ்திரீ இருக்கிறாள். வேறு யாராகிலும் உண்டா-? ஞானஸ்நானத்திற்கென்று ஆண்களுக்கும் பெண்களுக்கும் மாற்று உடைகள் எங்களிடம் உண்டு. 129. நாங்கள், ''பாப்டிஸ்டு சபையை விட்டு வாருங்கள்,'' “மெதோடிஸ்டு சபையை விட்டு வாருங்கள்'' என்று சொல்லவில்லை. நாங்கள் சொல்லவில்லை..... உங்கள் சபைக்கு நீங்கள் திரும்பவும் செல்லுங்கள். நீங்கள் வேதம் கூறியுள்ளபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் - இயேசுவின் நாமத்தில் மாத்திரம் அல்ல, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் (அதுதான் வேதப் பூர்வமானது) ஞானஸ்நானம் பெறாமலிருந்தால், நீங்கள் தவறான முறையில் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறீர்கள். எனக்குத் தொல்லை எதுவும் வேண்டாம், நான் நதிக்கரையை அடையும் போது, எல்லாம் தெளிவாக இருக்க விரும்புகிறேன். நான் அந்த சமயத்தில் உள்ளே ஏறுவதற்கென்று பயணச்சீட்டை வைத்திருக்கிறேன். நீங்களும் பயணச்சீட்டை வைத்திருக்கும்படி உங்களுக்கு ஆலோசனை சொல்லுகிறேன். உங்கள் சபைக்கு திரும்பவும் செல்லுங்கள். அது உங்களுக்கும் தேவனுக்கும் இடையேயுள்ள ஒன்று. அவ்வளவு தான் என்னால் கூற முடியும். வேதத்தில் எவருமே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலேயன்றி வேறு எந்த வகையிலும் ஞான ஸ்நானம் பெறவில்லை. அப்படி வேறு வகையில் ஞானஸ்நானம் பெற்றவர்கள் மறுபடியும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற வேண்டுமென்று பவுல் கட்டளையிட்டான். அது உண்மை. “ஒரு தூதனும் வேறெதையாகிலும் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாய் இருக்கக்கடவன்'' என்று பவுல் கூறினான். அவன் அவர்களுக்கு மறுபடியும் ஞானஸ்நானம் கொடுத்தான். அவன் என்ன செய்தானோ அதை நாமும் செய்ய வேண்டுமென்று அவன் கட்டளையிட்டிருக்கிறான், தேவனுக்கு சித்தமானால் அதையே நாம் செய்வோம். 130. நாங்கள் கால்களை கழுவுவதில் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். நாங்கள் இராப்போஜனம் ஆசரிப்பதில் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். நாங்கள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் நம்பிக்கை கொண்டிருக்கிறோம் - ஆவியாக அல்ல, ஆனால் காணக்கூடிய சரீரத்தில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மகிமையில் வருவாரென்று. மரித்தோர் சரீரப்பிரகாரமாக உயிர்த்தெழுந்து ஒரு சரீரத்தை பெறுவார்கள் - கல்லறைக்குள் சென்ற பழைய சுருக்கம் விழுந்த சரீரம் அல்ல, அவர்கள் வாலிப சரீரம் கொண்டவர்களாய் என்றென்றைக்கும் உயிரோடிருப்பார்களென்று விசுவாசிக்கிறோம். ஆத்துமாவின் அழியாத் தன்மையைக் குறித்து நாங்கள் விசுவாசிக்கிறோம் - முற்றிலுமாக. ஒரே ஒரு வகையான நித்திய ஜீவன் உண்டு என்றும் அந்த ஜீவனை நீங்கள் கிறிஸ்து இயேசுவினிடமிருந்து பெறுகிறீர்கள் என்றும் நாங்கள் விசுவாசிக்கிறோம். முற்றிலும் உண்மை. ஆகவே எங்களுக்கு நித்திய தண்டனையில் நம்பிக்கையில்லை. நரகம் உண்டென்று நாங்கள் விசுவாசிக்கிறோம். அக்கினியும் கந்தகமுமான கடல். ஆனால் அது நித்திய காலமாக எரிகிறதென்று நாங்கள் விசுவாசிப்பதில்லை. அப்படியானால் அதில் தள்ளப்பட்டவர்களும் நித்திய ஜீவனைப் பெற்றிருக்க வேண்டும். ஒரே ஒரு நித்திய ஜீவன் மாத்திரமே உண்டு. அது தேவனிடத்திலிருந்து வருகிறது. அது உண்மை. நீங்கள் ஒருக்கால் பத்து லட்சம் ஆண்டுகளாக அல்லது கோடிக்கணக்கான ஆண்டுகளாக அதில் எரியலாம். எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் நித்திய காலமாக அதில் எரிய முடியாது. ''நித்தியம்'' (eternal) என்பதற்கும் “சதாகாலங்களிலும் (forever) என்பதற்கும் வித்தியாசமுண்டு. ”சதாகாலங்களிலும்'' என்னும் சொல் “குறிப்பிட்டகாலம் வரைக்கும்'' என்று பொருள்பட்டு, ஒரு கால வரையைக் கொண்டது. ஆனால், ''நித்தியம்'' என்பது... உங்களுக்கு நித்திய தண்டனை கிடையாது. உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டு. ஒரே ஒரு வகையான நித்திய ஜீவன் மாத்திரமேயுண்டு. நித்திய ஜீவனைப் பெற்றுள்ளவன் என்றென்றைக்கும் தேவனால் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறான். ஆனால் பாவம் செய்த ஆத்துமா, அதற்கு என்ன நேரிடுகிறது? (சபையார் ''ஆமென்” என்கின்றனர் - ஆசி). அது சாகவே சாகும். அப்படியானால் அதற்கு நித்திய ஜீவன் இல்லை, அது தண்டனையைப் பெறுகிறது. ஆனால், அதற்கு நித்திய ஜீவன் இல்லை. எனவே பாருங்கள், போதிப்பதற்கு அநேக காரியங்கள் உண்டு. அவைகளைப் பிறகு பார்ப்போம். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. 131. நம்முடைய சகோதரி அங்கே செல்லும் போது நாம் அருமையான பழைய பாடலை பாடுவோம். அது இந்த சகோதரி தான் என்று நான் நம்புகிறேன். சகோ. ரோஸில்லா, அவள் உன் தாயார் தானே? (சகோதரி ரோஸில்லா கிரிப்பின் ''ஆம்'' என்கிறார் - ஆசி) கர்த்தர் உங்கள் இருதயத்தை ஆசீர்வதிப்பாராக. சகோதரி உங்களை காண்பதில் மிக்க மகிழ்ச்சி. அது மிகவும் அருமையானது. ரோஸில்லா கிரீப்பின், நம்மிடையே இருக்கின்ற அருமையான சிநேகிதர்களில் அவர்களும் ஒருவர். அவள் ஒரு குடிப்பழக்கம் உள்ள வாலிப சகோதரி. உங்களில் அநேகருக்கு அவள் ஒரு அன்னியராயிருக்கிறாள். ரோஸில்லா நான் இதை கூறுவதை பொருட்படுத்தாதே. இந்தியானாவில் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது.. அவள் மேடைக்கு வந்தாள். நாம் பார்த்த மோசமானவர்களில் அவளும் ஒருவள். அவள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாய் இருந்தாள். சிகாகோவிலுள்ள பிரசித்தி பெற்ற நான்கு டாக்டர்கள் அவளை பரிசோதித்து பார்த்து விட்டு, அவளுக்கு அதிகமாக குடிப்பழக்கம் உள்ளதால் அவளை குணப்படுத்த இயலாது என்று அவளை கைவிட்டனர். ஆனால் ஒரு முறை அவள் கூட்டத்திற்கு வந்திருந்த போது, பரிசுத்த ஆவியானவர், அவளை அவளுடைய சிக்கலிலிருந்து விடுவித்து, அங்கேயே அவளுக்கு சொன்னார். அது அப்பொழுதே முடிந்தது. இப்பொழுது அவளைப் பாருங்கள். அவளுக்கு முப்பது வயதிருக்கலாம் என்று யூகிக்கிறேன். அவள் 18 வயதில் அந்தக் கட்டத்தைக் கடந்து, அழகான, அருமையான வாலிப சகோதரி. அதன் பிறகு அவள் எந்த மதுபானத்தையும் தொடவே இல்லை. அதற்கான வாஞ்சையும் இல்லாமல், கிறிஸ்துவுக்காக ஜீவித்து, தேவனுடைய மகிமையை, எல்லாவிடங்களிலும், தெருக்கள் உள்ள பாவிகளிடமும், விழுந்து போனவர்களிடமும் மற்றும் அநேகரிடமும், சிகாகோ முழுவதும் கர்த்தருக்காக ஏதோ ஒன்று செய்து கொண்டு இருக்கிறாள். அவள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறாள். அவளுடைய தாயாரும் அதைப் போல செய்ய இன்றிரவு வந்திருக்கிறாள். தேவன் அவளை சுகப்படுத்த கூடுமானால், இயேசு அவளை சுகப்படுத்த கூடுமானால்... 132. நீங்கள் வார்த்தையினாலோ, கிரியையினாலோ எதைச் செய்தாலும் அதையெல்லாம்..... (சபையார், ''இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால்'' என்கின்றனர் - ஆசி). அப்படித்தான் வேதாகமம் கூறுகிறது. அது சரி. நாம் இப்பொழுது ஞான ஸ்நான ஆராதனைக்கு செல்லப் போகிறேன். நாங்கள் ஞானஸ்நான ஆராதனையை ஆயத்தப்படுத்த சில நிமிடங்கள் இங்குள்ள விளக்குகளை அணைக்கப் போகிறோம். அதன் பிறகு கர்த்தரிடத்தில் நமக்கு நல்ல நேரம் உண்டாகும் என்று எதிர்பார்க்கிறோம். சகோ.நெவில் இன்றிரவு நீங்கள் ஞான ஸ்நான ஆராதனையை நடத்தப் போகிறீர்கள்-? அது சரி. அதற்காக நீங்கள் ஆயத்தப்படுங்கள். நான் ஆரம்பிக்கிறேன். நாம் ஆராதனையின் அடுத்த பாகத்திற்கு செல்வதற்காக நான் இப்பொழுது பாடல்கள் மற்றும் காரியங்களை நடத்துகிறேன். (சகோ.நெவில் ''டாக்'' அங்கே பின்னால் ஏதாவது ஆடைகள் இருக்கிறதா என்கிறார் - ஆசி) ஞானஸ்நான ஆடைகள் சகோ.டாக். சீக்கிரம், அது சரி. நாம் யாவரும் அந்த நல்ல பழைய பாடலை... (சகோ.பிரான்ஹாம் சபையார் பாடுவதை வழிநடத்த, சகோ.நெவில் அந்த சகோதரிக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறார் - ஆசி). (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி.) நாம் வெளியே கலைந்து செல்லும் போது நாம் என்ன செய்ய வேண்டும், இயேசுவின் நாமத்திற்குப் பணிந்து, அவருடைய பாதங்களில் சாஷ்டாங்களாய் விழுந்து. நமது பயணம் முடிவு பெறும் போது, பரலோகத்தில் அவரை ராஜாதி ராஜாவாக முடி சூட்டுவோம். அது சரி நாம் யாவரும் எழுந்து நிற்போம். இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல், துயரும் துக்கமும் நிறைந்த பிள்ளையே, அது உனக்கு மகிழ்ச்சியும் ஆறுதலும் அளிக்கும். நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்பொழுது கூறுகிறேன். நீங்கள் திரும்பி உங்கள் அருகில் உள்ளவர் இடம், ''சகோதரனே, நீ எப்படி இருக்கிறாய். உன்னோடு இணைக்கப்பட்டு இருப்பதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்'' என்று கூறுங்கள். விலையுயர்ந்த நாமம், ஓ, என்ன இனிமை, பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம். விலையுயர்ந்த நாமம், விலையுயர்ந்த நாமம், ஓ... *******